உள்ளடக்கத்துக்குச் செல்

அவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட் தோவாப்,அவத், புந்தேல்கண்ட், பூர்வாஞ்சல், பகேல்கண்ட் பகுதிகள்
அவத்
अवध, اودھ
வரலாற்றுக் காலப் பகுதி
இந்தியாவில் அவத் பகுதியின் அமைவிடம்
இந்தியாவில் அவத் பகுதியின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
கோட்டங்கள்லக்னோ கோட்டம்
பைசாபாத் கோட்டம்
தேவிபடான் கோட்டம்
கான்பூர் கோட்டம்
அலகாபாத் கோட்டம்
மொழிகள்அவதி மொழி
இந்துஸ்தானி
இந்தி
பாரசீகம்
உருது
தொகுதிமுன்பு பைசாபாத்
தற்போது லக்னோ
ஏற்றம்
100 m (300 ft)
பைசாபாத் நகர கோட்டையின் நுழைவு வாயில்; தாமஸ் மற்றும் வில்லியம் டேனியலின் ஓவியம், ஆண்டு 1801

தில்லி சுல்தானகம், முகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால் அவத் அல்லது அயோத்தி (Awadh - Awadhi-Oudh), (இந்தி|अवध) (உருது:|اودھ) ஒலிப்பு), எனப் பலவாறாக அழைக்கப்பட்டதே பாரதத்தின் பண்டைய கோசல நாடாகும் நாடாகும். பொதுவாக சமசுகிருதம் - பாரசீக மொழிகள் கலந்த அவதி மொழி பேசப்பட்ட பகுதிகளை அவத் என்பர்.

அக்பர் ஆட்சிக் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியை அவத் என அழைக்கப்பட்டது.

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் ஆவணங்கள் அயோத்தியை அவத், அவுத், உத் என குறித்துள்ளது. பிரித்தானியர்கள் தற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்பகுதியை இந்திய விடுதலைக்கு முன்பு வரை ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணம் எனக் குறித்துள்ளனர்.

முகமது ஷா தலைமையிலான முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அவுத் பகுதியின் ஆளுனராக இருந்த சதாத் அலி கான் என்பவர் அயோத்திக்கு அருகில் பைசாபாத் நகரத்தை நிறுவி 1719-ஆம் ஆண்டில் அவத் பகுதியின் நவாப் ஆனார். அவரும் அவரது 12 வாரிசுகளும் அவத் பகுதியை 1719 முதல் 1858 முடிய அவுத் நவாப்புகள் என்ற பெயரில் 139 ஆண்டுகள் ஆண்டனர்.

1857 சிப்பாய் கலவரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவின் இந்திய அரசின் துணைப்படைத் திட்டத்தை ஏற்ற அயோத்தி சுல்தான்களின் தனியுரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் சுதேச சமஸ்தானம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

1858ல் இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் அறிவித்த அவகாசியிலிக் கொள்கைப்படி, வாரிசு அற்ற அவத் இராச்சியத்தை பிரித்தானிய இந்திய அரசுடன் இணைத்தனர்.

தற்கால அவத் பகுதிகள்

[தொகு]

அவத் பகுதியின் புவியியலை அடிப்படையாகக் கொண்டு, நவீனகால கால கூற்றின் படி, அவத் பகுதி என்பது தற்கால உத்தரப் பிரதேச மாவட்டங்களான அவத் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் நகர் மாவட்டம், பகராயிச் மாவட்டம், பலராம்பூர் மாவட்டம், பாராபங்கி மாவட்டம், பஸ்தி மாவட்டம், பைசாபாத் மாவட்டம், கோண்டா மாவட்டம், ஹர்தோய் மாவட்டம், லக்கிம்பூர் கேரி மாவட்டம், லக்னோ மாவட்டம், பிரத்தாப்புகர் மாவட்டம், ரேபரேலி மாவட்டம், சிராவஸ்தி மாவட்டம், சுல்தான்பூர் மாவட்டம், சித்தார்த் நகர் மாவட்டம், உன்னாவு மாவட்டம், சீதாபூர் மாவட்டம் மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான கான்பூர் மாவட்டம், பதேபூர் மாவட்டம், கௌசாம்பி மாவட்டம், அம்ரோகா மாவட்டம் மற்றும் அலகாபாத் மாவட்டம் ஆகிய 22 மாவட்டங்கள் அவத் பகுதியாகும்.

வரலாறு

[தொகு]
லக்னோ அரண்மனை கோட்டை ஓவியம்

இந்தியாவின் கோதுமை, நெல் மற்றும் கரும்புக் களஞ்சியம் எனப்படும் கங்கை ஆற்றுக்கும் யமுனை ஆற்றுக்கு இடைப்பட்ட தோப் (Doab) சமவெளியில் அவத் நாட்டின் புவியியல் பகுதி அமைந்திருந்தது. 1350-ஆம் ஆண்டு முதல் 1947 முடிய அவத் பகுதியை தில்லி சுல்தானகம், மொகலாயர்கள், அவத் நவாப்புகள், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள், பிரித்தானிய அரசு ஆண்டனர்.

1394 முதல் 1478 வரை அவத் பகுதி ஜவுன்பூர் சுல்தானகத்தின் கட்டுக்குள் இருந்தது. 1555-இல் உமாயூன் காலத்தில் அவத் பகுதி மொகலாயப் பேரரசில் இணைக்கப்பட்டு, அவத் அப்பகுதிக்கு ஒரு ஆளுனரும் நியமிக்கப்பட்டார்.[1]

அவத் பகுதியின் ஆளுனராக நியமிக்கப்பட்ட பாரசீக நாட்டைச் சேர்ந்த சியா முஸ்லீமான சதாத் அலி கான், முகலாயப் பேரரசு வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்த போது, 1719-இல் அவுத் பகுதியின் நவாப் (மன்னர்) ஆக பட்டம் சூட்டிக் கொண்டு, அவரும் அவரது வாரிசுகளுமாக 13 நவாப்புகள், 1719 முதல் 1948 முடிய 139 ஆண்டுகள் அவத் பகுதியை ஆண்டனர்.[2]

பிரித்தானிய ஆட்சியில்

[தொகு]

சிப்பாய்1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின் அவத் நவாப்புகள் பிரித்தானிய இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தனியுரிமையின்றி சுதேச சமஸ்தான மன்னர்களாக 1858 வரை ஆண்டனர். பின்னர் அவகாசியிலிக் கொள்கையின் படி, அவத் இராச்சியம் பிரித்தானிய இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்னர்

[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னர் அயோத்தி நவாப்புகளின் கீழ் இருந்த அவத் பகுதி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • "Oudh". The Imperial Gazetteer of India. 1909. p. 277.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவத்&oldid=3869216" இலிருந்து மீள்விக்கப்பட்டது