இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1909 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் இந்தியாவும் சுதேச அரசுகளும்
1947 ஆம் ஆண்டின் சுதந்திரத்துக்குப் பிறகான உடனடிச் சூழல்

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இந்தியா இரண்டு வகையான பிரேதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் முதலாவது "பிரித்தானியாவின் இந்தியா" என்பதாகும். அது லண்டனில் இயங்கி வந்த இந்திய அலுவலகம் மற்றும் இந்தியாவின் கவர்னரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இரண்டாவது "மன்னராட்சி நடக்கும் மாநிலங்கள்" ஆகும். இதில் மன்னர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் முடி சூடி நிலவுரிமை செலுத்தி வந்தனர். இதில் அப்பிரதேசங்கள் அவர்களது வாரிசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்யப்பட்டன. மேலும் பிரான்சு மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டணி ஆட்சி நடந்த சில காலனிப் பகுதிகளும் இருந்தன. இந்தியாவில் அப்போது இந்தப் பிரதேசங்களில் அரசியல் ஒருங்கிணைப்பே இந்திய தேசியக் காங்கிரஸின் குறிக்கோளாக இருந்தது, அடுத்த பத்தாண்டுகளுள் இந்திய அரசாங்கத்தின் முக்கிய செயல்பாடாகவும் அதுவே இருந்துவந்தது. பல்வேறு காரணிகளின் வாயிலாக வல்லபாய் பட்டேலும் (Vallabhbhai Patel), வி.பி. மேனனும் இணைந்து கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மன்னராட்சிப் பிரதேசங்களை இந்தியாவுடன் இணைப்பதற்கு அப்பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்களை சம்மதிக்க வைத்தனர். இந்த இணைப்பில் பாதுகாப்பு கருதி அவர்கள் படிப்படியாக இதனை செயல்படுத்தினர். அந்தப் பகுதிகளில் மத்திய அரசாங்கத்தின் ஆளுமையினை அவர்கள் விரிவுபடுத்தியிருந்தனர். மேலும் 1956 ஆம் ஆண்டு வரை அவர்களது நிர்வாகத்தினை அப்பகுதிகளில் மேற்கொண்டனர். மேலும் முன்னர் பிரித்தானியாவின் இந்தியா(/1)வின் கீழ் இருந்த பிரதேசங்கள் மற்றும் மன்னராட்சி நடைபெற்ற மாநிலங்களில் சில பகுதிகளுக்கு இடையில் சிற்சில வேறுபாடுகள் இருந்தன. அதே சமயத்தில் அரசியல் செயல்திறம் மற்றும் இராணுவம் ஆகியவற்றின் மூலம் இந்திய அரசாங்கம் நடைமுறைக்கேற்றவாறு மற்றும் சட்டப்படி மீதமுள்ள கூட்டாட்சிப் பிரதேசங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி அவற்றையும் இந்தியாவுடன் இணைத்தது.

இந்த செயல்பாட்டின் மூலமாக மன்னராட்சி நடைபெற்ற பெரும்பாலான பகுதிகளை வெற்றிகரமாக இந்தியாவுடன் ஒருங்கிணைத்த போதும் சில மாநிலங்களில் இதனை வெற்றிகரமாக நிகழ்த்த இயலவில்லை. இதில் குறிப்பிடத்தக்கவை காஷ்மீர் மற்றும் ஐதராபாத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மன்னராட்சி பகுதிகள் ஆகும். இதில் காஷ்மீரின் இணைப்பு காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பூசல் உருவாகியது. ஐதராபாத்தில் அப்பகுதியை ஆண்ட மன்னர் சுதந்திரமாக நீடிக்க முடிவு செய்தார். மேலும் திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பிரிவினைவாத இயக்கங்கள் உருவாகின.

பிரித்தானியாவின் இந்தியாவில் மன்னராட்சி மாநிலங்கள்[தொகு]

நவீன இந்தியாவின் வரலாறு
குறித்த தொடரின் அங்கம்
விடுதலைக்கு முன்பு
பிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947)
இந்திய விடுதலை இயக்கம் (1857–1947)
இந்தியப் பிரிவினை (1947)
விடுதலைக்குப் பின்பு
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49)
மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)
கூட்டுசேரா இயக்கம் (1956– )
பசுமைப் புரட்சி (1970கள்)
இந்தியப் பாக்கித்தான் போர்
நெருக்கடி நிலை (1975–77)
இந்தியாவின் பொருளியல் தாராளமயமாக்கல்
2020களில் இந்தியா
இவற்றையும் காண்க
இந்திய வரலாறு
தெற்காசிய வரலாறு

இந்தியாவில் பிரிட்டிஷ் விரிவாக்கத்தின் ஆரம்ப கால வரலாற்றில் ஏற்கனவே இருந்த மன்னராட்சி மாநிலங்ளை நோக்கிய இரண்டு அணுகுமுறைகள் இருந்தன.[1] அதில் முதலாவது அணுகுமுறை இணைத்துக்கொள்ளும் கொள்கை ஆகும். இதன் மூலமாக இந்தியாவின் மன்னராட்சி மாநிலங்களை வலுக்கட்டாயமாக கைப்பற்றி அவர்களது அதிகார எல்லையை விரிவுபடுத்தினர். இதன் மூலம் அவர்களது இந்திய சாம்ராஜ்யத்தினை உருவாக்கிக் கொண்டனர். இரண்டாவது அணுகுமுறை மறைத்து ஆளும் கொள்கை ஆகும். இதன் மூலம் ஆங்கிலேய அரசு மன்னராட்சி மாநிலங்கள் மீது நிலவுரிமை மற்றும் மேலதிகாரம் செலுத்தியது. ஆனால் இதில் மன்னர்களுக்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டன.[2] 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேய அரசாங்கம் இந்த இணைப்புக் கொள்கையை மேற்கொள்ள முனைந்தது. ஆனால் 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கிளர்ச்சியானது, இணைக்கப்பட்ட பகுதிகளை சேர்த்துக்கொள்ளுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் இருந்த சிரமங்களையும் மன்னராட்சிப் பகுதிகளின் ஆதரவின் பயனையும் விளக்கி இந்த அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்தியது.[3] 1858 ஆம் ஆண்டில் இணைப்புக் கொள்கை முறையாகக் கைவிடப்பட்டது. அதன் பிறகு ஆங்கிலேயர்களுக்கும் சுதேச அரசுகளுக்கும் இடையிலான உறவு மறைத்தாளும் கொள்கையின் அடிப்படையில் இருந்தது. இம்முறையில் ஆங்கிலேய அரசானது சுதேசப் பகுதிகளின் மீது ஏகாதிபத்தியத்தைச் செலுத்தி ஆங்கிலேய முடியாட்சியை மேற்கொண்டு மேலதிகாரம் செய்து வந்தது. ஆனால் அதே நேரத்தில் அவர்களை நட்புணர்வுடன் மதித்து பாதுகாத்தது.[4] ஆங்கிலேயருக்கும் ஒவ்வொரு சுதேசி அரசுக்கும் இடையிலான உறவானது தனித்த ஒப்பந்தத்தின் மூலமாக முறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அவை பரவலாக சில சுதேசி அரசுகளுக்கு குறிப்பிடத்தக்க தன்னாட்சி, சில சுதேசி அரசுகளின் உள் விவகாரங்களில் குறிப்பிட்ட அளவில் தலையிடுதல் மற்றும் சில சுதேசி அரசுப் பகுதிகளில் சிறு அளவிலான தன்னாட்சியுடன் சில ஏக்கர்கள் அளவிலான நிலத்திற்கு உரிமை கொண்டாடுதல் போன்ற விதங்களில் மாறுபட்டிருந்தன.[5]

20 ஆம் நூற்றாண்டு சமயத்தில் ஆங்கிலேய அரசு சுதேசி அரசுகளை பிரித்தானியாவின் இந்தியாவுடன் நெருக்கமாக இணைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொணடது. அதில் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக 1921 ஆம் ஆண்டில் இளவரசர்கள் குழுவை உருவாக்கியது[6], 1936 ஆம் ஆண்டின் மத்தியில் அதிகார வரம்பில் இருந்து சிறிய பகுதிகளின் மேற்பார்வைக்கான பொறுப்புக்களில் மாற்றம் செய்தது மற்றும் அரசியல் தூதர்களை அகற்றிவிட்டு இந்திய அரசாங்கத்திற்கும் பெரிய சுதேசி அரசுகளுக்கும் இடையே நேரடித் தொடர்புகளை உருவாக்கியது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.[7] அதில் 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின் கூட்டாட்சித் திட்டமே கருத்தில் கொள்ளத்தக்கதாகும். அதன் படி சுதேசி அரசுகள் மற்றும் ஆங்கிலேய இந்தியா இரண்டும் ஒருங்கிணைந்த அரசாங்கத்தின் கீழ் செயல்படும்.[8] இந்தத் திட்டமானது வெற்றியடையும் தருணத்தை எட்டியிருந்தது. ஆனால் 1939 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் திடீரென ஏற்பட்டதன் விளைவாக இத்திட்டம் கைவிடப்பட்டது.[9] அதன் விளைவாக 1940களில் சுதேச அரசுகளுக்கும், முடியாட்சிக்கும் இடையிலான உறவானது மேலதிகாரக் கொள்கை மற்றும் அவர்களுக்கு இடையே இருந்த பல்வேறு ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு நீடித்திருந்தது.[10]

அந்த மேலதிகாரமோ அல்லது அந்த ஏற்பாடுகளோ இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நீடிக்கவில்லை. ஆங்கிலேயர்கள் அவர்களின் முடியாட்சி மற்றும் சுதேச அரசுகளுக்கு இடையில் நேரடியாக அதனை நிறுவியிருந்த காரணத்தால் அவர்கள் அதனை சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ள முடியாது எனக் கருதினர்.[11] அதே நேரத்தில் சுதேச அரசுகள் அவர்களின் பகுதிகளின் பாதுகாப்புக்காக இந்தியாவில் இராணுவ வீரர்களை அமைத்தல் போன்ற சில உதவிகளை ஆங்கிலேயர்களிடம் கேட்டனர். ஆனால் ஆங்கிலேய அரசு அதனைத் தொடர்வதற்குத் தயாராக இல்லை. அதனால் ஆங்கிலேய அரசாங்கம் மேலதிகாரம் மற்றும் அதனுடன் இணைந்து அவர்களுக்கும் சுதேச அரசுகளுக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்தது.[12]

ஒருங்கிணைப்புக்கான காரணங்கள்[தொகு]

இந்த பரோடாவின் நிலப்படத்தில் 200 க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளின் இடமாக இருந்த குஜராத்தின் செளராஷ்டிரா மற்றும் கத்தியவார் பகுதிகள் காணப்படுகின்றன. இதில் பல தொடர்ச்சியல்லாத நிலப்பரப்புகள் ஆகும்.

கொள்கையளவில், மேலதிகாரம் செய்வதை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலமாக அவர்கள் முடியாட்சியின் மூலமாக சுதேச அரசுகள் பெற்ற அனைத்து உரிமைகளையும் திரும்ப அவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு "முழுமையான சுதந்திரத்தின் அடிப்படையில்" புதிதாக பிரிக்கப்பட்ட இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேருவதற்கான உரிமை கிடைத்தது.[13] கிரிப்ஸ் திட்டம் வழங்கிய சலுகை போன்று, ஆற்றலை மாற்றுவதற்கான ஆங்கிலேய அரசின் ஆரம்ப காலத் திட்டங்களில், சில சுதேசி அரசுகள் சுதந்திர இந்தியாவுடன் இணையாமல் தனித்து நிற்கக் கோரலாம் என உணரப்பட்டது.[14] ஆனால் இதனை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. சுதேச அரசுகளின் சுயசார்புத் தன்மையை இந்திய வரலாற்றின் மறுப்பாகக் கருதியது. மேலும் மீண்டும் இத்திட்டம் இந்தியாவை "சிறு சிறு பகுதிகளாகப் பிரிப்பதாகக் கருதியது.[15] காங்கிரஸ் அவர்களது நோக்கமான ஆங்கிலேய அரசிடம் இருந்து சுதந்திரம் பெறுவதிலேயே கவனம் செலுத்தியதால் மற்றும் அதற்கு அவர்களிடம் குறைவாக இருந்த அடிப்படை வசதிகள் காரணமாக சுதேச அரசுகளிடம் குறைவாகவே செயலாற்ற முடிந்தது.[16] மேலும் குறிப்பாக மகாத்மா காந்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்[17] இந்தியர்கள் தாங்களே ஆளும் திறன் மிக்கவர்களாக மிகவும் முற்போக்கானவர்களாக இருக்கிறார்கள் என சுதேச அரசுகளின் மீது பரிவு கொண்டவர்களாக இருந்தனர்.[18] 1930களில் 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தில் இடம்பெற்ற கூட்டரசுத் திட்டம் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற சமதர்மவாத காங்கிரஸ் தலைவர்களின் எழுச்சி ஆகியவற்றின் விளைவாக இது மாற்றமடைந்தது. அதற்குப் பிறகு காங்கிரஸானது சுதேச அரசுப் பகுதிகளில் வெகுஜன அரசியல் மற்றும் தொழிலாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது.[19] 1939 ஆம் ஆண்டில் காங்கிரஸின் மனப்பாங்கானது பிரித்தானியாவின் இந்தியாவின் அதிகார வரம்பின் கீழ் இருந்த அதே நிபந்தனைகள் மற்றும் அதே தன்னாட்சியுடன் சுதேச அரசுகள் சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பதாய் இருந்தது. மேலும் இதில் அப்பகுதிகளில் பொறுப்பான அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நினைத்தது.[20] அதன் விளைவாக மவுண்ட்பேட்டனின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைக்கும் கட்டாயம் ஏற்பட்டது.[21]

குறிப்பாக இந்தியாவில் ஆங்கிலேயருக்கான கடைசி அரசப் பிரதிநிதியாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு (Lord Mountbatten) போன்ற சில ஆங்கிலேயத் தலைவர்களும் கூட சுதந்திர இந்தியாவுக்கும் சுதேச அரசுகளுக்கும் இடையே இணைப்பைத் துண்டிப்பதை அசெளகரியாமாகக் கருதினர். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகள் சமயத்தில் வியாபாரம், வர்த்தகம் மற்றும் தகவல் தொடர்புகள் போன்றவை முன்னேறியதால் சுதேச அரசுகளுக்கும் பிரித்தானியாவின் இந்தியாவிற்குமிடையே பெரிய பல வித தொடர்புகள் இருந்தன.[22] ரயில் பாதைகள், சுங்கம், நீர்ப்பாசனம், துறைமுகங்களைப் பயன்படுத்துதல் போன்றவை சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் இது போன்ற மற்ற ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் அவை இந்தியாவின் பொருளாதாரத்திற்கு தீவிர அச்சுறுத்தலாக இருந்தன. மவுண்ட்பேட்டனுக்கு வி.பி.மேனன் (V. P. Menon) போன்ற இந்தியத் தலைவர்களும் தங்களின் வாதங்களின் மூலமாகவும் அச்சுறுத்தல் விடுத்தனர். அவர்கள் சுதேச அரசுப் பகுதிகளை சுதந்திர இந்தியாவுடன் இணைப்பதன் மூலமாக பிரிவினையின் காயத்தை குறிப்பிட்ட அளவில் மட்டுப்படுத்தலாம் என வாதிட்டனர். இதன் விளைவாக மவுண்ட்பேட்டன் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தனிப்பட்ட முறையில் சுதேச அரசுகளை இந்தியாவுடன் இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் முன்மொழிந்தபடி செயலாற்றினார்.[23]

ஒருங்கிணைப்பை ஏற்றுக்கொள்ளுதல்[தொகு]

அரசர்களின் நிலை[தொகு]

