இந்திய வான்படை கல்விக்கழகம்

ஆள்கூறுகள்: 17°37′38″N 078°24′12″E / 17.62722°N 78.40333°E / 17.62722; 78.40333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வான்படை அகாதமி
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவ அகாதமி
இயக்குனர்இந்திய வான்படை
அமைவிடம்துண்டிக்கல், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், தெலுங்கானா, இந்தியா
உயரம் AMSL2,013 ft / 614 m
ஆள்கூறுகள்17°37′38″N 078°24′12″E / 17.62722°N 78.40333°E / 17.62722; 78.40333
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
10R/28L 6,800 2,073 அஸ்பால்டு
10L/28R 8,250 2,515 சிமெண்ட் தளம்
வளாகம் 7,050 ஏக்கர்கள்


இந்திய வான்படை அகாதமி (Indian Air Force Academy, Dundigal) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் உள்ள துண்டிக்கல் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் நகரத்திலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது.[1]இந்த வான்படை அகாதமி 1961-இல் நிறுவப்பட்டு, 1971-ஆம் ஆண்டு முதல் தன் பணியை துவக்கியது. இதன் வளாகம் 7050 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.

இந்த வான் படை அகாதாமி, இந்திய வான்படையில் சேரும் பயிற்சி மாணவர்களுக்கு போர் வானூர்திகளை இயக்குதல், பராமரித்தல் மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவிகளை இயக்கும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகிறது. மேலும் இந்தியக் கடற்படை அகாதமியின் பயிற்சி மாணவர்களுக்கு கடற்படை போர் வானூர்திகளை இயக்க பயிற்சி வழங்குகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Air Force Academy, Dundigul
என்பதின் ஊடகங்கள் உள்ளன.