சிறிநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்ரீநகர்
—  மாநகரம்  —
ஸ்ரீநகர்
இருப்பிடம்: ஸ்ரீநகர்
, ஜம்மு காஷ்மீர்
அமைவிடம் 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79ஆள்கூற்று: 34°05′N 74°47′E / 34.09°N 74.79°E / 34.09; 74.79
நாடு  இந்தியா
மாநிலம் ஜம்மு காஷ்மீர்
மாவட்டம் ஸ்ரீநகர்
ஆளுநர் Satya Pal Malik
முதலமைச்சர் மெகபூபா முப்தி
மக்களவைத் தொகுதி ஸ்ரீநகர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


[convert: invalid number]

ஸ்ரீநகர் (காஷ்மீரி: سِری نَگَر, உருது: سری نگر, Srinagar) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில், ஸ்ரீநகர் மாவட்டத்தில், ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள தால் ஏரியும், படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காஷ்மீர் கைவினைப் பொருட்களுக்கும், உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது. தால் ஏரிக்கரை அருகில் உள்ள சங்கராச்சாரியார் மலை மீது சங்கராச்சாரியார் கோயில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

இருப்புப் பாதை[தொகு]

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை, ஸ்ரீநகருடன், பாரமுல்லா, அனந்தநாக், பனிஹால், காசிகுண்ட், அனந்தநாக், ஜம்மு நகரங்களை இணைக்கிறது.

வானூர்தி நிலையம்[தொகு]

ஸ்ரீநகர் வானூர்தி நிலையம் புதுதில்லி, லே, சிம்லா, சண்டிகர் போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

சாலைகள்[தொகு]

ஜம்மு - லே தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீநகருடன் இணைக்கிறது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஸ்ரீநகர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 11,80,570 ஆகும்.அதில் ஆண்கள் 6,18,790, பெண்கள் 561,780 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.87% ஆகவுள்ளது. இங்கு இசுலாமியர்கள் 95.97%, இந்துக்கள் 2.75%, சீக்கியர்கள் 0.92%, கிறித்தவர்கள் 0.21% ஆகவும் மற்றவர்கள் 0.16% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Srinagar City Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிநகர்&oldid=2790100" இருந்து மீள்விக்கப்பட்டது