சுதேச அரசுப் பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்கள் அவர்களது பகுதிகளை சுதந்திர இந்தியாவுடன் இணைப்பதில் ஒருமித்த ஆர்வத்துடன் இல்லை. கொச்சின், பிகானர் மற்றும் ஜவஹர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த அரசர்கள் போன்ற சிலர் கொள்கை மற்றும் நாட்டுப்பற்று சார்ந்த அளவில் இந்தியாவுடன் இணைவதற்கு இசைந்தனர்.[24] ஆனால் மற்றவர்கள் சுதந்திரமாக நீடிப்பதற்காக இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர்வதற்கு அல்லது தனிப்பட முறையில் அவர்கள் சொந்தமாக ஒன்றியத்தை அமைப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருப்பதாகப் பிடிவாதமாக இருந்தனர்.[25] போபால், திருவாங்கூர் மற்றும் ஜதராபாத் பகுதிகளை ஆண்ட அரசர்கள் இரண்டு ஆட்சிப் பகுதிகளிலும் இணைவதற்கு அவர்களுக்கு விருப்பம் இல்லை என அறிவித்தனர்.[26] ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகப் பிரதிநிதிகளை நியமிக்க ஜதராபாத் முனைந்தது. மேலும் கடல் பகுதிகளை அணுகும் உரிமைகளுக்காக கோவாவை குத்தகைக்கு விட அல்லது விற்பனை செய்ய போர்ச்சுகீசுடன் ஒப்பந்தப் பேச்சு வார்த்தை மேற்கொண்டது.[27] திருவாங்கூர் தனது அங்கீகாரத்தைக் கேட்கும் போது அதன் தோரியம் கையிருப்பு எந்தளவுக்கு மேற்கத்திய நாடுகளுக்கு போர் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை குறிப்பிட்டுக் காட்டியது.[28] சில சுதேச அரசுகள் அவர்களை இந்தியா முழுவதும் கூட்டிணைப்பு செய்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்து கூடுதலாக மூன்றாவதாக ஒரு பகுதியை உருவாக்குவதற்கு முன்மொழிந்தனர்.[29] காங்கிரஸ், ஆட்சியாளர்களின் மீது தந்த நெருக்கடியை எதிர்க்கும் வகையில் தரும் நடவடிக்கையாக போபால் சுதேச அரசுகள் மற்றும் முஸ்லீம் கூட்டமைப்பு ஆகியோரிடையே கூட்டினை உருவாக்குவதற்கு முயற்சித்தது.[30]

இந்த ஆரம்ப கால எதிர்ப்புகள் வீழ்ச்சியடையவும் கிட்டத்தட்ட அனைத்து சுதேச அரசுகளும் இந்தியாவுடன் இணைவதற்கு இசைவதற்கும் பல காரணிகள் காரணமாக இருந்தன. அதில் முக்கியமான காரணி அரசர்களிடையே ஒற்றுமை இல்லாமல் இருந்ததாகும். சிறிய சுதேசப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களது விருப்பங்களுக்கு மதிப்பிருக்காது என பெரிய சுதேசப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இருந்தனர். மேலும் பெரும்பாலான இந்து மத ஆட்சியாளர்கள் முஸ்லிம் அரசர்களை நம்பாமல் இருந்தனர். குறிப்பாக போபாலின் நவாப்பான அமீதுல்லா கான் போன்றவர்களை அவர்கள் பாகிஸ்தானின் முகவர்களாகக் கருதினர்.[31] மற்றவர்கள் இந்த ஒருங்கிணைப்பு தவிர்க்க முடியாததாகவும், காங்கிரஸுடன் பாலமமைப்பதாகவும் கருதினர். அதில் இருந்து இறுதி உடன்படிக்கைக்கு வடிவம் கொடுப்பதில் வெற்றி கிடைக்க ஆரம்பித்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் ஐக்கியமான முன்னணியை உருவாக்க முடியாமையின் விளைவாக அல்லது பொதுவான நிலையை ஏற்றுக் கொள்ள முடியாததால் காங்கிரசுடன் ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் பேரம் பேசும் ஆற்றலை கணிசமான அளவில் இழந்தனர்.[32] சட்ட சபையில் அங்கம் வகிக்க வேண்டாம் என முஸ்லீம் கூட்டமைப்பினர் முடிவு எடுத்திருந்ததும் கூட காங்கிரசுக்கு எதிராய் கூட்டணி அமைப்பதற்கான சுதேச அரசுகளின் திட்டத்திற்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்தது.[33] மேலும் 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதியில் பரோடா, பிகானர், கொச்சின், குவாலியர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், பாட்டியாலா மற்றும் ரேவா ஆகியவை சட்ட சபையில் அவர்களுக்கான இடங்களைப் பெற்ற போது சட்ட சபையைப் புறக்கணிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.[34]

பல அரசர்கள் இந்திய ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலான மனவுணர்ச்சியைக் கொண்டிருந்தனர். அதாவது சுதந்திரக்கான அவர்களது ஆதரவு அவர்களது திட்டங்களுக்கு சிறிதளவு ஆதரவாக இருக்கும் எனக் கருதினர்.[35] எடுத்துக்காட்டாக திருவாங்கூர் அரசர், அவரது திவான் சர் சி.பி. ராமசாமி ஐயரை (Sir C. P. Ramaswamy Aiyar) படுகொலை செய்ய முயற்சிகள் நடைபெற்றதற்குப் பிறகு தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அவரது திட்டங்களை முழுவதுமாகக் கைவிட்டார்.[36] சில சுதேசப் பகுதிகளில் முதல் அமைச்சர்கள் அல்லது திவான்கள் சுதேசப் பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்கு தங்கள் அரசர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்கு வகித்தனர்.[37] பிரித்தானியாவின் இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபு மற்றும் சுதேச அரசுகளுடன் தொடர்பு கொள்வதற்கு பொறுப்பேற்றிருந்த இந்திய அரசாங்கத்தின் உள் துறையில் முறையே அரசியல் மற்றும் நிர்வாகத் தலைவர்களாக இருந்த வல்லபாய் பட்டேல் மற்றும் வி.பி. மேனன் ஆகியோர் மேற்கொண்ட அரும் முயற்சிகள் சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணிகளாக அமைந்தன.

மவுண்ட்பேட்டனின் பங்களிப்பு[தொகு]

ஆட்சி மாற்றத்திற்காக காங்கிரசுடன் ஒப்பந்த உடன்படிக்கையிலொ ஒரு முடிவை எட்டுவதற்கு, இந்தியாவுடன் சுதேச அரசுகளை இணைப்பது மிகவும் முக்கியம் என மவுண்ட் பேட்டன் நம்பினார்.[38] பிரிட்டிஷ் அரசரின் உறவினரான அவரை பெரும்பாலான சுதேச அரசர்கள் நம்பினர். குறிப்பாக போபால் நவாப்பான அமீதுல்லா கான்(Hamidullah Khan) உள்பட பல அரசர்களுடன் தனிப்பட்ட முறையில் நண்பராக இருந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவே, ஒப்புக்கொள்ளக்கூடிய எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கி சுதந்திர இந்தியா உருவாக உறுதியளிக்கும் திறன் பெற்றவராக இருப்பார் எனவும் சுதேச அரசர்கள் நம்பினர். ஏனெனில் ஜவஹர்லால் நேருவும் (Jawaharlal Nehru), பட்டேலும் இவரிடம் குடியேற்ற இந்தியாவின் முதல் ஆளுநராக இருக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தனர்.[39]

மவுண்ட்பேட்டன் தான் கொண்டிருந்த செல்வாக்கை, சுதேச அரசர்கள் இந்தியாவுடன் இணைவதற்கு அழுத்தம் கொடுக்க பயன்படுத்திக் கொண்டார். ஆங்கிலேய அரசாங்கம் எந்த சுதேச அரசுக்கும் குடியேற்றத் தகுதியை வழங்காது மற்றும் அவர்களை பிரிட்டிஷ் காமன்வெல்த்திற்குள்ளும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் அறிவித்தார். அதாவது சுதேச அரசுகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணையாவிட்டால் பிரிட்டனுடனான அவர்களின் அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என்றார்.[40] மேலும் அவர் இந்தியத் துணைக்கண்டம் ஒரு பொருளாதார பகுதியாகும். அதன் தொடர்புகள் அறுந்தால் சுதேச அரசுகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்றார்.[41] அவர்கள் இனம் சார்ந்த வன்முறை மற்றும் பொதுவுடைமை இயக்கங்கள் போன்றவற்றின் எழுச்சி போன்ற அச்சுறுத்தல்களை ஒழுங்குபடுத்திப் பராமரிப்பதில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.[36]

மவுண்ட்பேட்டன், தான் 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைவராக சிறப்பாக சேவை புரிவார் என்பதால், அரசர்களின் நம்பிக்கையானவராக தான் இருப்பார் என வலியுறுத்தினார். இந்த இணைப்பில் விருப்பம் இல்லாமல் இருந்த போபால் நவாப் போன்ற சுதேச அரசர்களுடன் தனிப்பட்ட முறையில் அவர் பேசினார். மவுண்ட்பேட்டன் அவரது போபால் நவாப்பிடம் இருந்து அவர் போபாலை இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க சம்மதித்ததற்கான அந்தரங்கக் கடிதத்தில் கையெழுத்து வாங்கி அதனை பத்திரப்படுத்தினார். ஆனால் நவாப் அவரது எண்ணத்தை கடைசி வரை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் அந்த கடிதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி உள்துறையில் சமர்ப்பிப்பார். நவாப் அதற்கு ஒப்புக்கொண்டு உடன்படிக்கையை மீறாமல் இருந்தார்.[42]

அந்த நேரத்தில் பல்வேறு அரசர்கள் தாங்கள் நண்பர்களாக நினைத்திருந்த ஆங்கிலேயரால் வஞ்சகம் செய்யப்பட்டதாக புகார் கூறினர்.[43] மேலும் மவுண்ட்பேட்டனின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரசியல் துறை தலைமைப் பொறுப்பில் இருந்த சர் கோன்ராட் கோர்ஃபீல்டு (Sir Conrad Corfield) அவரது பதவியை ராஜினாமா செய்தார்.[36] மவுண்ட்பேட்டனின் கொள்கைகளை எதிரணியினான பழமைவாதக் கட்சியும் கடுமையாக விமர்சித்தது.[44] இந்திய அரசாங்கம் செயல்படுத்திய முறையை ஆஸ்திரியா படையெடுப்புக்கு முன்பு அடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler) செயல்படுத்திய முறையுடன் வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) ஒப்பிட்டார்.[45] எனினும் லும்பி (Lumby) மற்றும் மூரெ (Moore) போன்ற நவீன வரலாற்றாசியர்கள், சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைவதற்கு ஏற்றுக்கொள்ள வைத்ததில் மவுண்ட்பேட்டன் மிகவும் இன்றியமையாத பங்கு வகித்திருப்பதாகக் கூறினர்.[46]

நெருக்கடியும் செயல்திறமும்[தொகு]

உள்துறை அமைச்சராக வல்லபாய் பட்டேல். பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளையும் சுதேச அரசுகளையும் இந்தியாவுடன் இணைப்பதற்கு இவர் பொறுப்பேற்றிருந்தார்.

காங்கிரசின் கொள்கையும், குறிப்பாக உள் துறையைச் சேர்ந்த இரண்டு முக்கிய நபர்களான சர்தார் வல்லபாய் பட்டேல், வி.பி. மேனன் ஆகியோரின் கொள்கையுமே இந்தியாவுடன் இணைவதற்கு சுதேச அரசர்கள் முடிவெடுப்பதற்கு மிகவும் முக்கிய காரணியாக இருந்தன. சுதேச அரசுகள் தனியுரிமை கொண்ட பகுதிகளாக அல்லாமல் மேலதிகாரத்தின் முடிவில் சுதந்திரமான நிலையில் இல்லாமல் சார்ந்திருக்க வேண்டும் என காங்கிரஸ் கருதியது. ஆகவே சுதேச அரசுகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்திருக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் அறிவித்தது.[47] 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், சுதந்திர இந்தியாவின் இராணுவத்துக்கு இணையான இராணுவத்தை எந்த சுதேச அரசுகளும் கொண்டிருக்க முடியாது என்பதை நேரு கவனித்தார்.[36] 1947 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நேரு அரசர்களின் புனித உரிமைகளை சுதந்திர இந்தியாவினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.[48] 1947 ஆம் ஆண்டு மே மாதத்தில், அவர் இந்திய சட்டசபையில் அங்கம் வகிக்க மறுக்கும் சுதேச அரசுகள் எதிரி நாடாகக் கருதப்படும் என அறிவித்தார்.[36] சி. ராஜகோபாலாச்சாரி (C. Rajagopalachari) போன்ற மற்ற காங்கிரஸ் தலைவர்கள், மேலதிகாரம் என்பது ஒப்பந்தந்தின் அடிப்படையில் இல்லாமல் உண்மையின் அடிப்படையில் இருந்ததால் அது இதற்கு முன்பு ஆண்ட ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திர இந்திய அரசாங்கத்திற்கு கண்டிப்பாக வரும் என வாதிட்டனர்.[49]

சுதேச அரசர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட பொறுப்பேற்றிருந்த பட்டேலும் மேனனும் நேருவைக் காட்டிலும் மிகவும் இணக்கமான அணுகுமுறையைக் கையாண்டனர்.[50] 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதியில் பட்டேல் மூலமாக உருவாக்கப்பட்ட இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை அறிக்கையில் எந்த அச்சுறுத்தல்களும் இல்லை. மாறாக இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சுதேச அரசுகளுக்கும் சுதந்திர இந்தியாவுக்கும் இடையே உள்ள பொதுவான ஆர்வங்களை இது வலியுறுத்தியது. அது காங்கிரசின் எண்ணங்களைப் பற்றிய சுதேச அரசர்களின் ஐயத்தைப் போக்குவதாக இருந்தது. மேலும் அவர்களை அந்நியராகக் கருதி உடன்பாட்டை உருவாக்காமல் நண்பர்களைப் போல அவர்களுடன் சுதந்திர இந்தியாவில் இணைந்து அமர்ந்து சட்டங்களை உருவாக்குவதற்கு அழைப்பு விடுப்பதாக அமைந்தது.[51] உள்துறையானது சுதேச அரசுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்ற உறவுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். ஆங்கிலேய அரசாங்கத்தின் அரசியல் துறையைப் போலல்லாமல் இதில் இந்தியாவுக்கும் அதன் மாநிலங்களுக்கும் இடையில் நடைபெறும் நடவடிக்கைகள் சமமாக நடைபெறுவதற்கு ஒரு ஊடகமாகவே இது செயல்படும். இது மேலதிகாரத்தை மேற்கொள்ளும் கருவியாக இருக்காது என அவர் வலியுறுத்தினார்.[52]

சேர்வடைவு முறையாவணங்கள்[தொகு]

