பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க வானூர்தி நிலையக் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டு வான் போக்குவரத்து சங்க வானூர்தி நிலையக் குறியீடு (IATA airport code), சுருக்கமாக ஐஏடிஏ குறியீடு அல்லது ஐஏடிஏ அமைவிட அடையாளம், ஐஏடிஏ நிலையக் குறியீடு, அமைவிட அடையாளம்[1] என்றெல்லாம் குறிப்பிடப்படுவது உலகின் பல வானூர்தி நிலையங்களையும் அடையாளப்படுத்தும் வண்ணம் பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) வரையறுத்துள்ள மூன்று ஆங்கில எழுத்துருக்களைக் கொண்ட குறியீடு ஆகும். ஓர் வானூர்தி நிலையத்தில் பயண ஏற்பு மேசைகளில் தனியாக எடுத்துச் செல்லுமாறு கொடுக்கப்படும் பெட்டிகளுக்கு இணைக்கப்படும் பெட்டிப் பட்டைகளில் இந்த எழுத்துருக்கள் பெரியதாக அச்சிடப்பட்டிருப்பதைக் காணலாம்; இது இந்தக் குறியீட்டின் ஒரு பயனை எடுத்துக்காட்டுவதாகும்.

இந்தக் குறியீடுகள் வழங்கப்படுவதை ஐஏடிஏ தீர்மானம் 763 ஒழுங்குபடுத்துகிறது. இவ்வாறு வழங்கப்படுவதை மொண்ட்ரியாலில் உள்ள சங்கத்தின் தலைமையகம் மேலாண்மை செய்கிறது. இந்தக் குறியீடுகளை ஆண்டுக்கிருமுறை ஐஏடிஏ வான்வழி குறியீட்டுத் திரட்டில் வெளியிடப்படுகிறது.[2] மற்றொரு குறியீடான நான்கு எழுத்துருக்களைக் கொண்ட ஐசிஏஓ குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வானூர்தி நிலையங்களைத் தவிர தொடர்வண்டிப் போக்குவரத்து நிலையங்களுக்கும் ஒஆனூர்தி நிலைய சேவையாளர்களுக்கும் குறியீடுகளை அளிக்கின்றனர். ஐஏடிஏ குறியீட்டின்படி அகரவரிசையில் இடப்பட்ட பட்டியல்கள் உள்ளன. வான்வழி நிறுவனங்களுடன் உடன்பாடு கண்ட தொடர்வண்டி நிறுவனங்களின் தொடர்வண்டி நிலையங்களுக்கான பட்டியலும் உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]