அவுரங்காபாத் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 19°51′46″N 75°23′53″E / 19.86278°N 75.39806°E / 19.86278; 75.39806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவுரங்காபாத் வானூர்தி நிலையம்
Aurangabad Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம்அவுரங்காபாத், மகாராட்டிரம்
உயரம் AMSL1,917 ft / 582 m
ஆள்கூறுகள்19°51′46″N 75°23′53″E / 19.86278°N 75.39806°E / 19.86278; 75.39806
நிலப்படம்
IXU is located in மகாராட்டிரம்
IXU
IXU
இந்தியாவில் வானூர்தி நிலையம் அமைவிடம்
IXU is located in இந்தியா
IXU
IXU
IXU (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
09/27 9,300 2,835 காண்கிரிட்/அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (2014)
பணிகள் போக்குவரத்து347,734(0%)
விமானப் போக்குவரத்து4,521(24%)
சரக்கு கையாளுதல்981 (51%)

அவுரங்காபாத் வானூர்தி நிலையம் (Aurangabad Airport)(ஐஏடிஏ: IXUஐசிஏஓ: VAAU)இந்தியாவின் மகாராட்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள பொது விமான நிலையமாகும். இது சுமார் 5.5 அவுரங்காபாத் நகர மையத்திலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவிலும் தொடருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவில் அவுரங்காபாத்-நாக்பூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திற்குச் சொந்தமானது. பயணிகள் முனையம் 190,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

சத்ரபதி சம்பாஜி மகாராஜுவானூர்தி நிலையம் என் பெயர் மாற்றம் செய்ய 2020ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி மகாராட்டிரா அரசு முடிவு செய்து, அமைச்சரவை ஒப்புதல் அளித்து முடிவினை மத்திய பொது விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பியது.

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாதில்லி, மும்பை
இண்டிகோஅகமதாபாத், தில்லி, ஐதராபாத், மும்பை

விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள்[தொகு]

  • ஏப்ரல் 26, 1993 அன்று, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 491 (ஐசி 491), போயிங் 737-2 ஏ 8 (பதிவுசெய்யப்பட்ட விடி-ஈசிக்யூ) தில்லியிலிருந்து மும்பைக்கு ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் அவுரங்காபாத் ஆகிய நிறுத்தங்களுடன் தில்லியில் புறப்பட்டது. அதிக எடை கொண்ட இந்த விமானம் அவுரங்காபாத்தின் ஓடுபாதை 09லிருந்து வெப்ப மற்றும் ஈரப்பதமான வெப்பநிலையில் புறப்படத் தொடங்கியது. ஓடுபாதையின் முடிவில் ஏறக்குறைய ஓடுபாதையின் முடிவில் மேலெழுந்த நிலையில் நெடுஞ்சாலையில் சென்ற சரக்குந்துடன் உரசியது. இதனால் இடது பிரதான தரையிறங்கும் பற்சில்லு, இடது எந்திரத்தின் அடிப்பகுதி கோலிங் மற்றும் உந்துதல் தலைகீழ் ஆகியவை சாலையின் மட்டத்திலிருந்து ஏழு அடி உயரத்தில் சரக்குந்தின் இடது பக்கத்தைச் சேதப்படுத்தின. அதன்பிறகு விமானம் அதிக அழுத்தம் கொண்ட மின் இணைப்பு கம்பியினை 3 கி.மீ. துரத்திற்கு வடகிழக்கு ஒடுபாதையில் உரசி தரையினைத் தொட்டது. 112 பயணிகள், 6 பணியாளர்கள், விமானி, இணை விமானியுடன் பயணித்த இந்த விமானத்தில் 63 பேர் உயிர் தப்பினர். 53 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் உயிர் இழந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Traffic News for the month of March 2020: Annexure-III" (PDF). Airports Authority of India. 22 May 2020. p. 3. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  2. "Traffic News for the month of March 2020: Annexure-II" (PDF). Airports Authority of India. 22 May 2020. p. 3. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020.
  3. "Traffic News for the month of March 2020: Annexure-IV" (PDF). Airports Authority of India. 22 May 2020. p. 3. பார்க்கப்பட்ட நாள் 22 May 2020. url-status=live

வெளி இணைப்புகள்[தொகு]