சுதேசப் பகுதிகளின் அரசர்களை ஈர்க்கும் விதமான உடன்பாடுகளை வடிவமைப்பதில் பட்டேலும் மேனனும் ராஜ தந்திரமான முயற்சிகளை மேற்கொண்டனர். இரண்டு முக்கிய ஆவணங்கள் உருவாக்கப்பட்டன. அதில் முதலாவது ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கை ஆகும். இது ஆங்கிலேயருக்கும் சுதேச அரசுகளுக்கும் இடையில் ஆங்கிலேயர் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளை இந்தியா பின்தொடரும் என்பதை உறுதிபடுத்துவதற்கான உடன்படிக்கை ஆகும். அதில் இரண்டாவது சேர்வடைவு முறையாவணம் ஆகும். இது சுதேச அரசுப் பகுதிகளைச் சேர்ந்த அரசர்கள் அவரது ஆட்சிப் பகுதியை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க சம்மதிப்பது மற்றும் குறிப்பிட்ட விசயங்களில் இந்தியா கட்டுப்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ள சம்மதிப்பது ஆகியவை அடங்கிய உடன்படிக்கை ஆகும்.[25] இணைக்கப்படும் சுதேசப் பகுதியைச் சார்ந்து இதில் அதன் விசயங்கள் மாறுபட்டிருந்தன. ஆங்கிலேயரின் கீழ் சுயாட்சி கொண்டிருந்த சுதேச அரசுகள், பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்புகள் ஆகிய மூன்று உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே இந்திய அரசாங்கத்திற்கு சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திட்டன. இந்த மூன்றும் இந்திய அரசிய சட்டம் 1935 இல் அட்டவணை VII இன் கீழ் பட்டியல் ஒன்றுடன் இணக்கத்துடன் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. முடியாட்சியே கணிசமான நிர்வாக ஆற்றல்களைக் கொண்டு அதிகாரம் செலுத்தி வந்த பண்ணைத் தோட்டங்கள் அல்லது தாலுக்காக்கள் அடங்கிய பகுதிகளை ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களிடம், மாறுபட்ட சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அது இந்திய அரசாங்கத்தின் அனைத்து எஞ்சிய அதிகாரங்கள் மற்றும் அதிகார எல்லைகள் ஆகியவற்றை வழங்கியது. இதற்கு இடைப்பட்ட நிலையில் இருந்த ஆட்சியாளர்கள் மூன்றாவது வகை முறையாவணத்தில் கையெழுத்திட்டனர். அதில் இருந்த விவரங்கள் அவர்கள் ஆங்கிலேயரின் கீழ் இருந்த போது கொண்டிருந்த அதிகாரங்களை ஒத்ததாக இருந்தது.[53]

சேர்வடைவு முறையாவணமானது பிற பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் செயல்படுத்துவதாக இருந்தது. இது உருவாக்கப்பட்ட சமயத்தில் அரசர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள் என உட்பிரிவு ஏழில் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிப்படையாக இந்திய அரசாங்கத்திற்கென வழங்கப்படாத அனைத்து பகுதிகளிலும் அவர்களது சுயாட்சி நீடிக்கும் என அதன் உட்பிரிவு எட்டில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.[54] இது பல்வேறு வாக்குறுதிகளை உள்ளடக்கிய பிற்சேர்க்கைகளைக் கொண்டிருந்தது. இந்தியாவுடன் இணைவதற்கு ஏற்றுக்கொண்ட சுதேச ஆட்சியாளர்கள், இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதில் இருந்து பாதுகாப்பு நிலை மற்றும் சுங்க வரியில் இருந்து விலக்கு போன்ற அவர்களது கூடுதல் பிரதேச உரிமைகளுக்கான உத்தரவாதத்தைப் பெறுவர். அவர்கள் படிப்படியாக மக்களாட்சி முறைக்கு உட்படுவதற்கு அனுமதிக்கப்படுவர். பதினெட்டு முக்கிய சுதேசப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் யாரும் இந்தியாவுடன் இணைவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை. ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்களது வெகுமதிகள் மற்றும் பெருமைகளுக்குத் தகுதியுடையவர்களாக நீடித்திருப்பர்.[55] மவுண்ட்பேட்டன் பிரபு, அந்த ஆவணங்கள் அரசர்களுக்குத் தேவையான அனைத்து "நடைமுறைச் சுதந்திரத்தை" கொடுப்பதாக வலியுறுத்திக் கூறி, பட்டேல் மற்றும் மேனன் ஆகியோரின் கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.[56] இந்த நிபந்தனைகளை அரசர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனைத் தொடர்ந்து அவர்கள் இதனை விடக் குறைவான நன்மைகள் அடங்கிய நிபந்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்படலாம் என்பதை மவுண்ட்பேட்டன், பட்டேல் மற்றும் மேனன் மூவரும் அரசர்களின் மனதில் நன்கு பதிய வைத்திருந்தனர்.[57] பேச்சுவார்த்தைக்கான ஒரு உபகரணமாகவும் ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கை பயன்படுத்தப்பட்டது. அதாவது சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திடாத சுதேச அரசுகளை ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு உள்துறை அனுமதியளிக்கவில்லை.[58]

இணைத்தல் செயல்பாடு[தொகு]

சேர்வடைவு முறையாவணத்தில் இருந்த குறைவான பயன்கள் மற்றும் அவர்கள் அறிவித்த பெருமளவிலான சுயாட்சியும் மற்ற வாக்குறுதிகளும் பெரும்பாலான ஆட்சியாளர்களுக்கு போதுமான மனநிறைவளிப்பதாக இருந்தது. ஏனெனில் ஆங்கிலேயரிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் உட்பூசல்கள் அதிகம் இருந்த ஆட்சியாளர்கள் அதனை சிறந்த தீர்வாகக் கருதினர்.[59] 1947 ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதிக்கும் இடையில் பெருமளவிலான சுதேசப் பகுதிகள் சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திட்டிருந்தன. எனினும் சிலர் கையெழுத்திடாமல் இருந்தனர். சிலர் காரணமேதுமின்றி சேர்வடைவு முறையாவணத்தில் கெயெழுத்திடாமல் தாமதப்படுத்தி வந்தனர். மத்திய இந்தியாவில் இருந்த சிறிய சுதேசப் பகுதியான பிப்லோடா, 1948 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இணையாமலே இருந்தது.[60] எனினும் பாகிஸ்தானுடன் இணையும் மேலும் ஆதாயமான ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்ட ஜோத்பூர், பாகிஸ்தானுடன் முன்பே இணைந்துவிட்டிருந்த ஜுனாகார் மற்றும் சுதந்திரமாக யாரையும் சாராத பகுதிகளாகவே நீடிக்க விரும்புவதாக அறிவித்த ஜதராபாத் மற்றும் காஷ்மீர் போன்ற சில எல்லையோரப் பகுதிகளில் பெரிதளவில் சிக்கல்கள் உருவாயின.

எல்லையோரப் பகுதிகள்[தொகு]

ஜோத்பூரை ஆண்ட அன்வந்த் சிங், காங்கிரஸ் மீது வெறுப்புணர்ச்சி கொண்டவராக இருந்தார். மேலும் அவருக்கு இந்தியாவில் இணைந்தால் நல்ல எதிர்காலம் இருக்காது என்றோ அல்லது அவர் விரும்பிய வாழ்க்கை கிடைக்காது என்றோ கருதினார். அதனால் ஜெய்சால்மர் பகுதியை ஆண்ட மன்னருடன் இணைந்து பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்த ஜின்னாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஜின்னா, சில பெரிய எல்லையோரப் பகுதிகளை கவர்வதில் முனைப்புடன் இருந்தார். ஆகவே வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பகுதியளவை இழந்ததற்கு ஈடு செய்யும் வகையில் பிற ராஜபுத்திர பகுதிகளை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு முயற்சித்தார். இவர் ஜோத்பூருக்கும் ஜெய்சால்மருக்கும் பாகிஸ்தானுடன் இணைவதற்கான நிபந்தனைகளை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தார். அதாவது அவர்களுக்கு ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து அதில் அவர்களது நிபந்தனைகளை எழுதச் சொல்லி தான் அதில் கையெழுத்திடச் சம்மதித்தார்.[61] ஆனால் இன ரீதியாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால்இந்துக்களை வைத்துக்கொண்டு முஸ்லீம்கள் பிராதானமாக இருக்கும் பகுதியில் இருப்பது மிகவும் சிரமமானதாக இருக்கும் என வாதிட்டு அதற்கு ஜெய்சால்மர் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அன்வந்த் சிங் கையெழுத்திடும் முடிவெடுத்தார். பிகானேர் இராச்சியம் போன்ற எல்லைப்புற இராச்சியங்கள், பாகிஸ்தானுடன் இணைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் மனப்பாங்குடன் இருந்தனர். இந்துக்கள் அதிகமுள்ள ஒரு பகுதி பாகிஸ்தானுடன் இணைவது என்பது இந்தப் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்த இரு நாடுகள் கொள்கைக்கு முரணாக இருக்கும். மேலும் அந்தப் பகுதிகளில் இனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட இது ஏதுவாக்கிவிடும் என மவுண்ட்பேட்டனும் குறிப்பிட்டார். இந்த வாதங்களுக்கு இணங்கிய அன்வந்த் சிங் தயக்கத்துடன் இந்தியாவுடன் இணைவதற்கு சம்மதித்தார்.[62]

ஜுனாகார்[தொகு]

சுதேச அரசுகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ தங்கள் விருப்பப்படி இணைந்து கொள்ளலாம் என்ற கோட்பாடு இருந்த போதிலும் "நிலவியல் சார் கட்டாயங்களின்" காரணமாக பெரும்பாலான பகுதிகள் இந்தியாவுடனே இணைய வேண்டியிருக்கும் என மவுண்ட்பேட்டன் குறிப்பிட்டார். அதன் விளைவாக அவர் பாகிஸ்தானின் எல்லையோரத்தில் இருக்கும் சுதேசப் பகுதிகள் மட்டுமே பாகிஸ்தானுடன் இணையலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.[60]

குஜராத்தின் தென் மேற்கு பகுதியில் இருந்த சுதேச அரசான ஜூனாகத் பகுதியானது பாகிஸ்தானின் எல்லையில் இல்லாமல் இருந்த போதும் அதன் நவாப், மவுண்ட்பேட்டனின் கருத்தைப் புறக்கணித்து பாகிஸ்தானுடன் இணைவதற்கு முடிவெடுத்தார். மேலும் கடல் வழியில் சென்றால் பாகிஸ்தானை அடைவது சுலபம் என அவர் வாதாடினார். ஜூனாகாத் மேலதிகாரம் செலுத்தி வந்த மங்க்ரோல் மற்றும் பாபரியாவாத் ஆகிய இரு பகுதிகளை ஆண்ட ஆட்சியாளர்கள் ஜூனாகாத்தில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படுவதாக அறிவித்து இந்தியாவுடன் அவர்கள் இணைவதாகத் தெரிவித்தனர். இதனால் ஜூனாகாத் நவாப் வலுக்கட்டாயமாக அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்தார். அருகிலுள்ள பகுதிகளின் ஆட்சியாளர்கள் சினமடைந்து அவர்களது படைகளை ஜூனாகாத் எல்லைக்கு அனுப்பியதுடன் இந்திய அரசாங்கத்திடம் உதவியும் கோரினர். ஆர்சி ஹுகுமத் ("தற்காலிக அரசாங்கம்") எனப்படும் புறநிலை அரசை சாமல்தாஸ் காந்தி (Samaldas Gandhi) தலைமையில் ஜூனாகாதி மக்களில் ஒரு பிரிவினர் உருவாக்கினர்.[63]

ஜூனாகத்தை பாகிஸ்தானுடன் இணைவதற்கு அனுமதித்தால் குஜராத்தில் ஏற்கனவே கொதிப்பாக உள்ள இனரீதியான பதட்டம் மோசமான நிலையை அடைந்துவிடக்கூடும் என இந்தியா கருதியது. அதனால் இந்த இணைப்பிற்கு மறுப்பு தெரிவித்தது. அந்தப் பகுதியில் 80% இந்துக்களே இருப்பதை அரசாங்கம் சுட்டிக் காட்டியது. மேலும் இந்த இணைப்பு குறித்து அந்தப் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதே நேரம் ஜூனாகாத்துக்கு அனுப்பப்பட்டு வந்த எரிபொருள் மற்றும் நிலக்கரி போன்றவை நிறுத்தப்பட்டன. வான்வழி மற்றும் அஞ்சல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. அதன் எல்லைப்பகுதிக்கு படைகள் அனுப்பப் பட்டன. மேலும் மங்க்ரோல் மற்றும் பாபரியாவாத் பகுதிகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.[64] இந்தியப் படைகளை விளக்கிக் கொள்வது பற்றி ஒரு பொதுவாக்கெடுப்புக்கு சம்மதிக்க பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. இந்தியா அதனை மறுத்தது. இந்தியப் படைகளுடன் ஏற்பட்ட சண்டைகளைத் தொடர்ந்து, நவாப் மற்றும் அவரது குடும்பத்தினர் அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பாகிஸ்தானுக்குத் தப்பியோடினர். இதனால் ஏற்பட்ட கடும் குழப்பத்தால் நவம்பர் மாதம் 7 ஆம் தேதி ஜூனாகாத் நீதிமன்றம் இந்திய அரசாங்கத்தை அந்தப் பகுதிகளை நிர்வகிக்க அழைத்தது. அதனை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.[65] 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஒருமனதாக இந்தியாவுடன் இணையலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.[66]

ஜம்மு காஷ்மீர்[தொகு]

இங்கு பச்சை நிறத்தில் காட்டப்பட்டிருப்பது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியாகும்.அடர் காவி நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் இந்தியா நிர்வகிக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியாகும். இதில் அக்சை சின் பகுதி சீன நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அந்த நேரத்தில் காஷ்மீர் பகுதியை ஹரி சிங் மகாராஜா ஆண்டு வந்தார். அவர் இந்துவாக இருந்த போதும் அந்தப் பகுதிகளில் பெருமளவில் முஸ்லீம் மக்களே இருந்தனர். இந்தியா அல்லது பாகிஸ்தான் இரண்டுடன் இணைவதற்கும் ஹரி சிங் தயக்கம் காட்டினார். இரண்டில் எதில் சேர்ந்தாலும் அது அவரது பேரரசில் பங்கம் விளைவிக்கிற விளைவுகளை ஏற்படுத்தி விடலாம் என அஞ்சினார்.[67] அவர் பாகிஸ்தானுடனான ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். பின்னர் இந்தியாவுடன் கையெழுத்திடவும் விருப்பம் தெரிவித்தார்.[68] ஆனால் காஷ்மீர் சுதந்திரமான பகுதியாக நீடிக்கும் என அறிவித்தார்.[60] எனினும் இவரது முடிவை காஷ்மீரின் பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய கான்ஃபிரன்சின் தலைவரான ஷேக் அப்துல்லா (Sheikh Abdullah) எதிர்த்தார். இவர் ஹரி சிங் பதவி விலக வேண்டும் என வற்புறுத்தினார்.[68]

காஷ்மீரை இணைத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் அவர்களுக்கான பண்டப் பரிமாற்றங்கள் மற்றும் போக்குவரத்துகளைத் துண்டித்தது. பிரிவினையின் காரணமாக பஞ்சாப்பில் ஏற்பட்ட குழப்பநிலையின் காரணமாக இந்தியாவுடனான போக்குவரத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. இந்த இரு நாடுகளுடன் காஷ்மீருக்கான ஒரே போக்குவரத்தாக வான்வழித் தொடர்பு இருந்தது. மகாராஜாவின் படைகளின் காரணமாக பொதுமக்களுக்கு இடையே ஏற்பட்ட கிளர்ச்சியில் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடப்பதாக வதந்திகள் பரவின. அதன் பின்னர் விரைவில் பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப் புற மாகாணத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவரான பதான் மக்கள் எல்லையைக் கடந்து காஷ்மீருக்குள் நுழைந்தனர்.[69] படையெடுப்பாளர்கள் ஸ்ரீ நகரை நோக்கியும் துரிதமாக முன்னேறினர். காஷ்மீர் மகாராஜா, இராணுவ உதவியைக் கேட்டு, பதிலாக சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திடுவதற்கு ஒப்புக்கொள்வதாகவும் ஷேக் அப்துல்லா தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்படலாம் என்றும் இந்தியாவுக்குக் கடிதம் எழுதினார்[70] அந்த இணைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதனை உறுதி செய்வதற்கு எந்த சட்ட ரீதியான தேவைகள் இல்லாத போதும், பொது வாக்கெடுப்பு நடத்தியே அது உறுதி செய்யப்பட வேண்டும் என நேரு அறிவித்தார்.[71]

முதல் காஷ்மீர் போர் சமயத்தில் இந்தியப் படைகள் ஜம்மு, ஸ்ரீ நகர் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்குள் செல்ல முடியாத குளிர்காலத்தின் தொடக்கத்தில் போர் நடந்ததால் அது கடுமையான சண்டையாக இருக்கவில்லை. அரசியல் மற்றும் போர்த்திற வல்லுநர்கள் திணறியிருந்த சூழலில் பிரதமர் நேரு தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்தார். பழங்குடியினர் படையெடுப்பை நிறுத்துவதில் தோல்வி ஏற்படும் என்ற கண்ணோட்டத்தில், பின்னர் ஐக்கிய நாடுகளை மத்தியஸ்தம் செய்ய அழைத்தார், இல்லையென்றால் சூழலில் இந்தியா, பாகிஸ்தான் மீதே படையெடுத்துத் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என்று அவர் வாதாடினார்.[72] அங்கு பொது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீரில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 இன் கீழ் இதற்காக சிறப்பு விதிகள் கொண்டு வரப்பட்டன.[73] எனினும் இந்தியாவினால் காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெற முடியவில்லை. 1947 ஆம் ஆண்டு காஷ்மீரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. அந்தப் பகுதிகள் தற்போது 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்' என இந்திய அரசாங்கத்தால் குறிப்பிடப்படுகின்றன. 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா - இந்தியப் போரில், லடாக் பகுதியின் வட கிழக்கு எல்லைப்புறப் பகுதியான அக்சாய் சின் பகுதியை சீனா கைப்பற்றியது. தற்போதும் அப்பகுதியை சீனா கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது.

