இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம்
Imphal airport.jpg
ஐஏடிஏ: IMFஐசிஏஓ: VEIM
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர் மணிப்பூர் அரசு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது இம்பால், மணிப்பூர்
அமைவிடம் இம்பால், மணிப்பூர், இந்தியா
உயரம் AMSL 774 m / 2 ft
ஆள்கூறுகள் 24°45′36″N 093°53′48″E / 24.76000°N 93.89667°E / 24.76000; 93.89667ஆள்கூற்று: 24°45′36″N 093°53′48″E / 24.76000°N 93.89667°E / 24.76000; 93.89667
நிலப்படம்

Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Manipur" does not exist.

ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
04/22 2 9,009 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2016 - மார்ச் 2017)
பயணிகள் 8,86,338.
வானூர்தி இயக்கங்கள் 6,598.
சரக்கு டன்கள் 4,720.
மூலம்: ஏஏஐ[1] [2][3]

இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Imphal International Airport, (ஐஏடிஏ: IMFஐசிஏஓ: VEIM)) மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது இம்பால் நகரிலிருந்து தெற்கே 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், குவகாத்திக்குப் பிறகு கட்டமைக்கப்பட்டுள்ள இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும்; தவிரவும் இப்பகுதியில் குவகாத்தி, அகர்த்தலாவிற்கு அடுத்து மூன்றாவது மிக நெருக்கடியான வானூர்தி நிலையமும் ஆகும். இந்த வானூர்தி நிலையம் முன்னாள் அரசர் திகேந்திரஜித் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் வடகிழக்குப் பகுதியை நாட்டின் முக்கிய நகரங்களான பெங்களூர், தில்லி, கொல்கத்தா உடனும் அடுத்துள்ள மியான்மரின் மண்டலை நகருடனும் வான்சேவையால் இணைக்கிறது. ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ மற்றும் அல்லையன்சு ஏர் ஆகிய வான்சேவை நிறுவனங்கள் இங்கிருந்து தங்கள் பறப்புக்களை அகர்தலா, சில்சார் , அய்சால், ஜோர்ஹாட் நகரங்களுக்கு இயக்குகின்றனர். இந்த வானூர்தி நிலையம் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.

வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
ஏர் இந்தியா தில்லி, குவகாத்தி, கொல்கத்தா
ஏர்ஏசியா இந்தியா தில்லி,[4] குவகாத்தி
இன்டிகோ அகமதாபாத்து, அகர்த்தலா, பெங்களூரு, தில்லி, குவகாத்தி, ஐதராபாத்து, கொல்கத்தா, திருவனந்தபுரம்
ஜெட் ஏர்வேஸ் தில்லி, குவகாத்தி, கொல்கத்தா, மும்பை, புனே

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் இம்பால் பன்னாட்டு வானூர்தி நிலையம் பற்றிய ஊடகங்கள்