பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுபுவனேசுவரம்
அமைவிடம்புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
திறக்கப்பட்டது17 ஏப்ரல் 1962
மையம்ஏர் ஒடிசா
உயரம் AMSL42 m / 138 ft
ஆள்கூறுகள்20°14′40″N 085°49′04″E / 20.24444°N 85.81778°E / 20.24444; 85.81778ஆள்கூறுகள்: 20°14′40″N 085°49′04″E / 20.24444°N 85.81778°E / 20.24444; 85.81778
இணையத்தளம்பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம்
நிலப்படம்
BBI is located in ஒடிசா
BBI
BBI
BBI is located in இந்தியா
BBI
BBI
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,380 4,525 அசுபால்ட்டு
14/32 2,743 9,000 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2017 – மார்ச் 2018)
பயணிகள்3250635 (Green Arrow Up Darker.svg39.4%)
வானூர்தி இயக்கங்கள்23155 (Green Arrow Up Darker.svg35.6%)
சரக்கு டன்கள்7843 (Red Arrow Down.svg4.8%)
மூலம்: ஏஏஐ[1][2][3]

பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Biju Patnaik International Airport, (ஐஏடிஏ: BBIஐசிஏஓ: VEBS)) பரவலாக புவனேசுவரம் வானூர்தி நிலையம், ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரத்திலுள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். [4] இந்த வானூர்தி நிலையம் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவரும் வானோட்டியும் முன்னாள் ஒடிசா முதல்வருமான பிஜு பட்நாயக் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. மார்ச் 5, 2013இல் புதிய முனையத்தை (T1) குடிசார் வான்பயண அமைச்சர் அசித்சிங் திறந்து வைத்தார். இந்த முனையம் அனைத்து உள்நாட்டுப் பறப்புகளுக்கும் பயன்படுத்தப்படும். மற்றொரு முனையம் (T2) சீரமைக்கப்பட்டு பன்னாட்டு பறப்புகளை கையாளும். இந்த வானூர்தி நிலையம் 836 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. [5] இதற்கு இந்திய அரசு அக்டோபர் 30, 2013இல் பன்னாட்டுத் தகுதி வழங்கியது. [6] இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் அண்மைய அறிக்கைகளின்படி இந்தியாவின் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையங்களில் 14வதாக பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட போக்குவரத்து 23.1% வளர்ச்சி கண்டுள்ளது.

முனையம்[தொகு]

முனையம் 1[தொகு]

முனையம் 1 உட்புறம்

ரூ.145 கோடி செலவில் கட்டப்பட்டு மார்ச் 2013இல் துவங்கப்பட்ட இந்த முனையம் ஆண்டுக்கு 4 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டது.[5][7] இந்தப் புதிய முனையம் இந்திய வானூர்திகள் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்ட 35 வானூர்தி நிலையங்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாக புத்தமைக்கப்பட்டது.[8]இரண்டடுக்கு கட்டிடமான T1 முனையத்தின் மொத்த பரப்பளவு 18,240 சதுர மீட்டர்கள் (196,300 sq ft) ஆகும். இங்கு 2 வான்பாலங்கள், 4 மின்தூக்கிகள், பல நகரேணிகள், 18 உட்பதிகை முகப்புகள், 3 வருகை பயணப்பெட்டி சுமைச்சுழலிகள், மருத்துவ நீரூற்று போன்றன அமைக்கப்பட்டுள்ளன. விரிவான இருக்கை பகுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடு, வருகை தங்குமிடங்களைத் தவிர மிகச் சிறப்பு விருந்தினர்களுக்கான ஓய்விடங்கள், பால் ஐட்சு மருத்துவ நீரூற்று ஓய்விடம், டகோட்டா ஓய்விடம், மேபெயர் ஓய்விடம் ஆகியனவும் அமைக்கப்பட்டுள்ளன.[5][9] சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக, பசுமைக் கட்டிட சீர்தரங்களின்படி கட்டமைக்கப்பட்டுள்ளது; கழிவுநீர்த் தூய்விப்பு அமைப்பும் மழைநீர் சேகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. முனையத்தின் உட்சுவர்கள் பழங்குடி அலங்காரங்கள், வடிவமைப்புகள், முகமூடிகள், ஒடிசா பண்பாட்டுச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.[10] சிற்றுண்டியகங்கள், பரிசுக் கடைகள், புத்தகக் கடைகள், கலைக் காட்சியகங்கள், கைவினை/கைத்தறி சிற்றங்காடிகள் அமைந்துள்ளன.[11] இப்புதிய முனையத்தை இலங்கோ இன்்ஃப்ராடெக் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.[12]

முனையம் 2[தொகு]

முனையம் 2 உட்புறம்

பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் முனையம் 2 தற்போது பன்னாட்டு இயக்கங்களை கையாள்கிறது. 1960களில் கட்டப்பட்ட இந்த முனையமே முதலில் இருந்தது. புதிய முனையம் 1 கட்டப்படும் வரை உள்நாட்டுப் பறப்புகள் இங்கிருந்தே இயக்கப்பட்டன. 5,178 சதுர மீட்டர்கள் (55,740 sq ft) பரப்பளவில் அமைந்துள்ள இந்த முனையத்தில் 6 உட்பதிகை முகப்புகள், 10 உட்புகல் முகப்புகள், 4 சுங்க முகப்புகள், பல்வேறு வசதிகள் மற்றும் பல்வேறு இருக்கை பகுதிகளைக் கொண்டுள்ளது.[13]