மேலே குறிப்பிட்டிருந்தது போல ஜூனாகார் நிகழ்வில், ஜூனாகார் பெருமளவில் இந்து மக்களைக் கொண்டிருந்தபடியால் அது இந்தியாவுடன் இணைக்ந்திருக்க வேண்டும், ஆகவே பாகிஸ்தான் பிரதிநிதிகள் இரு நாடுகள் கொள்கையில் இருந்து விலகிச்சென்றனர் என மவுண்ட்பேட்டன் தெளிவுபடுத்தினார். ஆனால் காஷ்மீர் நிகழ்வில் அது பெருமளவு முஸ்லீம் மக்களைக் கொண்டிருந்த போதும் அவர் அம்மக்களின் விருப்பதிற்கு மாறாக மகாராஜா முடிவெடுத்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்தார்.

ஜதராபாத்[தொகு]

1909 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநிலம்.இதன் முந்தையப் பிரதேசங்கள் தற்போது ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இந்திய மாநிலங்களில் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஜதராபாத் தென்கிழக்கு இந்தியாவில் 82,000 சதுர மைல்கள் (212,000 சதுர கிலோ மீட்டர்களுக்கும் மேல்) பரப்பளவைக் கொண்ட நிலங்களால் சூழப்பட்ட பகுதி ஆகும். அப்பகுதியைச் சேர்ந்த 17 மில்லியன் மக்களில் 87 சதவீதத்தினர் இந்துக்களாக இருந்த போதும் அதனை ஆண்ட நிஜாம் ஓஸ்மான் அலிகான் (Osman Ali Khan) ஒரு முஸ்லீம் ஆவார். மேலும் அப்பகுதி அரசியல் முஸ்லீம் பிரமுகர்களின் ஆதிக்கத்தில் இருந்தது.[74] முஸ்லீம் உயர்குடிமக்கள் மற்றும் ஆற்றல் மிக்க முஸ்லீம் கட்சியான இட்டெஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை ஜதராபாத் சுதந்திரமான பகுதியாகவே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாக தனி நாடாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதன் படி, ஆட்சி மாற்றத்தின் போது 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிஜாம் அரசாணைப் பத்திரம் வெளியிட்டார். அதில் அவரது பகுதி சுதந்திரமாகவே நீடிக்கும் என அறிவித்தார்.[75] அந்த அரசாணைப் பத்திரத்தை சந்தேகத்துக்கிடமான சட்டப்பூர்வமான உரிமை கொண்டதாகக் கருதி இந்திய அரசாங்கம் நிராகரித்தது. ஜதராபாத் பகுதியானது வட இந்தியாவுக்கும் மற்றும் தென் இந்தியாவுக்கும் இடையில் தொடர்பு கொள்வதில் பங்கு வகிக்கும் முக்கிய இடத்தில் அமைந்திருக்கிறது. அதனால் அது இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்குவதற்காக "வெளிநாட்டுச் சக்திகளால்" சுலபமாக உபயோகப்படுத்தப்படலாம். அதனால் இது இந்தியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய சிக்கலாக இருப்பதாக இந்திய அரசு வாதிட்டது. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள், வரலாறு மற்றும் இடங்கள் ஆகியவை கேள்விக்கிடமின்றி இந்தியத் தன்மை கொண்டன. ஆகையால் அந்தப் பகுதி இந்தியாவுடன் ஒருங்கிணைய வேண்டியதும் கட்டாயமானது எனக் குறிப்பிட்டது.[76]

அதன் நிஜாம் இந்தியாவுடன் வரம்புக்குட்பட்ட உடன்படிக்கைக்கு சம்மத்திக்கும்படி தயார்ப்படுத்தப்பட்டார். அதில் வழக்கமான சேர்வடைவு முறையாவனத்தில் இல்லாத கூடுதல் பாதுகாப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சமயங்களில் ஹைதரபாத் நடுநிலைத்தன்மையில் இருக்கலாம் என உத்தரவாதமளிக்கப்பட்டது. மற்ற பகுதிகளும் இதே போன்ற தனிச்சலுகைகளைக் கேட்கக் கூடும் என்று வாதிட்டு இந்தியா அந்த முன்மொழிவை நிராகரித்தது. ஜதராபாத் இந்தியாவுடன் இணைவதற்கு அப்போது ஒப்புக் கொள்ளாமல் இருந்த போதிலும், இடைக்கால ஏற்பாடாக தற்காலிக ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கை கையெழுத்தானது.[77] எனினும் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடன்படிக்கைக்கு மாறாக தொடர்ந்து நடந்து கொள்வதாக ஜதராபாத் மீது இந்தியா குறை கூறியது. அதே சமயம் இந்தியா அவரது பகுதிகளை முற்றுகையிடுவதாக ஜதராபாத் நிஜாம் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது.[78]

1948 ஆம் ஆண்டு சூழ்நிலை மேலும் மோசமாகியது. தீவிர முஸ்லீமான காசிம் ராஸ்வியின் (Qasim Razvi) செல்வாக்கின் கீழ், இட்டெஹாதுல் முஸ்லிமீனுடன் இணைந்த ரசாக்கர்கள் ("தன்னார்வலர்கள்") என்றழைக்கப்பட்ட குடிப்படை உருவாக்கப்பட்டது. இந்து மத பொதுமக்களுக்கு எதிராக பொங்கியெழும் முஸ்லீம் ஆளும் வர்க்கத்துக்கு இது ஆதரவளித்தது. இந்த அமைப்பானது அதன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியது. இது கிராமப்புற மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் இறங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்த ஜதராபாத் மாநில காங்கிரஸ் கட்சி அரசியல் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.[79] பொதுவுடைமை வாதக் குழுக்களினால் நிலைமை மேலும் மோசமாகியது. முதலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த அவர்கள் பின்னர் கட்சி மாறி காங்கிரஸ் குழுக்களைத் தாக்கத் தொடங்கினர்.[79] மவுண்ட்பேட்டன் மேற்கொண்ட உடன்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. ஆகஸ்டு மாதத்தில் நிஜாம் உடனடியாக அவரை படையெடுப்பு நிகழலாம் என அச்சம் கொண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை மற்றும் சர்வதேச நீதிமன்றத்தை அணுக முயற்சிகள் மேற்கொண்டார்.[80] ஐதராபாத் தொடர்ந்து சுதந்திரமாக செயல்பட்டால் இந்தியா அரசாங்கத்தின் கெளரவல் களக்கப்படுத்தப்படும். பின்னர் இந்துக்களும் சரி, முஸ்லீம்களும் சரி இந்த அரசில் பாதுகாப்பை உணர மாட்டார்கள் என பட்டேல் குறிப்பிட்டார்.[81] செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி இந்திய இராணுவம் ஆபரேசன் போலோவிற்காக ஐதராபாத் அனுப்பப்பட்டது. அப்போதைய சட்டம் ஒழுங்கு சூழல்கள் தென்னிந்தியாவின் அமைதியை அச்சுறுத்துவதாக அமைந்தன என்பதன் அடிப்படையில் இப்படை அனுப்பப்பட்டது. சிறிதளவு எதிர்ப்பை எதிர்கொண்ட இராணுவப் படைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதிக்கும் 18 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தப் பகுதியை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன. இந்தியாவுடன் இணைந்த மற்ற பகுதிகளைச் சேர்ந்த மற்ற அரசர்களைப் போலவே நிஜாமும் அந்தப் பகுதியின் தலைவராக நீடித்தார்.[82] அவர் அதற்குப் பின்னர் ஐக்கிய நாடுகளிடம் கொடுக்கப்பட்ட புகார்களை மறுத்தார். பாகிஸ்தானின் தீவிரமான எதிர்ப்பு மற்றும் பிற நாடுகளின் விமர்சனங்கள் நிலவிய போதும் பாதுகாப்புப் பேரவை அதன் பின்னர் அதனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. ஐதராபாத்தானது இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.[83]

ஒருங்கிணைப்பை நிறைவு செய்தல்[தொகு]

தற்போதைய சத்திஷ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றின் பகுதிகளைக் கொண்டிருக்கும் மத்திய ஆட்சிப் பகுதிகள் மற்றும் பெரார்.
ஆங்கிலேயர் ஆண்ட மெட்ராஸ் ஆட்சிப்பகுதி மற்றும் அருகில் இருக்கும் சுதேசப் பகுதிகள்
இந்த மெட்ராஸ் ஆட்சிப் பகுதி பலவாறாகப் பிரிக்கப்பட்டு அருகில் இருந்த சுதேச ஆட்சிப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

சேர்வடைவு முறையாவணமானது மிகவும் வரம்புக்குட்பட்டதாக இருந்தது. இந்தியாவுக்கு மூன்று விசயங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் பரிமாற்றம் செய்யப்பட்டன. மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையில் நிர்வாகம் மற்றும் ஆட்சி முறைகளில் குறிப்பிடத்தக்க மாறுபாட்டுடன் தளர்ச்சியான குடியரசு உருவாக்கப்பட்டது. மாறாக முழுமையான அரசியல் ஒருங்கிணைப்பு ஏற்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அவர்களது விசுவாசம், எதிர்பார்ப்புகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றை இந்தியக் குடியரசு என்ற புதிய அமைப்பின் அடிப்படையில் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.[84] அது எளிதான காரியமாக இல்லை. மைசூர் போன்ற சில சுதேச அரசுகள் ஆட்சிமுறையில் சட்டமியற்றும் அதிகாரமுள்ள அமைப்புகளைக் கொண்டிருந்தன. அவை விரிவான வாக்குரிமையைக் கொண்டிருந்தன. மேலும் இந்த முறை பிரித்தானியாவின் இந்தியாவில் பின்பற்றப்பட்ட முறைக்கு குறிப்பிடத்தக்களவில் மாற்றம் இல்லாத முறையாக இருந்தது.[85] மற்ற பகுதிகளில் அரசியல் முடிவு எடுத்தல் என்பது சிறிய, வரம்புக்குட்பட்ட நாகரிகமான அமைப்புகளுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. இதனால் இந்த ஆட்சிமுறையின் விளைவுகள் தந்தை வழி அமைப்பு என்பதாக சிறந்ததாகவும் உட்சதிகளின் சூழ்நிலையில் மோசமானதாகவும் இருந்தது.[86] சுதேச அரசுகளின் இணைப்பினை முடித்த பிறகு, இந்திய அரசு 1948 ஆம் ஆண்டுக்கும் 1950 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மாநிலங்களை ஒன்றாக இணைக்கும் வேலைகளில் இறங்கியது. மேலும் ஒற்றைக் குடியரசு அரசியலமைப்பின் கீழ் முந்தைய பிரிட்டிஷ் அதிகார வரம்புகள் ஒற்றை நிருவாக முறைக்கு மாற்றப்பட்டன.[87]

துரிதமான ஒருங்கிணைப்பு[தொகு]

இந்தச் செயல்பாட்டின் முதல் படி 1947 ஆம் ஆண்டுக்கும் 1949 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்திய அரசாங்கம், நிலைத்து நீடிக்கவல்ல நிர்வாக அமைப்புகாலாகக் கருதாத சிறிய மாநிலங்கள் அருகில் உள்ள மாநிலத்துடன் இணைக்கப்பட்டது அல்லது அடுத்த சுதேசப் பகுதியுடன் சேர்த்து "சுதேச ஒன்றியம்" உருவாக்கப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டது.[88] இந்தக் கொள்கையானது சேர்வடைவு முறையாவணங்களில் சிறிது காலத்திற்கு முன்பு நீடித்திருக்கலாம் உத்தரவாதமளிக்கப்பட்ட இந்த மாநிலங்களைக் கலைக்கும் செயலில் ஈடுபட்டதால், இது முரணானதாக இருந்தது. ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படாமல் இருந்தால் மாநிலங்களின் பொருளாதார நிலை சீர்குலைந்துவிடும் என பட்டேலும் மேனனும் உறுதியாய்க் கூறினர். மேலும் அரசர்களால் குடியாட்சியை வழங்க முடியவில்லை என்றாலும், சரியாக நிருவகிக்கவில்லை என்றாலும் குழப்ப நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தனர். பெரும்பாலான சிறிய மாநிலங்கள் அவர்களது வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஆதரவளிக்கும் பொருளாதார நிலைக்குத் தேவையான வள ஆதாரங்கள் இல்லாமல் இருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினர். பலர் சுமத்தப்பட்ட வரி விதிகள் மற்றும் மற்ற கட்டுப்பாடுகள் வர்த்தகத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதினர். அவற்றை ஒருங்கிணைந்த இந்தியாவில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.[89] ஒருங்கிணைப்பில் தனிப்பட்ட முறையில் மவுண்ட்பேட்டன் கொடுத்த வாக்குறுதிகள் குலைக்கப்படும் என்பதால் பட்டேலும் நேருவும் அவரது கவர்னர் ஜெனரல் பதவிக்காலம் வரை காத்திருந்து பிறகு முடிவெடுக்கலாம் என நினைத்திருந்தனர். எனினும் 1947 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரிஸ்ஸாவில் எழுச்சியடைந்திருந்த ஆதிவாசிகள் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தினர்.[88] 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் சட்டிஸ்கரைச் சேர்ந்த அரசர்கள் மேனனுடன் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் மத்திய ஆட்சிப்பகுதியான ஒரிஸ்ஸா மற்றும் பீகார் ஆகியவற்றுடன் அவர்களது ஆட்சிப் பகுதிகளை 1948 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதியில் இருந்து இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இணங்க வைக்கப்பட்டனர்.[90] அந்த ஆண்டில் இறுதியில் குஜராத்தில் இருந்த 66 பகுதிகள் மற்றும் டெக்கான் போன்ற பகுதிகள் பம்பாயுடன்இணைக்கப்பட்டன. இதில் கோலாபூர் மற்றும் பரோடா ஆகிய பெரிய பகுதிகளும் உள்ளடக்கி இருந்தன. மற்ற சிறிய பகுதிகள் மெட்ராஸ், கிழக்கு பஞ்சாப், மேற்கு வங்காளம், ஐக்கிய சுதேசப் பகுதிகள் மற்றும் அஸ்ஸாம் ஆகிய பகுதிகளுடன் இணைக்கப்பட்டன.[91] எனினும் இணைத்தல் உடன்படிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த அனைத்துப் பகுதிகளும் ஆட்சிப் பகுதிக்குள் இணைக்கப்படவில்லை. இணைத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த, சர்வதேச எல்லையில் அமைந்திருந்த முன்னால் பஞ்சாப் மலைப்பகுதி நிறுவனத்தின் கீழ் இருந்த முப்பது பகுதிகள் இமாச்சலப் பிரதேசமாக ஒருங்கிணைக்கப்பட்டன. அது பாதுகாப்பு காரணங்களுக்காக முதன்மை ஆணையரின் ஆட்சிப்பகுதியாக நேரடியாக மத்திய அரசினால் நிர்வகிக்கப்பட்ட பகுதியாக இருந்தது.[92]

