உள்ளடக்கத்துக்குச் செல்

ஜபல்பூர் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 23°11′05″N 080°03′31.5″E / 23.18472°N 80.058750°E / 23.18472; 80.058750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜபல்பூர் வானூர்தி நிலையம்

தும்னா வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுஜபல்பூர்,பந்தாவ்கர் தேசியப் பூங்கா, கன்கா தேசியப் பூங்கா, அமர்கந்தாக். கட்னி,சாகர், தமோ, ரேவா, சத்னா, ஷட்டோல், உமரியா, அனூப்பூர்.
அமைவிடம்தும்னா
உயரம் AMSL1,624 ft / 495 m
ஆள்கூறுகள்23°11′05″N 080°03′31.5″E / 23.18472°N 80.058750°E / 23.18472; 80.058750
இணையத்தளம்www.aai.aero/allAirports/Jabalpur.jsp
நிலப்படம்
JLR is located in மத்தியப் பிரதேசம்
JLR
JLR
இந்தியாவில் அமைவிடம்
JLR is located in இந்தியா
JLR
JLR
JLR (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
06/24 6,522 1,988 ஆஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (April 2020-March 2021)
பயணி போக்குவரத்து126,647 (59.5%)
விமானப் போக்குவரத்து2384 (56.3%)

ஜபல்பூர் வானூர்தி நிலையம் (Jabalpur Airport)(ஐஏடிஏ: JLRஐசிஏஓ: VAJB)(பேச்சு வழக்கில் தும்னா விமான நிலையம் என்று குறிப்பிடப்படுகிறது) என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரின் கிழக்கே 25 கி. மீ. தொலைவில் உள்ள வானூர்தி நிலையம் ஆகும். இது பயணிகள் மற்றும் விமான இயக்கத்தின் அடிப்படையில் இந்தூரில் உள்ள தேவி அகில்யா பாய் கோல்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் போபாலில் உள்ள ராஜா போஜ் பன்னாட்டு விமான நிலையத்திற்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாகும். இப்பகுதியில் உள்ள விமானப் பயணிகளுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் இந்த விமான நிலையத்தை இயக்குகிறது. திசம்பர் 2021-ல் மேம்படுத்துதல் பணிகள் நிறைவடைந்து புதிய முனையக் கட்டிடம் மார்ச் 2022-ல் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[1]

இந்த விமான நிலையம் கிழக்கு மத்தியப் பிரதேசம் முழுவதும், குறிப்பாக மகாகௌஷல் பகுதிக்கும் சேவையாற்றுகிறது. கன்கா தேசியப் பூங்கா மற்றும் பாந்தவ்கர் தேசியப் பூங்கா மற்றும் நர்மதா ஆற்றின் இருபுறமும் உள்ள பளிங்கு பாறைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகிலுள்ள பேடாகாட்டில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தினை பயன்படுத்துகின்றனர். இந்த வானூர்தி நிலையம் 960 ஏக்கர்கள் (390 ha) பரப்பில் அமைந்துள்ளது. அலையன்ஸ் ஏர், இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகியவை இங்கு விமானச் சேவைகளை இயக்குகின்றன.

வரலாறு

[தொகு]

இந்த வானூர்தி நிலையம் பிரித்தானியக் காலத்தில் கட்டப்பட்டு, 1930களில் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதனை ராயல் விமானப் படை மற்றும் ராயல் ஃப்ளையிங் கார்ப்ஸ் மூலம் இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்பட்டது. இது பொதுவாக ஜுபுல்பூர் ஏரோட்ரோம் என்று அறியப்பட்டது. மேலும் 1960கள் வரை பழைய ஓடுபாதையைக் கொண்டிருந்தது. பின்னர் புதிய ஓடுபாதை பழைய ஓடுபாதையில் கட்டப்பட்டது. தும்னாவில் உள்ள ஏரோட்ரோம் திறக்கப்படுவதற்கு முன்பு, 1920களில் கூட ஜபல்பூர் நகர எல்லைக்குள் உள்ள பந்தய மைதானத்தில் விமானங்கள் தரையிறங்கின.[சான்று தேவை] 2015ஆம் ஆண்டில், வானூர்தி நிலைய விரிவாக்கத்திற்காக 468.43 ஏக்கர் நிலத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையத்திற்கு மாநில அரசு வழங்கியது.[1]

வசதிகள்

[தொகு]

தொடர்பு, வழிசெலுத்தல் மற்றும் கண்காணிப்பு

[தொகு]

விமான நிலையத்தில் அதி உயர் அதிர்வெண், தன்னியக்க முனைய தகவல் சேவை, எண்ணிம காணொளி பதிவு, விமான தொலைத்தொடர்பு வலையமைப்பு உள்ளிட்டப் பல வசதி உள்ளது. ஆர் டபுள்யு ஒய் விரிவாக்கம் முடிந்ததும் ஐ எல் எசு மற்றும் தன்னியக்கம் நிறுவப்படும். மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி, ஊடுகதிர் இயந்திரங்கள், பொது அறிவிப்பு வசதிகள் போன்ற விமான நிலைய அமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது. இந்த வசதிகள் இந்திய வானூர்தி நிலைய ஆணையத்தினால் நிறுவப்பட்டு, இயக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன.

