பானிப்பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பானிப்பட்
—  நகரம்  —
பானிப்பட்
இருப்பிடம்: பானிப்பட்
, தில்லி
அமைவிடம் 29°23′N 76°58′E / 29.39°N 76.97°E / 29.39; 76.97ஆள்கூற்று : 29°23′N 76°58′E / 29.39°N 76.97°E / 29.39; 76.97
நாடு  இந்தியா
மாநிலம் அரியானா
மாவட்டம் பானிப்பட்
ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி
முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்
மக்கள் தொகை 261 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


220 மீற்றர்கள் (720 ft)

பானிப்பட் (Panipat, இந்த ஒலிக்கோப்பு பற்றி உச்சரிப்பு, இந்தி:पानीपत) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக ஒரு பழம்பெரும் நகரமாகும். இது இந்தியத் தலைநகர் டில்லியில் இருந்து 90 கிமீ தூரத்தில் உள்ளது. இது தேசிய தலைநகர் பிரதேசம் இதனை நிர்வகிக்கின்றது. இந்திய வரலாற்றில் இங்கு மூன்று போர்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு[தொகு]

மகாபாரத காலத்தில் பாண்டவர்களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம் ஆகும்.


பானிப்பட்டில் முதலாவது போர் 1526 ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம் நாள் டில்லியின் சுல்தானாக இருந்த இப்ராகிம் லோதி என்பவனுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபர் என்பவனுக்கும் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. பாபரின் பன்னிரண்டாயிரம் படையினர் இப்ராகிமின் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான படைகளுடன் போரை வென்றனர். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினான்.

பானிப்பட்டில் இரண்டாவது போர் 1556 ஆம் ஆண்டில் நவம்பர் 5 இல் அக்பரின் முகலாயத் தளபதி பாய்ராம் கான் சாய்பானி என்பவனுக்கும் ஹேமு மன்னனுக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரில் ஹேமு தோற்றான்.

மூன்றாவது போர் 1761 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மன்னன் அகமது ஷா அப்தாலிக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. அகமது ஷா இப்போரில் பெரு வெற்றி பெற்றான். ஆப்கானியர்களின் இந்த வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானிப்பட்&oldid=2020869" இருந்து மீள்விக்கப்பட்டது