ஆட்சியாளர்கள் தமது பகுதிகளின் "ஆட்சிக்காகவும் ஆட்சி தொடர்பானதுமான முழுமையான மற்றும் குறிப்பிடத்தக்க சட்ட உரிமையையும் அதிகாரங்களையும்" குடியேற்ற இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என இணைத்தல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தங்கள் பகுதிகளை முழுமையாக விட்டுக் கொடுக்க ஒப்புக்கொண்டதற்கு கைம்மாறாக அப்பகுதிகளின் அரசர்களுக்கு பெருமளவு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. அரசர்கள் அவர்களது பகுதிகளை ஒப்படைத்தது மற்றும் அவர்களது பகுதிகளைக் கலைத்ததற்கு ஈடாக இரகசிய பணமுடிப்பு வடிவத்தில் ஆண்டு ஊதியத்தை இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறுவார்கள். சுதேசப் பகுதிகளின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்ட போதும். அவர்ளது சொந்த சொத்துக்கள் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு தனிப்பட்ட சிறப்புரிமைகள், கெளரவங்கள் மற்றும் பதவிகள் ஆகியவையும் நீடிக்கும். அவர்களது வாரிசுகளுக்கும் கூட எழுதப்படாத வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கூடுதலாக மாநில நிர்வாகத்தில் சமமான ஊதியம் மற்றும் நடத்தும் முறை உறுதியளிப்புடன் சுதேச அரசுகளின் பணியாட்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுவர்.[93]

இணைத்தல் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சிறிய நீடித்து செயல்பட வாய்ப்பற்ற பகுதிகளுக்காக உருவாக்கப்பட்ட போதிலும், அவை சில பெரிய பகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. சர்வதேச எல்லையில் அமைந்திருக்கும் மேற்கிந்தியாவில் கட்ச் பகுதி மற்றும் வட கிழக்கு இந்தியாவில் திரிபுரா மற்றும் மணிப்பூர் பகுதிகள் ஆகியவையும் கூட இணைத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அழைக்கப்பட்டன. இவை பெரிய பகுதிகளாக இருந்த போதிலும் முதன்மை ஆணையரின் ஆட்சிப் பகுதிகளாக இருந்தன. போபால் பகுதியை ஆண்ட மன்னர் அவரது நிர்வாகத்திறன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அந்தப் பகுதியை மராத்தாவுடன் இணைத்தால் அதன் தனித்தன்மை இழக்கப்படலாம் என அவர் பயந்து முதன்மை ஆணையாளரின் நேரடி ஆட்சிப் பகுதியாக ஆக்க ஒப்புக்கொண்டார். பிலாஸ்பூர் பகுதியில் பெரும்பகுதிகள், பக்ரா அணையின் கட்டுமானம் முடிந்தால் வெள்ளத்தில் சிக்கக்கூடியவையாக இருந்தன. பிலாஸ்பூரும் இவ்வாறே செய்துகொண்டது.[92]

நான்கு படிநிலை ஒருங்கிணைப்பு[தொகு]

இணைத்தல்[தொகு]

பெருமளவிலான பெரிய பகுதிகள் மற்றும் சில சிறிய பகுதிகள் மாறுபட்ட நான்கு படிநிலைச் செயல்பாட்டின் மூலமாக இணைக்கப்பட்டன. பெரிய பகுதிகள் ஒரு குழுவாக இணைந்து "சுதேச ஒன்றியத்தை" உருவாக்குவதற்கு அவர்களை சம்மதிக்க வைத்தல் இந்தச் செயல்பாட்டின் முதல் படிநிலை ஆகும். இதற்காக இணைத்தலுடன் இணை உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இணைத்தலின் இணை உடன்படிக்கையின் கீழ் அனைத்து ஆட்சியாளர்களும் அவர்களது ஆட்சியை இழந்தனர். புதிய ஒன்றியத்திற்கு ராஜ்பிரமூகாக ஒருவர் இருப்பார். மற்ற ஆட்சியாளர்கள் சல்யூட் பகுதிகளின் ஆட்சியாளர்கள் உறுப்பினர்களாக இருந்த பேரவையுடனும் நிரந்தர சபையுடனும் இணைக்கப்பட்டனர். இந்த நிரந்தர சபையின் ஒன்று அல்லது மேற்பட்ட உறுப்பினர்கள் சல்யூட் பகுதிகளல்லாத பகுதிகளின் ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் பேரவையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ராஜ்பிரமூக் மற்றும் துணை ராஜ்பிரமூக் அல்லது உப ராஜ்பிரமூக் ஆகியோரை நிரந்தர சபையின் உறுப்பினர்களில் இருந்து பேரவையானது தேர்ந்தெடுத்தது. இணை உடன்படிக்கையில் அரசியலமைப்பைக் கட்டமைக்க முனையும் புதிய ஒன்றியத்துக்கான சட்ட சபை உருவாக்கத்துக்கான நிபந்தனைகளும் இடம்பெற்றிருந்தன. அவர்களது ஆட்சிப் பகுதிகளை தனித்த உறுப்புக்களாக மாற்றுவதற்கு ஏற்றுக் கொண்டிருந்ததற்கு அதற்கு ஈடாக இரகசிய பணமுடிப்பும் இணைத்தல் ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டிருந்தது போலவே வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன.[94]

இந்த செயல்பாட்டின் மூலமாக பட்டேல் அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் சௌராட்டிர தீபகற்பத்தின் பரோடா அரசு மற்றும் பவநகர் அரசு போன்ற 222 பகுதிகளை செளராஸ்டிரா சுதேச ஒன்றியத்துடன் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முயன்று இணைத்தார். அதற்கடுத்த ஆண்டில் மேலும் ஆறு பகுதிகள் அந்த ஒன்றியத்துடன் இணைந்தன.[95] 1948 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதியில் குவாலியர், இந்தோர் மற்றும் பதினெட்டு சிறிய பகுதிகள் ஆகியவற்றின் ஒன்றியத்தின் மூலமாக மத்திய பாரதம் தோன்றியது.[96] பஞ்சாப்பில் 1948 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியில் பாட்டியாலா, காபுர்தாலா, ஜிந்த், நாபா, ஃபாரித்கோட், மாலர்கோட்லா, நாலர்கார் மற்றும் கால்சியா ஆகிய பகுதிகளைக் கொண்டு பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.[97] இந்த இணைப்புக்களின் வரிசையில் இறுதியாக 1949 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி ராஜஸ்தான் ஐக்கிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது.[98] 1949 ஆம் ஆண்டின் மத்தியில் திருவாங்கூர் மற்றும் கொச்சின் ஆகியவை இணைக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சின் சுதேச ஒன்றியம் உருவாக்கப்பட்டது.[99] ஜம்மு காஷ்மீர் மன்னராட்சி, மைசூர் அரசு மற்றும் ஐதராபாத் நிசாம் ஆகிய மூன்று பகுதிகள் மட்டுமே இணைத்தலின் இணை உடன்படிக்கை மற்றும் இணைத்தல் ஒப்பந்தங்கள் இரண்டிலுமே கையெழுத்திடாத சுதேச அரசுப் பகுதிகள் ஆகும்.

குடியாட்சிமயமாதல்[தொகு]

ஒவ்வொரு மாநிலத்திலும் நிர்வாக இயந்திரங்களை இணைத்து அவற்றை ஒரே அரசியல் மற்றும் நிர்வாக உறுப்பின் கீழ் ஒருங்கிணைப்பது என்பது சுலபமான ஒன்றல்ல. குறிப்பாக பல இணைக்கப்பட்ட பகுதிகள் முன்னர் போட்டி மனப்பான்மை கொண்டவையாக இருந்தன. முந்தைய மத்திய இந்திய நிறுவனத்தின் சுதேசப் பகுதிகள் விந்தியப் பிரதேசம் என்று அழைக்கப்பட்ட சுதேசப் பிரதேசத்தினுள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த இரண்டு குழுக்கள் இடையே சிக்கல் ஏற்பட்டது. அதனால் ஏற்கனவே அவர்கள் கையெழுத்திட்டிருந்த பழைய இணைத்தல் ஒப்பந்தத்தை இந்திய அரசு இரத்து செய்துவிட்டு அவர்களை புதிய இணைத்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தியது. மேலும் அந்தப் பகுதியை முதன்மை ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.[100] அங்கு இணைப்பாளர்கள் இந்திய அரசாங்கம் அல்லது உள் துறை எதிர்பார்த்த அளவில் நடந்து கொள்ளவில்லை. 1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மேனன், "பாராட்டும்படியான அரசாங்கத்தை நிறுவுவதை நோக்கிய நடைமுறைப் படிநிலைகளை" மாநிலங்களின் ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும் என ஆலோசனை தெரிவித்தார். உள்துறை அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்டது. இணைக்கப்பட்ட சுதேச ஒன்றியங்களின் ராஜ்பிரமூக்களின் கையெழுத்திடப்பட்ட சிறப்பு இணை உடன்படிக்கை மூலமாக அதனை நடைமுறைப் படுத்தியது. அதன் மூலம் அவர்களை சட்டத்திற்குட்பட்ட முடிமன்னர்களாக செயல்படும் விதமாக அமைத்தது.[101] அதாவது அவர்களது அதிகாரங்கள் முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளில் ஆளுநர்களுக்கு இருந்த அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லாததாக இருந்தது.[102] ஆகையால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்த அரசாங்கங்களைப் போலவே அவர்களது பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கும் பொறுப்பான அரசாங்கம் வழங்கப்பட்டது.[101]

விவரிக்கப்பட்ட இந்த செயல்பாட்டின் விளைவாக, மாநிலங்களின் மீது இந்திய அரசாங்கத்தின் மேலதிகாரம் மிகவும் ஊடுருவலான வடிவத்தில் வலியுறுத்தப்பட்டது.[103] இது அதிகார மாற்றம் ஏற்பட்ட பிறகு மேலதிகாரம் முடிவுக்கு வந்துவிடும் என ஆங்கிலேயர்கள் அறிக்கை விட்டிருந்ததற்கு முரணானதாக இருந்த போதும், சுதந்திர இந்தியா மேலதிகாரத்தை எப்படியும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என காங்கிரஸ் தொடர்ந்து உறுதியாக இருந்தது.[49]

ஒருமுகப்படுத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டமாக்கம்[தொகு]

குடியாட்சிமயமாதலில் முந்தைய சுதேச அரசுகள் மற்றும் முந்தைய பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிகளுக்கு இடையில் முக்கியமானதொரு வேற்றுமை தொடர்ந்து இருந்தது. அதாவது சுதேச அரசுகள் மூன்று விசயங்கள் மட்டுமே உள்ளடக்கிய வரம்புக்குட்பட்ட சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திட்டிருந்ததால், மற்ற பகுதிகளின் அரசுக் கொள்கைகளில் இருந்து பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். இது அவர்களின் சமூக நீதி மற்றும் தேசிய மேம்பாடு ஆகியவற்றுக்கான கொள்கைகளை உருவாக்குவதற்கான திறனைத் தடுத்து நிறுத்தும் என காங்கிரஸ் கருதியது.[101] அதன் விளைவாக, அவர்கள் முந்தைய பிரிட்டிஷ் ஆட்சி சமயத்தில் முந்தைய சுதேச அரசுகள் கொண்டிருந்த அதே விதமான அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக மத்திய அரசைப் பாதுகாப்பதற்கு முயற்சித்தனர். 1948 ஆம் ஆண்டு மே மாதத்தில் வி.பி. மேனனின் முயற்சியால் சுதேச ஒன்றியங்களின் ராஜ்பிரமூக்களுக்கும் உள்துறைக்கும் இடையே டெல்லியில் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ராஜ்பிரமூக்கள் இந்திய அரசாங்கத்தின் புதிய சேர்வடைவு முறையாவணத்தில் கையெழுத்திட்டனர். அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1935 இன் ஏழாவது சட்ட இணைப்பின் கீழ் இருந்த விசயங்கள் இணைக்கப்பட்டிருந்தன.[101] அதனைத் தொடர்ந்து மைசூர் மற்றும் ஐதராபாத் உட்பட அனைத்து சுதேச ஒன்றியங்களும் மாநிலத்தின் ஆட்சிமுறையாக சட்ட சபையில் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு ஒப்புக்கொண்டன. ஆகையால் முந்தைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சட்ட ரீதியாக எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையை இந்திய அரசாங்கம் அடைவதற்கு உறுதியளிப்பதாக இது அமைந்தது.[104] இதில் ஒரே விதிவிலக்காக இருப்பது காஷ்மீர் மட்டுமே ஆகும். இந்தியாவுடனான அதன் தொடர்பு இன்னும் ஆரம்பத்தில் எழுதப்பட்ட சேர்வடைவு முறையாவனத்தையும், அந்த மாநிலத்தின் சட்ட சபையில் முன்மொழியப்பட்ட ஆட்சிமுறையையும் சார்ந்ததாகவே தொடர்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டமானது இந்தியாவின் அரசியலமைப்புப் பகுதிகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறது. அவை பகுதி A, B மற்றும் C வகை மாநிலங்கள் என குறிப்பிடப்படுகின்றன. முந்தைய ஆங்கிலேய ஆட்சிப் பகுதிகள் மற்றும் அவற்றை இணைத்துக் கொண்ட சுதேசப் பகுதிகள் பகுதி A மாநிலங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. சுதேச ஒன்றியங்கள் மற்றும் அதனுடன் சேர்ந்து மைசூர் மற்றும் ஐதராபாத் போன்றவை பகுதி B மாநிலங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. முந்தைய முதண்மை ஆணையர் ஆட்சிப் பகுதிகள் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் நீங்களாக மற்ற மத்திய அரசால் நிருவகிக்கப்படும் பகுதிகள் ஆகியவை பகுதி C மாநிலங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.[105] பகுதி B மாநிலங்களின் அரசியலமைப்புத் தலைவர்கள் மத்திய அரசின் ஆளுநரால் நியமிக்கப்படுபவராக அல்லாமல் இணைத்தலின் இணை உடன்படிக்கையின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ராஜ்பிரமூக்களாக இருப்பார்கள். இது மட்டுமே நடைமுறையில் பகுதி A மாநிலங்களுக்கும் பகுதி B மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஆகும். கூடுதலாக முந்தைய சுதேசப் பகுதிகளின் மீது மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட வரம்பில் அதிகாரம் செலுத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. அதில் மற்ற விசயங்களுக்கு மத்தியில் "அவர்களின் ஆட்சிமுறை பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்வதாக இருக்க வேண்டும், அவ்வப்போது குடியரசுத் தலைவர் சொல்லும் விசயங்களுக்குக் கீழ்படிவது" போன்றவை முக்கியமானவை ஆகும். இந்த மாறுபாடுகள் தவிர்த்து இரண்டிலும் அரசாங்கம் ஒரே மாதிரியாகவே செயல்படுகிறது.[103]

புனரமைத்தல்[தொகு]

