உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் விடுதலை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய விடுதலை நாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுதந்திர தினம்

Independence Day

स्वतंत्रता दिवस
இந்திய தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது
கடைபிடிப்போர் இந்தியா
வகைதேசிய விடுமுறை
கொண்டாட்டங்கள்கொடி ஏற்றம், பரேடுகள், தேசிய கீதம், இந்தியப் பிரதமர் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோரின் பேச்சு
நாள்15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
நிகழ்வுஆண்டுதோறும்
கூடலூர் என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.
இந்திய சுதந்திர தினம்

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.[1]

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.[2][3]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. PTI (15 August 2013). "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time". தி இந்து. Retrieved 30 August 2013.
  2. "Terror strike feared in Delhi ahead of Independence Day : MM-National, News – India Today". Indiatoday.intoday.in. 5 August 2015. பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.
  3. "69th Independence Day: Security Tightened at Red Fort as Terror Threat Looms Large on PM Modi". Ibtimes.co.in. 28 February 2015. பார்க்கப்பட்ட நாள் 13 August 2015.

வெளியிணைப்புகள்

[தொகு]