பற்சில்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Intermeshing gears in motion

பற்சக்கரம் ஒரு அடிப்படை இயந்திர பாகம் ஆகும். இது ஒரு சக்கரத்தையும் அதன் மீது பற்களையும் கொண்டது. ஒரு பல்சக்கரத்தின் பற்களும் வேறு ஒரு பற்சக்கரத்தின் பற்களும் பொருந்தி, ஒரு சில்லில் இருக்கும் இயக்க ஆற்றலை மற்ற பற்சக்கரம் பெறக்கூடியதாக அமைவதே பற்சக்கரத்தின் தொழிற்பாடுகளில் முக்கியமானது. பற்சக்கரம் கடிகாரம், மிதிவண்டி, பல்வேறு தானுந்து உறுப்புகள், மின்னோடிகள் உட்பட பல்வேறு இயந்திரங்களில் ஒரு பாகமாக இருக்கிறது.

பற்சக்கரத்தின் ஐந்து தொழிற்பாடுகள்:

  • ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது இயக்க ஆற்றலை மற்ற பற்சக்கரத்திற்கு மாற்றுவது.
  • ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது மற்ற பற்சக்கரத்தின் சுழற்சித் திசையை நேர்மாற்றுவது.
  • ஒரு பற்சக்கரம் மற்ற பற்சக்கரத்தோடு பொருந்தும் பொழுது மற்ற பற்சக்கரத்தின் சுழற்சி வேகத்தை கூட்டுவது அல்லது குறைப்பது.
  • ஒரு பற்சக்கரம் மற்ற அச்சு மாறிய பற்சக்கரத்துக்கு இயக்க ஆற்றலை தருவது.
  • இரு பற்சக்கரங்களின் சுழற்சியை ஒருமைப்படுத்தி (synchronized) வைப்பது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பற்சில்லு&oldid=1890908" இருந்து மீள்விக்கப்பட்டது