வேலூர் வானூர்தி நிலையம்
வேலூர் வானூர்தி நிலையம் Vellore Airport | |||
---|---|---|---|
ஐஏடிஏ: none – ஐசிஏஓ: VOVR | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||
உரிமையாளர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
சேவை புரிவது | வேலூர் | ||
அமைவிடம் | வேலூர் | ||
உயரம் AMSL | 764 ft / 233 m | ||
ஆள்கூறுகள் | 12°54′00″N 79°04′01″E / 12.90°N 79.067°Eஆள்கூறுகள்: 12°54′00″N 79°04′01″E / 12.90°N 79.067°E | ||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
07/25 | 2,600 | 792 | PEM |
வேலூர் வானூர்தி நிலையம் (Vellore Airport, (ஐசிஏஓ: VOVR) தமிழ்நாட்டின் வேலூர் நகரத்திற்கு கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஓர் வானூர்தித் தடமாகும். 51.5 ஏக்கர்களில் (208,000 சதுர மீட்டர்கள்) அமைந்துள்ள இந்த வானூர்தித் தடம் மதராசு பிளையிங் கிளப்பின் பயிற்சி விமானிகளுக்காக சூலை 2006இல் மீண்டும் செயலாக்கத்திற்கு வந்தது.[1] சென்னை வானூர்தி நிலையத்தில் வணிக வான்வழித் தடங்களின் பெருக்கத்தால் அங்கு இயங்கி வந்த கிளப்பின் செயல்பாடு மார்ச்சு 2011இல் நிறுத்தப்பட்டது.[2] இதற்கு மாற்றாக இங்கு முனையக் கட்டிடங்கள் கட்டித் தர தமிழ்நாடு அரசு முன்வந்தது. 2009ஆம் ஆண்டிற்குள் 45 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் வானூர்திகள் இயங்கும் வண்ணம் இவற்றைக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் (AAI) தென் மண்டல "முடங்கிய வான்நிலையங்களின் மீள்செயலாக்கத் திட்டத்தில்" வேலூர் சேர்க்கப்பட்டுள்ளது.[3]
வான்வழிச் சேவைகளும் சேரிடங்களும்[தொகு]
தற்போது யாதொரு வணிகச் சேவையும் இங்கிருந்து இயங்கவில்லை.
சிரீ இராசீவ் காந்தி வான்வழி அறிவியல் கழகம் மற்றும் விமானிகள் பயிற்சி அகாதமி[தொகு]
வேலூர் வானூர்தி நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் அங்கமாக அரசு சிரீ இராசீவ் காந்தி வான்வழி அறிவியல் கழகம் மற்றும் விமானிகள் பயிற்சி அகாதமியை இங்கு நிறுவ உள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இதற்கானப் பணியை மேற்கொள்ளும்.[4]
சான்றுகோள்கள்[தொகு]
- ↑ "Madras Flying Club gets access to Vellore airstrip". தி இந்து. 23 July 2006. http://www.hindu.com/2006/07/23/stories/2006072305390400.htm. பார்த்த நாள்: 29 January 2012.
- ↑ "AAI tells Madras Flying Club to stop training on Vellore airstrip". தி இந்து. 25 May 2011. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2046895.ece. பார்த்த நாள்: 29 January 2012.
- ↑ "Six idle airports to be activated". தி இந்து. 17 August 2006. http://www.hindu.com/2006/08/17/stories/2006081715410100.htm. பார்த்த நாள்: 29 January 2012.
- ↑ http://www.tn.gov.in/policynotes/pdf/transport.pdf
வெளி இணைப்புகள்[தொகு]
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VOVR குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.