காரைக்கால் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி) ஒன்றியப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களான (1) புதுச்சேரி (2) காரைக்கால் (3)மாஹே (4) ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளில் பரப்பிலும் மக்கள் தொகையிலும் காரைக்கால் மாவட்டம் இரண்டாவது இடத்தில் அமைகிறது. காரைக்கால் என்ற சொல்லுக்கு "சுண்ணாம்பு கால்வாய்" "மீன் கால்வாய்" என பலரும் பொருள் கூறுவதால் இதன் பெயர் காரணம் சரிவர அறியப்படவில்லை. இம்மாவட்டம் 161 ச.கிமீ பரப்பளவு உடையது. காரைக்கால் மாவட்டமானது காரைக்கால், திருமலைராஜன்பட்டினம், திருநள்ளாறு, அம்பகரத்தூர்,நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி ஆகிய ஊர்களை உள்ளடக்கியது.

இது காவிரி கழிமுகத்தில் அமைந்துள்ளது.அரசலாறு, உப்பனாறு, முல்லையாறு, திருமலைராயன் ஆறு ஆகிய ஆறுகள் காரைக்கால் மாவட்டத்தில் ஓடுகின்றன. மேற்கு எல்லையாக திருவாரூர் மாவட்டமும், வட தென் எல்லையாக நாகப்பட்டினம் மாவட்டமும் கிழக்கு எல்லையாக வங்காள விரிகுடாவும் உள்ளது. இதை நாகப்பட்டிண மாவட்டத்துக்கு இடையில் உள்ள பகுதி என்று சொல்வதும் பொருந்தும். திருநள்ளாறு என்ற இந்துக்களின் புகழ் பெற்ற ஊர் இங்கு உள்ளது. காரைக்கால் நகரில் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2001 ஆம் கணக்கெடுப்புப்படி 1,70,640 மக்கள்தொகை உடையதாகவும் உள்ளது. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகையில் 49.01 % நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.[1]. 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 200314 [2]. தமிழ் பெரும்பாலோரின் மொழி. பிரெஞ்சும் சிலரால் பேசப்படுகிறது. இலங்கை தமிழர்களும் இங்கு வசிக்கிறார்கள்.

காரைக்கால் அம்மையார் கோவில்[தொகு]

காரைக்காலில் 63 நாயன்மார்கள் உள்ள ஒருவரான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் வாழ்ந்தார். சிவ பெருமானால் "அம்மையே" என்று அழைக்கபட்ட அம்மையார் வாழ்ந்த இடம் காரைக்கால் மாநகர்.இங்கு உள்ள அம்மையார் கோவிலில் வருடா வருடம் மாங்கனி திருவிழா நடைபெறும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2-vol2/data_files/Puducherry/Chapter/Chapter-4.pdf
  2. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்_மாவட்டம்&oldid=2602841" இருந்து மீள்விக்கப்பட்டது