உள்ளடக்கத்துக்குச் செல்

ஓடுபாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை வானூர்தி நிலையத்தில் உள்ள ஒரு ஓடுபாதை

ஓடுபாதை (Runway) என்பது வானூர்தி நிலையத்தில் நிலத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு செவ்வகப் பகுதியாகும்.[1] இவை வானூர்திகள் புறப்பட மற்றும் தரை இறங்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஓடுபாதைகள் மனிதனால் மேற்பரப்பில் மண், தார், பனி, பைஞ்சுதை கலந்து உருவாக்கப்படுகின்றன. நிலையான இறக்கைகள் கொண்ட விமானங்கள் புறப்படும் போது பறக்கும் வேகத்தை அடைவதற்கும், தரையிறங்கும் போது வேகத்தை குறைத்து நிற்கவும் ஓடு பாதைகள் தேவைப்படுகின்றன. காற்று வீசும் திசையில் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகியவை சாதகமானதாகும். பெரிய விமான நிலையங்களில் பொதுவாக வெவ்வேறு திசைகளில் பல ஓடுபாதைகளைக் இருக்கும். இதனால் காற்றின் திசையோடு கிட்டத்தட்ட ஒத்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. International standards and recommended practices. Aerodromes. Annex 14 to the Convention on International Civil Aviation (in English). ICAO. 1951. p. 17.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Enviroware airport runway design". Enviroware. பார்க்கப்பட்ட நாள் 24 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓடுபாதை&oldid=3889131" இலிருந்து மீள்விக்கப்பட்டது