பகுதி A மற்றும் பகுதி B மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடு தோராயமாக இடைக்காலத்திலேயே மறைந்திருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது. 1956 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சிப் பகுதிகளும் சுதேச அரசுப் பகுதிகளும் மாநிலங்கள் புனரமைப்புச் சட்டம் மூலமாக மொழி வாரியாக புனரமைப்பு செய்யப்பட்டன. அதேசமயம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது திருத்தத்தின் மூலமாக பகுதி A மற்றும் பகுதி B மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் களையப்பட்டன. அவையிரண்டும் தற்போது "மாநிலங்கள்" என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. பகுதி சி மாநிலங்கள் "ஒன்றியப் பிரதேசங்கள்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன. ராஜ்பிரமூக்கள் அவர்களது அதிகாரத்தை இழந்தனர். அதற்குப் பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களால் நியமிக்கப்படும் அரசியலமைப்புத் தலைவர்களுக்கு நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த மாற்றங்கள் காரணமாக இறுதியாக மன்னராட்சி முறை முடிவுக்கு வந்தது.[106] சுதேசப் பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்த பிரதேசங்கள் சட்ட ரீதியாகவும் நடைமுறையிலும் முழுமையாக இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டன. ஆனால் அவை பிரித்தானியாவின் இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்த போது எப்படி கருதப்பட்டனவோ. அதே போன்றே தற்போதும் கருதப்படுகின்றன.[107] அரசர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட சலுகைகளான இரகசிய பணமுடிப்பு, வரி விலக்கு மற்றும் மரபு சார்ந்த கெளரவங்கள் நீண்ட காலத்திற்கு நீடித்தன. ஆனால் அவை 1971 ஆம் ஆண்டில் இருந்து இரத்து செய்யப்பட்டன.[108]

ஒருங்கிணைப்புக்குப் பின்னர் ஏற்பட்ட சிக்கல்கள்[தொகு]

சுதேச சமஸ்தானங்கள்[தொகு]

சுதேச அரசுகளில் படிப்படியாய் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு பெருமளவில் அமைதியானதாகவே இருந்த போதும் இதனால் ஒரு சில மன்னர்கள் மகிழ்ச்சியடையாமலும் இருந்தனர். சேர்வடைவு முறையாவணம் நிரந்தரமானதாக இருக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். மேலும் அவர்கள் சுயாட்சியை இழந்ததற்காகவும், அவர்களது பகுதிகளில் அவர்களுக்கு தொடர்ந்து வரும் என அவர்கள் எதிர்பார்த்திருந்த ஆதாயங்களை இழந்ததற்காகவும் மகிழ்ச்சியற்று இருந்தனர். சிலர் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் மாநிலத்தை தொடர்ந்து ஆள்வதற்கு இயலாது என்பதைச் சுலபமாக எடுத்துக் கொள்ளவில்லை. சிலர் அவர்களது கடின உழைப்பினால் செயல்திறம் மிக்கதாக இருக்கும் எனக்கருதி உருவாக்கிய கட்டமைப்புகளுக்கு உரிமை கொண்டாட இயலாமல் இருப்பதற்கு வருந்தினர்.[106] எனினும் தனிப்பட்ட குடிமகன்களாக அவர்கள் வாழ்க்கையின் "சிரமம் மற்றும் பதட்டம்" போன்றவற்றை அனுபவித்த போதும்,[106] அவர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்கு இரகசிய பணமுடிப்பு வழங்கப்பட்டதன் மூலமாக ஏராளமான ஓய்வூதியம் பெற்று மனநிறைவுடன் ஓய்வைக் களித்தனர்.[109] அதில பலர் அவர்களது திறனைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசின் கீழ் இருந்த அலுவலகங்களைக் கைப்பற்றினர். எடுத்துக்காட்டாக பவ்நகர் மகாராஜாவாக இருந்த துணைத்தளபதி கிருஷ்ண குமாரசிங் பவசிங் கோகில் (Krishna Kumarasingh Bhavasingh Gohil),மெட்ராஸ் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[110] மேலும் பலர் வெளிநாடுகளில் அரசியல் திறம்வாய்ந்த பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.[106]

குடியேற்ற நிலப்பகுதிகள்[தொகு]

இந்தியாவில் பிரெஞ்சின் ஐந்து குடியேற்றப் பகுதிகளில் ஒன்றான யானோன்.

சுதேசப் பகுதிகளை ஒருங்கிணைத்தது இந்தியாவில் மீதிமிருந்த குடியேற்ற நிலப்பகுதிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குரியதாக்கியது. சுதந்திர இந்தியாவில், பாண்டிச்சேரி, காரைக்கால், யானம், மாஹே மற்றும் சந்திரநாகூர் போன்ற பகுதிகள் தொடர்ந்து பிரான்சின் குடியேற்றப் பகுதிகளாக இருந்தன். டையூ டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹாவேலி மற்றும் கோவா போன்ற பகுதிகள் போர்ச்சுகலின் குடியேற்றப் பகுதிகளாக இருந்தன.[111] இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையில் 1948 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது அதன் படி இந்தியாவில் நீடித்திருக்கும் பிரான்சு குடிகளிடம் எதிர்கால அரசியலமைப்பு நிலையைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்குப்பதிவு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி சந்திரநாகூரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 7,463 - 114 என வாக்குகள் வழங்கப்பட்டு, (ஆதரவாக 7,463 எதிராக 114) பெரும்பாலான வாக்குகள் இந்தியாவுடன் இணைவதற்குச் சாதகமாக இருந்தன. 1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி அது நடைமுறை எதார்த்தத்தின் அடிப்படையிலும், 1950 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி சட்டத்திற்குட்பட்டும் இந்தியாவுக்கு உடைமை மாற்றம் செய்யப்பட்டது.[112] எனினும் மற்ற குடியேற்றப் பகுதிகளில் எடுவர்டு கவுபர்ட் (Edouard Goubert) தலைமையிலான பிரெஞ்சு சார்பு முகாமானது சார்பு இணைப்புக் குழுக்களை அடக்குவதற்கான நிர்வாக இயந்திரமாகப் பயன்படுத்தப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க அதிருப்தி நிலவியது. மேலும் 1954 ஆம் ஆண்டில் சார்பு இணைப்புக் குழுக்கள் அதிகாரம் எடுத்துக் கொண்டதால் யானம் மற்றும் மாஹே பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் நடைபெற்ற வாக்குப்பதிவுகள் இந்தியாவுடன் இணைப்பதற்கு சாதகமாக இருந்தன. மேலும் 1954 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் தேதி நான்கு குடியேற்றப் பகுதிகளின் நடைமுறைக் கட்டுப்பாடுகளும் குடியரசு இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. விட்டுக்கொடுத்தல் ஒப்பந்தம் 1956 ஆம் ஆண்டு மே மாதத்தில் கையெழுத்தானது. 1962 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரெஞ்சு தேசிய சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து குடியேற்றப் பகுதிகளின் சட்டத்திற்குட்பட்ட கட்டுப்பாடுகளும் பரிமாற்றம் செய்யப்பட்டன.[113]

1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்தியாவுடன் கோவாவை ஒருங்கிணைக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்ச்சுகீசுக்கு எதிராக நடத்திய பேரணி.

மாறாக போர்ச்சுகல் ராஜ தந்திரமான தீர்வுகளை எதிர்த்தது. போர்ச்சுகல் அதன் இந்தியக் குடியேற்றங்களின் உடைமைகளைத் தொடர்வதை அதன் தேசிய கெளரவமாகக் கருதியது.[114] மேலும் 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள அதன் உடைமைகளை போர்ச்சுகீசு ஆட்சிப்பகுதியாக மாற்றம் செய்வதற்காக அதன் சட்டத்தில் மாற்றங்கள் செய்தது.[115] 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி பகுதிகளில் எழுச்சி ஏற்பட்டு போர்ச்சுகீசின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது.[114] அந்தக் குடியேற்றப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக போர்ச்சுகீஸ் டாமன் பகுதியில் இருந்து படைகளை அனுப்பும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்தப் படைகள் இந்தியப் படைகளால் தடுக்கப்பட்டன. போர்ச்சுகலின் படைகளை குடியேற்றத்துக்குள் நுழைய இந்திய அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி போர்ச்சுகல் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அந்த நீதிமன்றம் 1960 ஆம் ஆண்டு அந்தப் புகாரை நிராகரித்தது. மேலும் அது போர்ச்சுகலின் இராணுவ அணுகலைத் தடை செய்யும் உரிமை இந்தியாவுக்கு உண்டு எனவும் கூறியது.[116] 1961 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு தாத்ராவும் நாகர் ஹாவேலியும் இந்தியாவுடன் ஒன்றியப் பிரதேசங்களாக இணைக்கப்பட்டன.[117]

கோவா, டையூ டாமன் பகுதிகள் சிக்கல்கள் நிறைந்ததாக தொடர்ந்து நீடித்தன. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி 5000 அகிம்சை வாத ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லையில் போர்ச்சுகீசுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர்.[115] 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையானது போர்ச்சுகலின் அயல்நாட்டு உடைமை அந்த ஆட்சிப்பகுதிகளில் இருக்கிறது என்ற அதன் வழக்கைத் தள்ளுபடி செய்தது. மேலும் அந்தப் பகுதிகளை "சுய நிர்வாகமற்ற பிரதேசங்கள்" என முறைப்படி பட்டியலிட்டது.[118] நேரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை தொடர்ந்து ஆதரித்த போதிலும், 1961 ஆம் ஆண்டில் அங்கோலாவில் ஏற்பட்ட கிளர்ச்சியில் இந்திய பொதுமக்களை போர்ச்சுகீசிய அரசு ஒடுக்கியது. அது இந்தியா இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அழுத்தத்தை அதிகரிப்பதாக அமைந்தது. ஆப்பிரிக்கத் தலைவர்களும் கூட கோவா விசயத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி நேருவுக்கு அழுத்தம் கொடுத்தனர். அது ஆப்பிரிக்காவையும் தொடர்ந்த பீதியில் இருந்து காப்பாற்றும் என அவர்கள் வாதிட்டனர்.[119] 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்காக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து,[120] இந்திய இராணுவம் கோவா, டையூ டாமன் ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்தது. போர்ச்சுகீசு இந்தப் பிரச்சினையை ஐ.நா பாதுகாப்புச் சபையிடம் எடுத்துச் சென்றது. ஆனால் இந்தியா அதன் படைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற அதன் கோரிக்கை யூ.எஸ்.எஸ்.ஆரின் இரத்து செய்யும் உரிமை (வீட்டோ) மூலமாகத் தோல்வியடையச் செய்யப்பட்டது.[121] டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி போர்ச்சுகல் சரணடைந்தது.[118] இந்தக் கையகப்படுத்துதல் மூலமாக இந்தியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கோவா மத்திய அரசால் நிருவகிக்கப்படும் ஒன்றியப் பிரதேசமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் அது ஒரு மாநிலமாக மாறியது.

சிக்கிம்[தொகு]

முந்தைய சுதேச ஆட்சிப்பகுதியான சிக்கிம், இது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கிறது. இது 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் 22 ஆவது மாநிலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

சிக்கிம் அரசு சுதேச அரசு 1947 மற்றும் 1950 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குடியரசு இந்தியாவுடன் இணைப்பட்டிருக்கவில்லை. ஆங்கிலேயர்கள் மற்றும் இந்தியா அரசாங்கம் ஆகியோரால் நேபாளம் சட்டப்படி சுதந்திரப் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[111] ஆங்கிலேயர் காலத்தில் பூட்டான் இந்தியாவின் சர்வதேச எல்லைப்புறத்தின் வெளிப்புறப் பாதுகாப்புப் பகுதியாகக் கருதப்பட்டது.[111] இந்திய அரசாங்கம் 1949 ஆம் ஆண்டு பூட்டான் அதன் வெளியுறவுகளில் இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையின்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டுடன் பூட்டான் உடன் உடன்படிக்கை மேற்கொண்டது.[122]

ஆரம்பத்தில் சிக்கிம் அரசு மற்ற சுதேச அரசுகளைப் போலவே ஆங்கிலேயரைச் சார்ந்திருந்தது. அதனால் அது குடியேற்ற காலத்தில் இந்தியாவின் எல்லைப்புறமாகக் கருதப்பட்டது. எனினும் சுதந்திர காலகட்டத்தில் சிக்கிம் இந்தியாவுடன் முழுமையாக இணைவதற்கு அதன் கோகைல் (ஆட்சியாளர்) உடன்படவில்லை. இந்தியாவுக்கு அந்தப் பகுதியின் உத்திப்பூர்வ முக்கியத்துவம் விளக்கப்பட்ட பின் முதலில் இந்திய அரசாங்கம் ஸ்டேண்ட்ஸ்டில் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. பின்னர் 1950 ஆம் ஆண்டில் சிக்கிமின் கோகைல் உடன் ஒரு முழுமையான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் அப்போதிலிருந்து இந்தியாவின் பகுதியாகக் கருதப்படவில்லை. அதன் படி அந்தப் பகுதியின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்புகள் ஆகியவற்றுக்கு இந்தியா பொறுப்பேற்கும். மேலும் இறுதியாக சட்டம் ஒழுங்குக்கும் பொறுப்பேற்கும். ஆனால் சிக்கிம் முழுமையான சுயாட்சியை மேற்கொள்ளலாம்.[123] 1960களின் பிற்பகுதி மற்றும் 1970களின் முற்பகுதியில் சிறுபான்மை பூட்டியா மற்றும் லெப்ச்சா உயர் வகுப்பினர் ஆதரவு பெற்ற கோகைல் பெருமளவிலான அதிகாரங்களை கோர முயற்சித்தார். குறிப்பாக சிக்கிமிற்கு சர்வதேசச் சிறப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவ்வாறு முயற்சித்தார். இந்தக் கொள்கைகளை காசி லேண்டப் டோர்ஜி (Kazi Lhendup Dorji) மற்றும் நேபாள மத்திய வர்க்கங்களுக்கான பிரதிநிதியாகவும் இந்தியச் சார்புக் கண்ணோட்டம் கொண்டதாகவும் இருந்த சிக்கிம் மாநில காங்கிரஸ் அதனை எதிர்த்தது.[124] 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோகைலுக்கு எதிரான கிளர்ச்சி வெடித்தது. கிளர்ச்சியாளர்கள் பொதுத் தேர்தல் நடத்தக்கோரி வற்புறுத்தினர். சிக்கிம் காவல் துறையால் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் காசி லேன்டப் டோர்ஜி, இந்தியா தலையிட்டு அப்பகுதி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரினார். இந்தியா குறுக்கிட்டு கோகைலுக்கும் டோர்ஜிக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட உதவியது. அந்த உடன்படிக்கையின் படி சட்டப்பூர்வமான முடிமன்னனாக இருக்கும் கோகைலின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. மேலும் புதிய மரபார்ந்த அதிகாரப் பகிர்வு முறையின் படி தேர்தல்கள் நடைபெறும் என குறிப்பிடப்பட்டது.[125] அதில் கோகைலின் எதிர்ப்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றனர். பின்னர் அங்கு உருவான புதிய அரசியலமைப்பானது குடியரசு இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக இருந்தது.[126] 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி சிக்கிம் சட்ட சபையில் இந்தியாவுடன் முழுமையாக இணைவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 97% வாக்குகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சிக்கிமை அதன் 22 ஆவது மாநிலமாக ஏற்றுக்கொண்டது.[127] எனினும் இந்திய அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விவரம் மற்றும் இந்திய இராணுவம் நடத்திய பொது வாக்கெடுப்பு ஆகியவற்றின் உண்மை நிலை குறித்து வரலாற்றிசிரியர்கள் கடுமையாக விவாதிக்கின்றனர். இருந்த போதும் சிக்கிம், இந்தியாவின் 22 ஆவது மாநிலமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[128]

பிரிந்து செல்லுதல் மற்றும் உப-தேசாபிமானம்[தொகு]

பெரும்பாலான சுதேச அரசுகள் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டாலும் சில சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது காஷ்மீர் பிரச்சினையாகும். காஷ்மீரில் 1980களின் பிற்பகுதியில் இருந்து வன்முறையான பிரிந்து செல்பவர்கள் கிளர்ச்சி கடுமையாக நடைபெறுகிறது.

