விஸ்தாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஸ்தாரா
Vistara logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
UK VTI VISTARA
நிறுவல்2014
வான்சேவை மையங்கள்இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்விசுத்தாரா கழகம்
வானூர்தி எண்ணிக்கை3
சேரிடங்கள்3
மகுட வாசகம்ஃபிளை தி நியூ ஃபீலிங்
தாய் நிறுவனம்டாடா சன்சு
சிங்கப்பூர் வான்வழி
தலைமையிடம்புது தில்லி, இந்தியா
முக்கிய நபர்கள்ஃபீ தீக் யியோ (த.செ.இ)
பிரசாத் மேனன் (தலைவர்)
இணையத்தளம்www.airvistara.com

விஸ்தாரா (Vistara) புது தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தை அச்சுமையமாகக் கொண்டு இயங்கும் இந்திய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இது சனவரி 9, 2015 முதல் இயங்கத் தொடங்கியது.[1] 3 ஏர்பஸ் ஏ320 வானூர்திகளைக் கொண்டு தினசரி 14 பறப்புக்களை இயக்குகின்றது.

டாடா சன்சு, சிங்கப்பூர் வான்வழியின் கூட்டு நிறுவனமான இதன் முழு அளவிலான போக்குவரத்துச் சேவை 2013இல் அறிவிக்கப்பட்டது. இந்திய உள்நாட்டுச் சேவைகளில் பிரீமியம் குறைந்தவிலை இருக்கைகளை அளிக்கும் முதல் நிறுவனமாக இது விளங்குகின்றது.[2]

வரலாறு[தொகு]

இந்த வான்வழிப் போக்குவரத்து நிறுவனம் டாடா சன்சும் சிங்கப்பூர் வான்வழியும் கூட்டாக நிறுவியுள்ள நிறுவனமாகும். 2013இல் புது தில்லியை மையமாகக் கொண்ட முழு அளவிலான போக்குவரத்துச் சேவையாக இது அறிவிக்கப்பட்டது. இரண்டு நிறுவனங்களும் இச்சேவையை நிறுவ கூட்டாக $100 மில்லியன் முதலீடிட்டன. டாடா சன்சு 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி 49 விழுக்காடும் முதலீடிட்டன.[3][4] இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013இல் தனது ஒப்புதலை வழங்கியது.[5] விஸ்தாரா என்ற பெயர் "விரிவாக்கம்" என்ற பொருளுடைய சமசுகிருதச் சொல்லான விஸ்தாரிலிருந்து வந்துள்ளது.[6][7]

சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் புதிய முனையம் 2 மூலம் இயக்கப்படும் முதல் உள்நாட்டுச் சேவையாகும். துவக்கத்தில் இந்நிறுவனத்தின் பறப்புகள் பன்னாட்டுச் சேவைகள் இயக்கப்படும் இந்த முனையத்தின் நான்காம் நிலையிலியிலிருந்து இயங்கும். சூலை 2015 முதல் உள்நாட்டுச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலைக்கு மாற்றப்படும்.[8]

சேரிடங்கள்[தொகு]

மாநிலம் நகரம் ஐஏடிஏ ஐசிஏஓ வானூர்தி நிலையம்
மகாராட்டிரம் மும்பை BOM VABB சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
தில்லி புது தில்லி DEL VIDP இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் (அச்சுமையம்)
குசராத்து அகமதாபாத் AMD VAAH சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு வானூர்தி நிலையம்
தமிழ்நாடு சென்னை MAA VOMM அறிஞர் அண்ணா பன்னாட்டு விமானநிலையம்

விஸ்தாரா திசம்பர் 19, 2014 முதல் தனது முன்பதிவுகளைத் தொடங்கியது; முதல் வணிகமுறைப் பறப்பு தில்லியிலிருந்து மும்பைக்கு சனவரி 9, 2015இல் 2014 அன்று பறந்தது. தனது முதல் ஆண்டு இயக்கத்தில் புது தில்லியை தனது அச்சுமையமாகக் கொண்டு தில்லியிலிருந்து மும்பை, கோவா, சண்டிகர், பெங்களூர், ஐதராபாத்து, அகமதாபாத், சம்மு, சிறிநகர், பட்னா நகரங்களுக்கு வாரத்திற்கு 87 பறப்புகள் நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது.[9] இரண்டாமாண்டில் சென்னை, இலக்னோ, புனே, வாரணாசி, கொல்கத்தா, குவஹாத்தி நகரங்களையும் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அம்ரித்சர், இந்தோர், கொச்சி நகரங்களையும் இணைக்கத் திட்டமிட்டுள்ளது. தவிரவும் கூடுதல் அச்சுமையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.[10]

