புதுச்சேரி வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புதுச்சேரி வானூர்தி நிலையம்
பாண்டிச்சேரி விமானநிலையம்
Pondicherry Airport.jpg
புதிய முனையம்
ஐஏடிஏ: PNYஐசிஏஓ: VOPC
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் ஏஏஐ
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம்
சேவை புரிவது புதுச்சேரி
அமைவிடம் லாசுப்பேட்டை
உயரம் AMSL 134அடி ft / 41மீ m
ஆள்கூறுகள் 11°57′57″N 079°48′46″E / 11.96583°N 79.81278°E / 11.96583; 79.81278
நிலப்படம்
PNY is located in Puducherry
PNY
PNY
PNY is located in இந்தியா
PNY
PNY
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
07/25 7,546 2,300 தார்

புதுச்சேரி வானூர்தி நிலையம் (Puducherry Airport, (ஐஏடிஏ: PNYஐசிஏஓ: VOPC) இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் லாசுப்பேட்டையில் அமைந்துள்ள ஓர் வானூர்தி நிலையமாகும். இந்த நிலையத்தில் பட்டியலிடப்பட்ட சேவைகளும் ஒப்பந்த பறப்புகளும் உள்ளூர் பறப்புப் பயிற்சிப் பள்ளியும் இயங்குகின்றன. பெருகிவரும் வான் பயணத் தேவைகளைக் கருத்தில்கொண்டு புதுச்சேரி அரசு இந்த வானூர்தி நிலையத்தை அளவில் பெரிய வானூர்திகளும் பயன்படுத்துமாறு புதுப்பித்து புதிய முனையத்தை திறந்துள்ளது.[1] பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட இசுபைசுசெட் வானூர்தி இந்த முனையத்தில் முதன்முதலாக சனவரி 17, 2013 அன்று வந்திறங்கியது.[2]

கட்டமைப்பு[தொகு]

இந்த வானூர்தி நிலையத்தை புதுப்பிக்க புதுவை அரசுக்கும் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்திற்கும் புரிந்துணர்வு உடன்பாடு சூன் 2007இல் கையெழுத்தானது. இதன் முதற்கட்டமாக ஏடிஆர் இரக வானூர்திகள் வந்துசெல்லுமாறு ஓடுதளம் 260 மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக புதுவை ஒன்றியப் பகுதிக்குள் 19.92 எக்டேர் நிலப்பரப்பை ரூ.18.95 கோடிக்கு அரசு கையகப்படுத்தி சூலை 2007இல் ஆணையத்திற்கு வழங்கியது.

புதுச்சேரி வானூர்தி நிலையத்தில் தாரிடப்பட்ட (கருங்காரை) 1500 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுதளமொன்று 07/25 திக்கில் ஆற்றுபடுத்தபட்டுள்ளது. புது முனையக் கட்டிடத்தில் நெருக்கடிமிக்க நேரங்களில் 300 பயணியருக்கு சேவை வழங்குமாறு வசதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுக் கருவிகளில் வானூர்தி நிலைய வழிகாட்டலையும் அடங்கி உள்ளது.[3]

செயற்படுத்தப்படும் இரண்டாம் கட்டத்தில் பெரிய தாரைப்பொறி வானூர்திகளும் இறங்குமாறு ஓடுதளத்தை மேலும் 1100 மீட்டருக்கு விரிவுபடுத்த ஒன்றியப் பகுதியை அடுத்துள்ள தமிழ்நாட்டிலிருந்து 200 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.[4]

வான்வழிச் சேவைகளும் சேருமிடங்களும்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
ஸ்பைஸ் ஜெட் ஐதராபாத்

மேற்சான்றுகள்[தொகு]