ஓடுபாதை

[தொகு]

ஓடுபாதையானது ஏர்பஸ் 320 வகை/போயிங் 737-800 உள்ளிட்ட குறுகிய விமானச் சேவை செய்யும் திறன் கொண்டது மற்றும் இரவு தரையிறங்கும் வசதிகள் மற்றும் துல்லியமான அணுகுமுறை பாதை காட்டி வசதிகளைக் கொண்டுள்ளது . இது ஒரு A-320/போயிங்-737 அல்லது 2 ATR-72 விமானங்களுக்கான நிறுத்துமிடங்களையும் கொண்டுள்ளது.

முனைம்

[தொகு]

இந்த முனையமானது பயணிகள் அதிகமுள்ள நேரங்களில், 200 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இங்கு மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி தவிர 4 சோதனை பகுதி, பாதுகாப்புக்காகப் பயணிகளின் உடைமைகளை ஊடுகதிர் கொண்டு சோதிக்கும் இயந்திரம் ஒன்றும் உள்ளது. விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகள், மகிழ்வுந்து-அழைப்பு, இரவு தரையிறங்கும் வசதிகள், உணவகம் மற்றும் தன்னியக்க வங்கி இயந்திரம் வசதிகளும் உள்ளன. மத்தியப் பிரதேச அரசின் சுற்றுலா தகவல் மையம் செயல்படுகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய முதலுதவி மையம் விரைவில் செயல்பட உள்ளது.[சான்று தேவை]

விமானச் சேவை நிறுவனங்கள்

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
அலையன்ஸ் ஏர்பிலாசுபூர் வானூர்தி நிலையம், தில்லி[2]
இண்டிகோதில்லி, ஐதராபாத்து, இந்தூர், மும்பை
ஸ்பைஸ் ஜெட்[3]பெங்களூரு, தில்லி, மும்பை, புனே

விரிவாக்கம்

[தொகு]

சுமார் 500 பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையக் கட்டிடம், 115,180 சதுர அடி (10,701 மீ பரப்பில் நிறுவ, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முனையத்தில் மூன்று நகரும் பாலம், மேம்பட்ட பயணி உடைமைகளைச் சோதனை செய்யும் அமைப்பு மற்றும் 250க்கும் மேற்பட்ட வாகனம் மற்றும் பேருந்துகளுக்கான வாகன நிறுத்தம் உள்ள வசதிகளைக் கொண்டதாக இந்த முனையம் இருக்கும். இந்த முனையத்தினை மார்ச் 2022க்குள் கட்டிமுடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[1] இத்திட்டம் ஆகத்து 13, 2018 அன்று சுரேஷ் பிரபு, ஜெயந்த் சின்ஹா, ராகேஷ் சிங் உள்ளிட்டோரால் துவக்கி வைக்கப்பட்டது.[4]

விபத்து

[தொகு]

2015ஆம் ஆண்டு திசம்பர் 4ஆம் நாள், ஸ்பைஸ்ஜெட் விமானம் ஜபல்பூரில் தரையிறங்கும் போது காட்டுப் பன்றி கூட்டத்தின் மீது மோதியது. இதில் 3 பன்றிகள் இறந்தன. விமானம் ஓடுபாதையிலிருந்து சறுக்கி, இடது புறம் சரிந்ததால், இடது இயந்திர சேதமடைந்து பின்னர் நிறுத்தப்பட்டது. இருப்பினும் பயணிகளுக்குக் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Jabalpur Airport upgradation". Press Information Bureau. 29 September 2020. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
  2. "Alliance Air to commence flights between Bilaspur-Delhi from March". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 27 February 2021.
  3. "Spicejet flight schedule". SpiceJet. பார்க்கப்பட்ட நாள் 8 March 2021.
  4. "Foundation stone laid for upgradation of Jabalpur Airport". www.aninews.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-08.
  5. "Accident: Spicejet DH8D at Jabalpur on Dec 4th 2015, boar strike, runway excursion, left main and nose gear collapsed". Avherald.com. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.