கடலோரக் காவல்படை வான்வளாகம்[தொகு]

பிஜு பட்நாயக் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் 743 டோர்னியர் வானூர்திகள் கொண்ட இந்தியக் கடலோரக் காவல்படையின் கடற்காவல் படையணியின் வான்வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இது திசம்பர் 15, 2014இல் திறந்து வைக்கப்பட்டது.[14] இந்தப் படையணி வடகிழக்கு மேலாண்மையின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகின்றது. ஒடிசாவின் கடலோரத்தில் கடல்சார் பாதுகாப்பை இவை உறுதி செய்கின்றன. [15]

வான்சேவை நிறுவனங்களும் சேரிடங்களும்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர்ஏசியா கோலாலம்பூர்–பன்னாடு
ஏர்ஏசியா இந்தியா பெங்களூரு, சென்னை, ஐதராபாத்து, கொல்கத்தா, பிர்சா முண்டா வானூர்தி நிலையம், ராஞ்சி
ஏர் இந்தியா பெங்களூரு, பாங்காக்–சுவர்ணபூமி, தில்லி, ஐதராபாத்து, கொல்கத்தா, மும்பை
கோஏர் கொல்கத்தா, மும்பை
இன்டிகோ கெங்களூரு, சென்னை, தில்லி, ஐதராபாத்து, கொல்கத்தா, மும்பை, விசாகப்பட்டினம்
விஸ்தாரா தில்லி

மேற்கோள்கள்[தொகு]

 1. "Traffic News for the month of March 2018: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2018. p. 4. 1 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Traffic News for the month of March 2018: Annexure-II" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2018. p. 4. 1 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Traffic News for the month of March 2018: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2018. p. 4. 1 May 2018 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Pilot information for Biju Patnaik Airport". ourairports.com. 2012. 5 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 5.2 "New terminal at Bhubaneswar airport starts operations". Business Standard. 14 March 2013. http://www.business-standard.com/article/companies/new-terminal-at-bhubaneswar-airport-starts-operations-113031400359_1.html. பார்த்த நாள்: 17 March 2013. 
 6. "Centre accords international tag to Bhubaneswar airport". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 October 2013. Archived from the original on 2013-12-31. https://web.archive.org/web/20131231000543/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-31/bhubaneswar/43558773_1_new-domestic-terminal-bhubaneswar-airport-international-terminal. 
 7. Singha, Minati (5 March 2013). "International airport to take off by June". Times of India. http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/International-airport-to-take-off-by-June/articleshow/18804322.cms. பார்த்த நாள்: 5 March 2013. 
 8. Barik, Bibhuti (8 August 2011). "March date for swanky airport". The Telegraph (Calcutta, India). Archived from the original on 1 ஆகஸ்ட் 2013. https://web.archive.org/web/20130801062503/http://www.telegraphindia.com/1111208/jsp/odisha/story_14853822.jsp#.UUXeKRxkMWU. பார்த்த நாள்: 17 March 2013. 
 9. Barik, Bibhuti (24 June 2011). "Airport work speeds up — Capital set for take-off in style". The Telegraph (Calcutta, India). Archived from the original on 1 ஆகஸ்ட் 2013. https://web.archive.org/web/20130801070511/http://www.telegraphindia.com/1110624/jsp/orissa/story_14152627.jsp. பார்த்த நாள்: 17 March 2013. 
 10. "New terminal at Bhubaneswar airport thrown open". Times of India. 6 March 2013. Archived from the original on 8 மார்ச் 2013. https://web.archive.org/web/20130308010939/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-06/bhubaneswar/37499050_1_bhubaneswar-airport-biju-patnaik-airport-wall-facade. பார்த்த நாள்: 17 March 2013. 
 11. Ramanath V, Riyan (5 February 2013). "Plans to provide spa facilities at airport". Times of India. Archived from the original on 30 டிசம்பர் 2013. https://web.archive.org/web/20131230235141/http://articles.timesofindia.indiatimes.com/2013-02-05/bhubaneswar/36763902_1_duty-free-shops-jewellery-shop-spa. பார்த்த நாள்: 18 March 2013. 
 12. "Lanco Infratech bags Rs 92 cr order from AAI". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 4 June 2010. http://www.business-standard.com/article/companies/lanco-infratech-bags-rs-92-cr-order-from-aai-110060400202_1.html. பார்த்த நாள்: 30 December 2013. 
 13. "Bhubaneswar - Technical Information". இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 22 August 2016. Archived from the original on 7 ஜூன் 2017. https://web.archive.org/web/20170607162700/http://www.aai.aero/allAirports/bhubaneshwar_technicalinfo.jsp. பார்த்த நாள்: 25 May 2017. 
 14. "Coast Guard's new air enclave inaugurated in Bhubaneswar". 15 December 2014. http://www.oneindia.com/india/coast-guards-new-air-enclave-inaugurated-in-bhubaneswar-1592811.html. பார்த்த நாள்: 12 October 2016. 
 15. "Commissioning of Coast Guard Air Enclave Bhubaneswar & 743 Squadron (CG)". 15 December 2014. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=113360. பார்த்த நாள்: 12 October 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]