மேலும் விஸ்தாரா தில்லி-இலண்டன், மதுரை-சிங்கப்பூர், புனே-சிங்கப்பூர், தில்லி-யோகானாசுபெர்கு, தில்லி-கேப் டவுண், தில்லி-அதிசு அபாபாபன்னாட்டு வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டுள்ளது.[11]

குறிப்பங்கீடு உடன்படிக்கைகள்[தொகு]

விஸ்தாரா கீழ்வரும் வான்போக்குவரத்து நிறுவனங்களுடன் குறிப்பங்கீடு உடன்பாடு கண்டுள்ளது:

வானூர்தித் தொகுதி[தொகு]

தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் விஸ்தாராவின் முதல் வானூர்தி VT-TTB
விஸ்தாரா வண்டித்தொகுதி
வானூர்தி சேவையில் வாங்கல் பயணிகள் குறிப்புகள்
J PY Y மொத்தம்
ஏர்பஸ் ஏ320-232 3 10 16 36 96 148 மற்றவை மார்ச் 2016இல் சேர்க்கப்படும்.[13]
ஏர்பஸ் ஏ320நியோ - 7 16 36 96 148 விநியோகம் 2017 முதல்
Total 3 17

விஸ்தாரா தனது முதல் A320 வானூர்தியை செப்டம்பர் 23, 2014 அன்று ஏற்றுக்கொண்டது;[14] புதுதில்லிக்கு செப்டம்பர் 25, 2014 அன்று இது வந்து சேர்ந்தது.[15] விஸ்தாரா தனது ஐந்தாம் ஆண்டுக்கு முன்னதாக வண்டித்தொகுதியை 20 வானூர்திகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. வாடகைக்கான வானூர்திகளை சிங்கப்பூரைச் சேர்ந்த பிஓசி ஏவியேசனிடமிருந்து பெற்றுள்ளது. [9]

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Vistara takes to the skies, operates first flight from Delhi to Mumbai". தி எகனாமிக் டைம்ஸ் (9 January 2015).
 2. "Vistara takes the premium economy way". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (23 December 2014). பார்த்த நாள் 11 January 2015.
 3. "SIA partners Tata group to set up new airline in India" (19 September 2013).
 4. "Tata, Singapore Airlines look to fly in Indian skies". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (19 September 2013). பார்த்த நாள் 12 August 2014.
 5. "SIA, Tata proposal gets green light from India's foreign investment board" (24 October 2013).
 6. "Tata SIA christens its airline, Vistara". Tata Sons. பார்த்த நாள் 14 August 2014.
 7. "Vistara meaning".
 8. "Vistara to operate out of Mumbai International Airport’s new T2 terminal". தி எகனாமிக் டைம்ஸ். 1 January 2015. http://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/vistara-to-operate-out-of-mumbai-international-airports-new-t2-terminal/articleshow/45712273.cms. பார்த்த நாள்: 2 January 2015. 
 9. 9.0 9.1 "Vistara’s plan is flying". டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (13 August 2014). பார்த்த நாள் 15 August 2014.
 10. "Indian full-service carrier Vistara commences operations". Ch-Aviation (11 January 2015). பார்த்த நாள் 12 January 2015.
 11. [1]
 12. 12.0 12.1 "Vistara signs inter-line agreement with Singapore Airlines, SilkAir". மின்ட் (22 December 2014). பார்த்த நாள் 2 January 2015.
 13. "BOC Aviation to deliver all 13 planes to Vistara by March 2016" (9 January 2015). பார்த்த நாள் 9 January 2015.
 14. http://xfw-spotter.blogspot.com/2014/07/a320-232sl-tata-sia-airlines-f-wwdt-vt.html
 15. "Vistara takes delivery of first Airbus A320 aircraft in Delhi". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (25 September 2014). பார்த்த நாள் 25 September 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஸ்தாரா&oldid=2493543" இருந்து மீள்விக்கப்பட்டது