உள்ளடக்கத்துக்குச் செல்

அசுபால்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஸ்பால்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாக்கடல் பகுதியில் கிடைக்கும் இயற்கையான அசுபால்ட்டு/பிற்றுமின்
தூய்மித்த அசுபால்ட்டு/பிற்றுமின்
குயின்சுலாந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையொன்று அசுபால்ட்டு/பிற்றுமின்னின் பிசுக்குமையைச் சாற்றுகிறது

அசுபால்ட்டு (asphalt, /ˈæsfɔːlt/ (கேட்க) அல்லது /ˈæʃfɔːlt/ அல்லது /ˈæsʃfɛlt/) மாற்றுச்சொல் பிற்றுமின் (bitumen, /ˈbɪʊmən/), என்பது பாறை எண்ணெயின் ஒட்டிக்கொள்ளும் கருநிற உயரிய பிசுக்குமைத் தன்மையுடைய நீர்ம அல்லது குறை திண்ம ஒரு வடிவம் ஆகும். இது இயற்கையாகவும் காணப்படுவதுண்டு; அல்லது தூய்மைப்படுத்தப் பட்ட நிலையிலும் பெறலாம். இது கரிப்பிசினின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனை அசுபால்லடம் என்றும் தார் என்றும் அழைப்பதுண்டு.[1]

அசுபால்ட்டு/பிற்றுமின்னின் முதன்மைப் பயன்பாடு சாலை கட்டமைப்பாகும். இதனை சாலையிடப் பயன்படுத்தப்படும் சல்லிக்கற்களை பிணைக்கும் பிசினாகப் பயன்படுத்தி அசுபால்ட்டு பைஞ்சுதை உருவாக்கப்படுகிறது. அடுத்து சாய் கூரைகளின் இணைப்புக்கள், சமநிலை மேற்கூரைகளின் தளங்களில் நீர்புகா கட்டமைப்புக்களுக்கு அசுபால்ட்டு பயன்படுத்தப்படுகிறது.

இயற்கையில் கிடைக்கும் அசுபால்ட்டு/பிற்றுமின் சிலநேரங்களில் "கச்சா பிற்றுமின்" எனப்படுகிறது. இதன் பிசுக்குத்தன்மை குளிர்ந்த கரும்புப்பாகு போன்றுள்ளது[2][3] பாறை எண்ணெயை 525 °C (977 °F)]க்கு காய்ச்சி வடித்த பிற்றுமின் "தூய்மித்த பிற்றுமின்" எனப்படுகிறது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Abraham, Herbert (1938). Asphalts and Allied Substances: Their Occurrence, Modes of Production, Uses in the Arts, and Methods of Testing (4th ed.). New York: D. Van Nostrand Co. பார்க்கப்பட்ட நாள் 2009-11-16. Full text at Internet Archive (archive.org)
  2. "Oil Sands - Glossary". Oil Sands Royalty Guidelines. Government of Alberta. 2008. Archived from the original on 2007-11-01. பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.
  3. Walker, Ian C. (1998), Marketing Challenges for Canadian Bitumen (PDF), Tulsa, OK: International Centre for Heavy Hydrocarbons, archived from the original (pdf) on 2012-03-13, பார்க்கப்பட்ட நாள் 2013-05-03, Bitumen has been defined by various sources as crude oil with a dynamic viscosity at reservoir conditions of more than 10,000 centipoise. Canadian "bitumen" supply is more loosely accepted as production from the Athabasca, Wabasca, Peace River and Cold Lake oil-sands deposits. The majority of the oil produced from these deposits has an API gravity of between 8° and 12° and a reservoir viscosity of over 10,000 centipoise although small volumes have higher API gravities and lower viscosities.

நூற் கோவை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிற்றுமின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுபால்ட்டு&oldid=3787151" இலிருந்து மீள்விக்கப்பட்டது