காஷ்மீரில் ஏற்படும் கிளர்ச்சியானது அது இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முறையின் விளைவின் ஒரு பகுதியாக இருப்பதாக சில தர்க்கவாதிகள் கருதுகின்றனர். சுதேச அரசுகளிலேயே தனித்துவம் வாய்ந்த காஷ்மீர் ஆனது இணைத்தல் ஒப்பந்தத்திலோ அல்லது முதலில் வழங்கியிருந்த மூன்று விசயங்கள் அடங்கிய சேர்வடைவு முறையாவனத்தைக் காட்டிலும் பெருமளவிலான கட்டுப்பாடுகள் அடங்கிய திருத்தப்பட்ட சேர்வடைவு முறையாவனத்திலோ கையெழுத்திட தேவையில்லாததாக இருந்தது. மாறாக காஷ்மீர் தொடர்புடைய சட்டங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 5 இன் படி இந்திய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 இன் கீழ் மற்ற மாநிலங்களில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் கட்டுப்பாடானதாகவும் அது இருந்தது. 1980களின் போது பல காஷ்மீர் இளைஞர்கள், இந்திய அரசாங்கம் ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசியலில் அதிகமாக குறுக்கிடுவதாக உணர ஆரம்பித்தனர் என விட்மாம் (Widmalm) வாதிடுகிறார்.[129] 1987 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலானது அரசியல் செயல்பாடுகளில் அவர்கள் நம்பிக்கை இழக்கக் காரணமாயிற்று. அதன் பின்னர் அவர்கள் தொடங்கிய வன்முறையான கிளர்ச்சி இன்றும் நடந்துவருகிறது.[129] அதே போல காஷ்மீர் மீது இந்திய அரசாங்கம் கொண்டுள்ள கொள்கைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ளதைப் போல நவீன பல்-மரபு குடியாட்சி சார்ந்ததாக இல்லாமல் இருப்பதாக கங்குலி (Ganguly) கருத்து தெரிவித்தார்.[130] அதன் விளைவாக, அதிகரித்துவரும் அரசியல் விழிப்புணர்வு கொண்ட இளைஞர்களின் மாறாத நிலை யில் வளர்ந்துவரும் அதிருப்திகள் அரசியல் சாரா வழிகளில் வெளிப்பட்டன.[131] இவற்றை பாகிஸ்தான் சாதகமாகக் கருதி காஷ்மீரை இந்தியா தொடர்ந்து வைத்திருப்பதில் பலவீனத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது, இது கிளர்ச்சியாக உருவெடுக்கிறது.[132]

வடகிழக்கு இந்தியாவில் அமைந்திருக்கும் மற்ற இரண்டு முன்னால் சுதேச அரசுகளான திரிபுரா மற்றும் மணிப்பூர் பகுதிகளிலும் பிரிவினை வாத இயக்கங்கள் உள்ளன. இந்தியாவிற்குள் சுதேசப் பகுதிகளை இணைத்ததில் காஷ்மீரில் ஏற்பட்ட குறிப்பிட்ட சிக்கலைப் போலன்றி பரவலான வட கிழக்கு இந்தியாவின் கிளர்ச்சிகளின் ஒரு பகுதியாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். மேலும் வடகிழக்கில் பழங்குடி குழுக்களின் விருப்பங்களுக்கு இந்திய அரசாங்கம் போதுமான முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதன் விளைவாக அல்லது இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வட கிழக்குப் பகுதிகளுக்கு வந்து குடியேறுவதால் எழும் பதட்டங்களைச் சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்தது ஆகியவற்றால் இவை எழுச்சியடைவதாகவும் கருதுகின்றனர்.[133]

புதிய மாநிலத்தை உருவாக்குவதற்காக முந்தைய சுதேசப் பகுதியை மற்ற ஆட்சிப்பகுதிகளுடன் ஒருங்கினைப்பதுவும் சில சிக்கல்கள் எழக் காரணமாயின. முந்தைய ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட மாவட்டங்களுடன் தெலுங்கானா பகுதி இணைக்கப்பட்டது. இணைக்கப்பட்ட இந்தப் பகுதி, பிரித்தானியாவின் இந்தியாவின் தெலுங்கு பேசும் மக்களிடம் இருந்து பலவிதங்களில் மாறுபட்டதாக இருந்தது. இந்த மாறுபாடுகளை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, தெலுங்கானா பகுதி பரவலாகத் தெலுங்கு பேசும் பகுதிகளில் ஒன்றாக இணைக்கப்பட்டிராமல் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என மாநிலங்கள் புனரமைத்தல் ஆணையம் முதலில் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையானது இந்திய அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டது. மேலும் தெலுங்கானா பகுதி ஆந்திரப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. அதன் விளைவாக 1960களில் தனித் தெலுங்கான மாநிலம் கோரி இயக்கம் தோன்றியது.[134] அந்தக் கோரிக்கை 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முந்தைய நாக்பூர் மற்றும் முந்தைய ஐதராபாத் மாநிலத்தைச் சேர்ந்த பெரார் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய மகாராஷ்டிராவின் விதார்பா பகுதியில் இதே போன்ற இயக்கம் தோன்றியது. ஆனால் அது வலிமை குன்றியதாக இருந்தது.[135]

ஒருங்கிணைப்புச் செயல்பாட்டின் விமர்சனக் கண்ணோட்டங்கள்[தொகு]

இக்கட்டுரையில் விவாவதித்தது போல், ஒருங்கிணைப்பு செயல்பாடானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்குள் தொடர்ந்து பிரச்சினைகளை உண்டாக்கியது. பேச்சுவார்த்தைகளின் போது, சுதேச அரசுகள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேர்ந்தாலும் சுதந்திரமாகவே செயல்படும் என்ற திருத்தத்திற்கு, முஸ்லீம் கூட்டமைப்பை முன்னின்று வழிநடத்திய ஜின்னா பலமான ஆதரவை அளித்தார். இச்செயல்பாடு நேரு மற்றும் காங்கிரஸின் கொள்கைகளுக்கு முழுமையான எதிர்ப்பை அளிப்பதாக இருந்தது[136]. ஜதராபாத் சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்ற பாகிஸ்தானின் முனைப்பு இதில் எதிரொலித்தது. பிரிவினைக்குப் பிறகு, காஷ்மீரின் மகாராஜாவின் பதவியேற்றத்திற்கும் இந்தியா அங்கீகாரம் அளிக்க மறுத்த பாகிஸ்தானின் ஜுனாகாத் பகுதியின் ஆட்சியாளரின் பதிவியேற்றத்திற்கும் இடையில் சிறிய வித்தியாசம் இருப்பதாகவும், இந்தியா வஞ்சகத்துடன் செயல்படுவதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் குறை கூறியது. மேலும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவுடன் ஜூனாகாத் இணைத்துக் கொள்ளப்பட்டதற்கான அங்கீகாரம் நிராகரிக்கப்பட்டு, அது பாகிஸ்தானின் சட்டத்திற்குட்பட்ட பிரதேசமாகவே கருதப்பட்டது.[66]

அக்கால கட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடைய திட்டங்களை விவரிப்பதற்கு மாறுபட்ட கோட்பாடுகள் வலியுறுத்தப்பட்டன. ஜூனாகாத் மற்றும் ஐதராபாத்தை இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ள முகமது அலி ஜின்னா அனுமதித்தால், காஷ்மீரைப் பாகிஸ்தான் எடுத்துக் கொள்வதில் பட்டேலுக்கு ஆட்சேபணை இல்லை என்ற கருத்தளவிலான யோசனையை ராஜ்மோகன் காந்தியும் ஏற்றுக்கொண்டார்.[137] ஜூனாகாத் மற்றும் ஐதராபாத்தைப் பற்றிய கேள்விகளை ஒரே சண்டையில் எழுப்பியதாக காந்தி வலியுறுத்தியதாக பட்டேல்: எ லைஃப் (Patel: A Life) என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூனாகாத் மற்றும் ஐதராபாத்தில் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜின்னா ஆலோசனை தெரிவித்தார். அந்தப் பகுதிகளில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்களாக இருந்ததால் அவர்கள் பாகிஸ்தானுக்கே வாக்களிப்பர் என அவர் நம்பினார். இந்தக் கொள்கை பின்னர் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டது நாம் அறிந்ததே. பாகிஸ்தான் அதனைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து ஜூனாகாத்தில் பகாவுதீன் கல்லூரியில் பேசிய பட்டேல், "அவர்கள் ஐதராபாத்தைத் தர சம்மதித்தால் நாம் காஷ்மீருக்கு ஒப்புக்கொள்ளலாம்" என்றார். அவர் அந்தத் திட்டத்திற்கு இணங்குவதற்கு விருப்பம் கொண்டவராக இருந்தார் என்பது அப்போது தெளிவானது.[138] பட்டேலின் கருத்து இந்தியாவின் கொள்கை கிடையாது என்ற போதும், அது நேருவுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்ற போதும் ஜோத்பூர், போபால் மற்றும் இந்தோர் ஆகிய சுதேசப் பகுதிகளின் மீது ஜின்னா ஆர்வம் காண்பிப்பதற்காக இருவரும் சினமுற்றனர். அது பாகிஸ்தானுடன் உடன்படிக்கைக்கான சாத்தியத்தைக் கடினமாக்கியது.[139]

இணைத்தல் செயல்பாட்டின் போது உள்துறை மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபுவின் பங்கு குறித்து நவீன வரலாற்றாசியர்களும் கூட மறு ஆய்வு செய்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சேர்வடைவு முறையாவனத்தில் கையெழுத்திட்டிருந்த போதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உடன்படிக்கையை நிரந்தரமானதாக்க வேண்டும் என அவர்கள் கருதவில்லை. மேலும் 1948 மற்றும் 1950 ஆகிய கால கட்டத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையான ஒருங்கிணைப்பை நிறைவு செய்வதற்கு நினைத்தனர் என இயன் கோப்லாண்ட் (Ian Copland) வாதிடுகிறார்.[101] 1948 மற்றும் 1950 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் இணைத்தல் உடன்படிக்கைகள் மற்றும் விட்டுக்கொடுத்தல் அதிகாரங்கள் போன்றவை சேர்வடைவு முறையாவனத்துக்கு முற்றிலும் மாறானதாக இருந்தன என்று அவர் குறிப்பிட்டார். மேலும் மவுண்ட்பேட்டன் சுதேச அரசுகளிடம் வாக்குறுதியளித்திருந்த அக சுயாட்சி மற்றும் பாதுகாப்பு போன்ற உறுதிமொழிகளுக்கு முரணானதாகவும் இருந்தது என்றார்.[140] இணைத்தலுக்கான ஆரம்ப நிபந்தனைகளில், ஒவ்வொரு நிகழ்வும் அரசர்கள் கட்டாயப்படுத்தப்படாமல் ஏகமானதாக ஒப்புக்கொண்டவுடன் செய்யப்படும் விதமாகவே மாற்றங்கள் செய்யப்பட்டதாக மேனன் அவரது வாழ்க்கை வரலாற்றின் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நேரத்தில் அயல்நாட்டு ராஜ தந்திரிகள் சுதேச அரசுகளுக்கு கையெழுத்திடுவதைத் தவிர வேறு வாய்ப்பில்லை என்று கருதியதன் அடிப்படையில் மற்றும் சில சுதேச அரசர்கள் இந்த ஒப்பந்தங்களில் மகிழ்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் இயன் கோப்லாண்ட் இதனை மறுக்கிறார்.[141] மேலும் அவர் இதில் மவுண்ட்பேட்டனின் பங்கையும் கடுமையாக விமர்சிக்கிறார். சட்டத்திற்குட்பட்டு அவர் இங்கு தங்கியிருந்த போது இந்திய அரசாங்கம் இணைத்தல் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த போது சுதேச அரசுகளுக்கு உதவியாக அவர் ஏதேனும் செய்திருக்கலாம். சுதந்திரத்திற்கு பின்னரான மாற்றங்களில் இவர் எந்த உதவியையும் செய்யவில்லை.[142] அரசர்கள் அவர்களது அரசுரிமையை விட்டுக் கொடுப்பதற்கு சம்மதித்தற்கான காரணங்களில் ஒன்று, அவர்கள் ஆங்கிலேயரால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு விட்டனர் என்று கருதியதாகும். மேலும் அவர்களுக்கு இதைத் தவிர வேறு வாய்ப்பில்லை எனவும் கருதினர் என போத் கோப்லாண்ட் மற்றும் ராமுசாக் (Ramusack) இருவரும் இறுதியாக நடைபெற்ற ஒரு கருத்தாய்வில் வாதிட்டனர்.[143] மாறாக லும்பி (Lumby) போன்ற பழைய வரலாற்று ஆய்வாளர்கள், சுதேச அரசுகள் அதிகார மாற்றத்திற்குப் பின்னர் சுதந்திரமான ஒரு உறுப்பாகச் செயல்பட முடியாது. மேலும் அவர்களது அரசுரிமை இழப்பு என்பது தவிர்க்க இயலாதது என்றும் கூறினர். அனைத்து சுதேச அரசுகளையும் வெற்றிகரமான ஒருங்கிணைத்தது இந்திய அரசாங்கம் மற்றும் மவுண்ட்பேட்டனின் பெரும் சாதனை என அவர்கள் குறிப்பிட்டனர். இந்த முயற்சிகளுக்கு சில காலங்கள் இணைந்து உறுதுணையாக இருந்த பெரும்பாலான சுதேச அரசர்களின் மதிநுட்பமும் பாராட்டத்தக்கது. அவர்கள் ஒன்றாக ஒன்றிணைந்ததால் இந்திய ஒரே ஆட்சியின் கீழ் வந்தது.[144]

வடகிழக்கு இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு சமயத்தில், இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைவது என்பது மக்களின்பால் கவனம் கொண்ட தீவிர விசயமாக அரசியல் ரீதியாகக் கருதப்பட்டது வெளிப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ஒருங்கிணைத்தல் முறையானது உடன்படிக்கைகள், வாக்குறுதிகள், பரிசுகள் மற்றும் தூண்டுதல் போன்ற வழிகளில் மேற்கொள்ளப்பட்டதாக இருந்தது. பகுதிகளை ஒன்றுபடுத்தும் இந்த முயற்சிகளில் அந்தப் பகுதி மக்கள் மாறுபட்ட மரபார்ந்த இனம் சார்ந்தவர்களாக இருந்ததன் விளைவாக சீற்றத்துடன் இருந்தனர். மணிப்பூர் மற்றும் நாக மலை போன்ற சில பகுதிகள் இந்தியாவுடன் இணைவதற்கு மறுத்தன. மேலும் பிரிவினைவாதிகளின் நிபந்தனைகளின் விளைவாக ஒன்றியத்திலிருந்து வெளியேற விரும்பின. பல்வேறு பகுதிகளில் இணைப்பைத் திரும்பப் பெறுதலை வலியுறுத்துவதற்கு ஆயத்தமாயினர். மெய்டெய் மற்றும் நாகா கிளர்ச்சிக் குழுக்கள் அவர்களது பகுதிகளை கட்டாயமாக ஒருங்கிணைத்ததால் சீற்றம் கொண்டனர். மேலும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தவறானதாக இருந்த ஒருங்கிணைப்பாளரின் கொள்கை காரணமாகவே மரபார்ந்த குழுக்கள் அரசாங்கத்திடம் தனிமாநிலம் உருவாக்கக்கோரி சுயாட்சிக்கான கோரிக்கை விடுக்கின்றனர் எனத் தாமதாகவே உணரப்பட்டது. எனினும் புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான கோரிக்கையின் தொடர் விளைவாக மற்ற சிறிய மரபார்ந்த குழுக்களும் மாறுபட்ட சுயாட்சித் தேவைகளுடன் சுயாட்சி கோரிக்கை விடுத்தனர்.[145]

