ஜோர்ஹாட்
ஜோர்ஹாட் | |
---|---|
ஆள்கூறுகள்: 26°45′N 94°13′E / 26.75°N 94.22°E | |
நாடு | இந்தியா |
அசாம் | மேல் அசாம் |
மாவட்டம் | ஜோர்ஹாட் மாவட்டம் |
ஜோர்ஹாட் மாவட்டம் | நகராட்சி உறுப்பினர்கள் |
ஜோர்ஹாட் நகராட்சி | 1909 |
அரசு | |
• வகை | ஜோர்ஹாட் நகராட்சி |
பரப்பளவு[1][2][3] | |
• மொத்தம் | 9 km2 (3 sq mi) |
ஏற்றம் | 116 m (381 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,53,889 |
• அடர்த்தி | 2,851/km2 (7,380/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | அசாமிய மொழி, இந்தி மற்றும் பழங்குடியின மொழிகள் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 785001 |
தொலைபேசி குறியீடு எண் | 0376 |
வாகனப் பதிவு | AS-03 |
எழுத்தறிவு | 89.42% |
Legislature type | நகராட்சி |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி | 1 |
சட்டமன்றத் தொகுதி | 1 |
நகரமைப்புக் குழு | 1 |
ஜோர்ஹாட் (Jorhat) (pron: ˈʤɔ:(r)ˌhɑ:t)// (கேட்க)[4]இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பண்பாட்டுத் தலைமையிட என கருதப்படுகிறது. மேலும் ஜோர்ஹாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.
புவியியல்[தொகு]
ஜோர்ஹாட் நகரம் 26°45′N 94°13′E / 26.75°N 94.22°E மேல் அசாம் பகுதியில் 116 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[5] இம்மாவட்டத்தின் வடக்கில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது.
9 கிமீ பரப்பளவு கொண்ட ஜோர்ஹாட் நகராட்சி மன்றம் 31 உறுப்பினர்களைக் கொண்டது. [1]>[6]
மக்கள் தொகையியல்[தொகு]
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஜோர்ஹாட் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,53,889 ஆகும். அதில் ஆண்கள் 79,574; பெண்கள் 74315 ஆக உள்ளனர். மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்றவர்கள் 125,144 (89.42%) ஆக உள்ளனர். பாலினவிகிதம் ஆயிரம் ஆண்களுகு 934 வீதம் உள்ளனர்.
வரலாறு[தொகு]
அசாமிய மொழியில் ஜோர்ஹாட் என்பதற்கு இரட்டை சந்தைகள் என்று பொருள். போக்தோய் ஆற்றின் இரு கரையிலும் இருந்த மச்சார்ஹாட் மற்றும் சௌக்கிஹாட் எனும் இரண்டு சந்தைகளால் இந்நகரத்திற்கு ஜோர்ஹாட் எனும் பெயராயிற்று. கிபி 18ம் நூற்றாண்டில் ஜோர்ஹாட் நகரம் அகோம் பேரரசின் இறுதித் தலைநகராக விளங்கியது. 1826ல் நடைபெற்ற முதல் முதல் ஆங்கிலேய - பர்மியப் போரில், பர்மாவை வீழ்த்திய பிரித்தானிய இந்தியாப் படைகள், ஜோர்ஹாட் நகரம் உள்ளிட்ட தற்கால அசாம், மணிப்பூர் மற்றும் அரக்கான் மலைகளைப் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. 1885ல் ஜோர்ஹாட் நகரத்தில் குற்றகலப் பாதை அமைக்கப்பட்டு தொடருந்துகள் ஓடியது.
போக்குவரத்து[தொகு]
வானூர்தி நிலையம்[தொகு]
ஜோர்ஹாட் வானூர்தி நிலையம், ஜோர்ஹாட் நகரத்திலிருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து கொல்கத்தா மற்றும் குவகாத்தி, திஸ்பூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளது.
தொடருந்து நிலையம்[தொகு]
ஜோர்ஹாட் தொடருந்து நிலையம் குவகாத்தி, திப்ருகார், திமாப்பூர், மரியானி நகரங்களை இருப்புப் பாதை மூலம் இணைக்கிறது. [7]
படக்காட்சியகம்[தொகு]
முகலாயப் படைகளை வென்ற அகோம் பேரரசின் படைத்தலைவர் லசித் பர்புகனின் நினைவிடம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Jorhat Municipal Board, Functions of Jorhat Municipality".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-11-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/1813_PART_B_DCHB_JORHAT.pdf
- ↑ "Jorhat Municipal Board (JMB)". jorhatmunicipalboard.org. 2017-11-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "redirect to /world/IN/03/Jorhat.html". fallingrain.com.
- ↑ http://www.census2011.co.in/data/town/801595-jorhat-assam.html
- ↑ [https://indiarailinfo.com/departures/jorhat-town-jttn/2162 jorhat-Town Railway Station}
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்சனரியில் ஜோர்ஹாட் என்னும் சொல்லைப் பார்க்கவும். |
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Jorhat
- Jorhat NIC
- Tourism Scope, Assam பரணிடப்பட்டது 2018-01-24 at the வந்தவழி இயந்திரம்
- Yellow pages of Jorhat பரணிடப்பட்டது 2017-04-24 at the வந்தவழி இயந்திரம்
- Shree Digamber Jain Samaj Jorhat
- Jorhat Jorhat city
- Jorhat census 2011
- Job In Jorhat[தொடர்பிழந்த இணைப்பு]