புதுச்சேரி (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுச்சேரி
பாண்டிச்சேரி
தலைநகரம்
புதுச்சேரி அரசு பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபம்
புதுச்சேரி அரசு பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
நிறுவப்பட்டது1673
ஏற்றம்3
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்654
 • அடர்த்தி9,166
மொழிகள் தமிழ், தெலுங்கு, மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சலக சுட்டு எண்605001-605014
தொலைபேசி குறியீடு91 (0)413
வாகனப் பதிவுPY-01

பாண்டிச்சேரி (Pondicherry, /pɒnd[invalid input: 'ɨ']ˈɛri/ அல்லது /pɒnd[invalid input: 'ɨ']ˈʃɛri/) அல்லது புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சிப் பகுதியும் ஒன்றியப் பகுதியின் தலைநகரமும் ஆகும். முன்னதாக பாண்டி என சுருக்கமாக அழைக்கப்பட்ட இந்த நகரம் 2006ஆம் ஆண்டிலிருந்து புதுச்சேரி என அழைக்கப்படுகிறது.

நகரமைப்பு[தொகு]

புதுச்சேரி நகரத்தில் பிரெஞ்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது புதுவையின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். புதுச்சேரியின் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது.

புதுவை மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் (4)

  1. புதுவை
  2. உழவர்கரை
  3. வில்லியனூர்
  4. பாகூர்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வட்டங்கள் (2)

  1. காரைக்கால்
  2. திருநள்ளார்

மாஹி துணை வட்டம் (1)

  1. மாஹி

ஏனாம் துணை வட்டம் (1)

  1. ஏனாம்

வரலாறு[தொகு]

முதலாம் நூற்றாண்டின் மத்தியில் உரோமானிய வணிகவிடங்களில் பொடுகெ அல்லது பொடுகா எனப்படும் இடம் குறிப்பிடப்படுகிறது. இது நான்காம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்து பல்லவப் பேரரசின் பகுதியாக இருந்தது. பத்தாம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் சோழர்களின் வசம் இருந்தது. 13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்கள் கைப்பற்றினர். 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1638இல் பீஜப்பூர் சுல்தான் கைப்பற்றும்வரை விசயநகரப் பேரரசின் பகுதியாக இருந்தது. 1674இலிருந்து பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சியில் இருந்து வந்தது, இடையிடையே ஆங்கிலேயர்களிடமும் டச்சுக்காரர்களிடமும் குறுகிய காலத்திற்கு இருந்த்து. 1962ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி புதுவை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இருந்த 178 மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 170 பேர் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் 8பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் 1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி புதுச்சேரிக்கு விடுதலை அளிக்கப்பட்டது.

ஆனால் ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதியே முறைப்படி உடன்படிக்கை கையெழுத்தானது. அதனால் இன்றுவரை ஆகஸ்ட்16-ம் தேதியே புதுச்சேரியின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. பிரெஞ்ச் அமைப்புகளின் கோரிக்கைகளை அடுத்து தற்போதைய முதல்வர் திரு.ந.ரங்கசாமி அவர்களால் நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரியின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 16-ம் தேதி குடியரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(2011–12) ரூபாய் 12,082 கோடிகள்.புதுச்சேரியின் தனி நபர் வருமானம்(2011–12) ரூபாய் 98719.

லெனோவா மடிக்கணினி, எச்.சி.எல் மடிக்கணினி புதுச்சேரியில் இருந்து தயாரிக்கபடுகிறது[1][2].

புவியியல்[தொகு]

புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி[தொகு]

புதுச்சேரியில் இலக்கிய வளர்ச்சி என்பது மகாகவி பாரதி, புதுவைக்கு வருவதற்கு முன்பிருந்தே துவங்கிய ஒன்று. அந்த வழியில், மகாகவி பாரதியார், பெருஞ்சித்திரனார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், முதலான அறிஞர் பெருமக்கள் இலக்கியத் தொண்டினை பின்பற்றி, புதுவையின் கவிஞர் பெருமக்கள், பண்ணார் தமிழன்னைக்கு முத்தாரம் சூட்டி, உலக அரங்கில் முன்னிறுத்த பெரும் பாடுபட்டனர் என்று சொன்னால் அது மிகையல்ல.

புதுச்சேரியின் வரலாற்றில் ஒரு பெரும்பகுதி பிரெஞ்சு ஆட்சியின்கீழ் இருந்ததன் விளைவாக இங்கு பிரெஞ்சு மொழி இலக்கியமும் வளர்ச்சி பெற்றது. பல பிரெஞ்சு இலக்கியக் கழகங்கள் இன்றும் இங்கு இயங்கி வருகின்றன.

வானிலை[தொகு]

காட்சிக்கூடம்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புதுச்சேரி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_(நகரம்)&oldid=2374022" இருந்து மீள்விக்கப்பட்டது