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Ramusack 2004, ப. 57–59
  2. Ramusack 2004, ப. 55–56; Fisher 1984, ப. 393–428
  3. Copland 1997, ப. 15–16
  4. Lee-Warner 1910, ப. 48–51
  5. Lumby 1954, ப. 202–204
  6. Ashton 1982, ப. 29–57
  7. McLeod 1999, ப. 66
  8. Keith 1969, ப. 506–514
  9. Ramusack 1978, ப. chs 1–3
  10. Copland 1993, ப. 387–389
  11. Lumby 1954, ப. 218–219
  12. Copland 1993, ப. 387–388
  13. Wood 1985, ப. 690–691
  14. Lumby 1954, ப. 214–215
  15. Menon 1956, ப. 90–91.
  16. Rangaswami 1981, ப. 235–246
  17. Phadnis 1969, ப. 360–374
  18. Ramusack 1988, ப. 378–381
  19. Copland 1987, ப. 127–129
  20. Lumby 1954, ப. 224–225
  21. Moore 1983, ப. 290–314
  22. Lumby 1954, ப. 204
  23. Copland 1993, ப. 393–394
  24. Copland 1997, ப. 237
  25. 25.0 25.1 Ramusack 2004, ப. 273
  26. Copland 1993, ப. 393; Lumby 1954, ப. 232
  27. Morris-Jones 1983, ப. 624–625
  28. Spate 1948, ப. 15–16; Wainwright 1994, ப. 99–104
  29. Lumby 1954, ப. 215, 232
  30. Lumby 1954, ப. 226–227
  31. Ramusack 2004, ப. 272
  32. Copland 1997, ப. 233–240
  33. Lumby 1954, ப. 229
  34. Copland 1997, ப. 244
  35. Copland 1997, ப. 232
  36. 36.0 36.1 36.2 36.3 36.4 Copland 1997, ப. 258
  37. Phadnis 1968, ப. 170–171, 192–195
  38. Copland 1997, ப. 253–254
  39. Copland 1993, ப. 391–392
  40. Copland 1997, ப. 255
  41. Gandhi 1991, ப. 411–412
  42. Gandhi 1991, ப. 413–414
  43. Copland 1993, ப. 385
  44. Copland 1997, ப. 252
  45. Eagleton 1950, ப. 283
  46. Moore 1983, ப. 347; Lumby 1954, ப. 236
  47. Lumby 1954, ப. 232
  48. Lumby 1954, ப. 228
  49. 49.0 49.1 Lumby 1954, ப. 218–219, 233
  50. Brown 1984, ப. 667
  51. Menon 1956, ப. 99–100
  52. Lumby 1954, ப. 234
  53. Menon 1956, ப. 109–110
  54. Copland 1993, ப. 399
  55. Copland 1997, ப. 256
  56. Copland 1993, ப. 396
  57. Copland 1993, ப. 396; Menon 1956, ப. 120
  58. Menon 1956, ப. 114
  59. Ramusack 2004, ப. 274
  60. 60.0 60.1 60.2 Copland 1997, ப. 260
  61. Mosley 1961, ப. 177
  62. Menon 1956, ப. 116–117
  63. Lumby 1954, ப. 237–238
  64. Lumby 1954, ப. 238
  65. Lumby 1954, ப. 238–239
  66. 66.0 66.1 Furber 1951, ப. 359
  67. Menon 1956, ப. 394–395
  68. 68.0 68.1 Lumby 1954, ப. 245
  69. Lumby 1954, ப. 245–247
  70. Lumby 1954, ப. 247–248
  71. Potter 1950, ப. 361
  72. Potter 1950, ப. 361–362
  73. Security Council 1957, ப. 359
  74. Talbot 1949, ப. 323–324
  75. Lumby 1954, ப. 240
  76. Talbot 1949, ப. 324–325
  77. Lumby 1954, ப. 243–244
  78. Talbot 1949, ப. 325–326
  79. 79.0 79.1 Talbot 1949, ப. 325
  80. Eagleton 1949, ப. 277–280
  81. Gandhi 1991, ப. 483
  82. Talbot 1949, ப. 326–327
  83. Eagleton 1949, ப. 280; Talbot 1949, ப. 326–327
  84. Wood 1984, ப. 68
  85. Furber 1951, ப. 363
  86. Wood 1984, ப. 72
  87. Furber 1951, ப. 352
  88. 88.0 88.1 Copland 1997, ப. 262
  89. Menon 1956, ப. 193–194
  90. Furber 1951, ப. 354–355
  91. Furber 1951, ப. 355–356
  92. 92.0 92.1 Furber 1951, ப. 366–367
  93. Furber 1951, ப. 354, 356
  94. Furber 1951, ப. 358–359
  95. Furber 1951, ப. 358
  96. Furber 1951, ப. 359–360
  97. Furber 1951, ப. 36o
  98. Furber 1951, ப. 361
  99. Furber 1951, ப. 362–363
  100. Furber 1951, ப. 367–368
  101. 101.0 101.1 101.2 101.3 101.4 Copland 1997, ப. 264
  102. Furber 1951, ப. 357–358, 360
  103. 103.0 103.1 Furber 1951, ப. 369–370
  104. Furber 1951, ப. 357
  105. Furber 1951, ப. 352–354
  106. 106.0 106.1 106.2 106.3 Copland 1997, ப. 266
  107. Gledhill 1957, ப. 270
  108. Roberts 1972, ப. 79–110
  109. Furber 1951, ப. 354, 371
  110. Furber 1951, ப. 371
  111. 111.0 111.1 111.2 Furber 1951, ப. 369
  112. Fifield 1950, ப. 64
  113. Vincent 1990, ப. 153–155
  114. 114.0 114.1 Karan 1960, ப. 188
  115. 115.0 115.1 Fisher 1962, ப. 4
  116. Karan 1960, ப. 188–190
  117. Fisher 1962, ப. 8
  118. 118.0 118.1 Fisher 1962, ப. 6
  119. Fisher 1962, ப. 8–10
  120. Fisher 1962, ப. 10
  121. Wright 1962, ப. 619
  122. Fifield 1952, ப. 450
  123. Furber 1951, ப. 369; Note 1975, ப. 884
  124. Gupta 1975, ப. 789–790
  125. Gupta 1975, ப. 790–793
  126. Gupta 1975, ப. 793–795
  127. Note 1975, ப. 884
  128. http://opinions24x7.blogspot.com/2009/07/story-of-sikkim.html
  129. 129.0 129.1 Widmalm 1997, ப. 1019–1023
  130. Ganguly 1996, ப. 99–101
  131. Ganguly 1996, ப. 91–105
  132. Ganguly 1996, ப. 103
  133. See e.g. Hardgrave 1983, ப. 1173–1177Hardgrave 1983, ப. 1173–1177; Guha 1984, ப. 42–65; Singh 1987, ப. 263–264
  134. Gray 1971, ப. 463–474
  135. Mitra 2006, ப. 133
  136. Menon 1956, ப. 86–87
  137. Gandhi 1991, ப. 430–438
  138. Gandhi 1991, ப. 438
  139. Gandhi 1991, ப. 407–408
  140. Copland 1993, ப. 399–401
  141. Copland 1997, ப. 266, 271–272
  142. Copland 1993, ப. 398–401
  143. Ramusack 2004, ப. 274; Copland 1997, ப. 355–356
  144. Lumby 1954, ப. 218; Furber 1951, ப. 359
  145. Thongkholal Haokip, "Theoretical Considerations of Political Integration and the Indian Experience", http://www.freewebs.com/roberthaokip/articles/Political_Integration_Indian_Experience.pdf

குறிப்புதவிகள்[தொகு]

  • Ashton, S.R. (1982), British Policy towards the Indian States, 1905–1938, London Studies on South Asia no. 2, London: Curzon Press, ISBN 0-700-70146-X
  • Brown, Judith M. (1984), "The Mountbatten Viceroyalty. Announcement and Reception of the 3 June Plan, 31 May-7 July 1947", The English Historical Review, 99 (392): 667–668
  • Copland, Ian (1987), "Congress Paternalism: The "High Command" and the Struggle for Freedom in Princely India"", in Masselos, Jim (ed.), Struggling and Ruling: The Indian National Congress 1885–1985, New Delhi: Sterling Publishers, pp. 121–140, ISBN 8-120-70691-9
  • Copland, Ian (1993), "Lord Mountbatten and the Integration of the Indian States: A Reappraisal", The Journal of Imperial and Commonwealth History, 21 (2): 385–408, doi:10.1080/03086539308582896
  • Copland, Ian (1997), The Princes of India in the Endgame of Empire, 1917–1947, Cambridge, England: Cambridge University Press, ISBN 0-521-57179-0
  • Eagleton, Clyde (1950), "The Case of Hyderabad Before the Security Council", The American Journal of International Law, American Society of International Law, 44 (2): 277–302, doi:10.2307/2193757
  • Fifield, Russell H. (1950), "The Future of French India", Far Eastern Review, 19 (6): 62–64
  • Fifield, Russell H. (1952), "New States in the Indian Realm", The American Journal of International Law, American Society of International Law, 46 (3): 450–463, doi:10.2307/2194500
  • Fisher, Margaret W. (1962), "Goa in Wider Perspective", Asian Survey, 2 (2): 3–10, doi:10.1525/as.1962.2.2.01p1537e
  • Fisher, Michael H. (1984), "Indirect Rule in the British Empire: The Foundations of the Residency System in India (1764–1858)", Modern Asian Studies, 18 (3): 393–428, doi:10.1017/S0026749X00009033
  • Furber, Holden (1951), "The Unification of India, 1947–1951", Pacific Affairs, Pacific Affairs, University of British Columbia, 24 (4): 352–371, doi:10.2307/2753451
  • Gandhi, Rajmohan (1991), Patel: A Life, Ahmedabad: Navajivan Publishing House
  • Ganguly, Sumit (1996), "Explaining the Kashmir Insurgency: Political Mobilization and Institutional Decay", International Security, The MIT Press, 21 (2): 76–107, doi:10.2307/2539071
  • Gledhill, Alan (1957), "Constitutional and Legislative Development in the Indian Republic", Bulletin of the School of Oriental and African Studies, University of London, 20 (1–3): 267–278, doi:10.1017/S0041977X00061838
  • Gray, Hugh (1971), "The Demand for a Separate Telengana State in India", Asian Survey, 11 (5): 463–474, doi:10.1525/as.1971.11.5.01p0113d
  • Guha, Amalendu (1984), "Nationalism: Pan-Indian and Regional in a Historical Perspective", Social Scientist, Social Scientist, 12 (2): 42–65, doi:10.2307/3517093
  • Gupta, Ranjan (1975), "Sikkim: The Merger with India", Asian Survey, 15 (9): 786–798, doi:10.1525/as.1975.15.9.01p0110k
  • Haokip, Thongkholal (2010), "Theoretical Considerations of Political Integration and the Indian Experience", International Journal of South Asian Studies, 3 (2)
  • Hardgrave, Robert L. (1983), "The Northeast, the Punjab, and the Regionalization of Indian Politics", Asian Survey, 23 (11): 1171–1181, doi:10.1525/as.1983.23.11.01p0095g
  • Karan, Pradyumna P. (1960), "A Free Access to Colonial Enclaves", Annals of the Association of American Geographers, 50 (2): 188–190, doi:10.1111/j.1467-8306.1960.tb00345.x
  • Keith, Arthur Berriedale (1969), A Constitutional History of India, 1600–1935 (2nd ed.), London: Methuen
  • Lumby, E.W.R. (1954), The Transfer of Power in India, 1945–1947, London: George Allen and Unwin
  • McLeod, John (1999), Sovereignty, Power, Control: Politics in the State of Western India, 1916–1947, Leiden: Brill, ISBN 9-004-11343-6
  • Menon, V.P. (1956), The Story of the Integration of the Indian States, New York: Macmillan
  • Mitra, Subrata Kumar (2006), The Puzzle of India's Governance: Culture, Context and Comparative Theory, London: Routledge, ISBN 0-415-34861-7
  • Moore, R.J. (1983), Escape from Empire: The Attlee Government and the Indian Problem, Oxford: Clarendon Press, ISBN 0-198-22688-8
  • Morris-Jones, W.H. (1983), "Thirty-Six Years Later: The Mixed Legacies of Mountbatten's Transfer of Power", International Affairs, 59 (4): 621–628
  • Mosley, Leonard (1961), The last days of the British Raj, London: Weidenfield and Nicolson
  • Note (1975), "Current Legal Developments: Sikkim, Constituent Unit of India", International and Comparative Law Quarterly, 24 (4): 884, doi:10.1093/iclqaj/24.4.884
  • Phadnis, Urmila (1968), Towards the Integration of the Indian States, 1919–1947, London: Asia Publishing House
  • Phadnis, Urmila (1969), "Gandhi and Indian States: A Probe in Strategy", in Biswas, S.C. (ed.), Gandhi: Theory and Practice, Social Impact and Contemporary Relevance, Transactions of the Indian Institute of Advanced Study Vol. 2, Shimla: Indian Institute of Advanced Study, pp. 360–374
  • Potter, Pitman B. (1950), "The Principal Legal and Political Problems Involved in the Kashmir Case", The American Journal of International Law, American Society of International Law, 44 (2): 361–363, doi:10.2307/2193764
  • Ramusack, Barbara N. (1978), The Princes of India in the Twilight of Empire: Dissolution of a patron-client system, 1914–1939, Colombus, Ohio: Ohio State University Press, ISBN 0-814-20272-1
  • Ramusack, Barbara N. (1988), "Congress and the People's Movement in Princely India: Ambivalence in Strategy and Organisation", in Sisson, Richard; Wolpert, Stanley (eds.), Congress and Indian Nationalism, Berkeley: University of California Press, pp. 377–403, ISBN 0-520-06041-5
  • Ramusack, Barbara N. (2004), The Indian Princes and Their States, The New Cambridge History of India III.6, Cambridge, England: Cambridge University Press, ISBN 0-521-26727-7
  • Rangaswami, Vanaja (1981), The Story of Integration: A New Interpretation in the Context of the Democratic Movements in the Princely States of Mysore, Travancore and Cochin 1900–1947, New Delhi: Manohar
  • Roberts, Neal A. (1972), "The Supreme Court in a Developing Society: Progressive or Reactionary Force? A Study of the Privy Purse Case in India", The American Journal of Comparative Law, American Society of Comparative Law, 20 (1): 79–110, doi:10.2307/839489
  • Security Council (1957), "Security Council: India-Pakistan Question", International Organization, 11 (2): 368–372, doi:10.1017/S0020818300023808
  • Singh, B.P. (1987), "North-East India: Demography, Culture and Identity Crisis", Modern Asian Studies, 21 (2): 257–282, doi:10.1017/S0026749X00013809
  • Spate, O.H.K. (1948), "The Partition of India and the Prospects of Pakistan", Geographical Review, American Geographical Society, 38 (1): 5–29, doi:10.2307/210736
  • Talbot, Phillips (1949), "Kashmir and Hyderabad", World Politics, Cambridge University Press, 1 (3): 321–332, doi:10.2307/2009033
  • Vincent, Rose (1990), The French in India: From Diamond Traders to Sanskrit Scholars, Bombay: Popular Prakashan, translated by Latika Padgaonkar
  • Wainwright, A. M. (1994), Inheritance of Empire: Britain, India and the Balance of Power in Asia, 1938–55, Westport: Praeger, ISBN 0-275-94733-5
  • Warner, Sir William Lee (1910), The Native States of India (2nd ed.), London: Macmillan
  • Widmalm, Sten (1997), "The Rise and Fall of Democracy in Jammu and Kashmir", Asian Survey, 37 (11): 1005–1030, doi:10.1525/as.1997.37.11.01p02937
  • Wright, Quincy (1962), "The Goa Incident", The American Journal of International Law, American Society of International Law, 56 (3): 617–632, doi:10.2307/2196501
  • Wood, John (1984), "British versus Princely Legacies and the Political Integration of Gujarat", The Journal of Asian Studies, 44 (1): 65–99, doi:10.2307/2056747
  • Wood, John; Moon, Penderel; Blake, David M.; Ashton, Stephen R. (1985), "Dividing the Jewel: Mountbatten and the Transfer of Power to India and Pakistan", Pacific Affairs, Pacific Affairs, University of British Columbia, 58 (4): 653–662, doi:10.2307/2758474

புற இணைப்புகள்[தொகு]