உள்ளடக்கத்துக்குச் செல்

போயிங் 787 ட்ரீம்லைனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போயிங் 787 ட்ரீம்லைனர்
போயிங் 787 ட்ரீம்லைனர்
வகை அகல உடல் வானூர்தி, சுழல் தாரை வானூர்தி
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் போயிங்
முதல் பயணம் திசம்பர் 15 2009
அறிமுகம் அக்டோபர் 26 2011 - ஆல் நிப்போன் ஏர்வேசு (ஏ.என்.ஏ)
தற்போதைய நிலை தயாரிப்பிலும், சேவையிலும்
முக்கிய பயன்பாட்டாளர் ஆல் நிப்போன் ஏர்வேசு (ஏ.என்.ஏ)
தயாரிப்பு எண்ணிக்கை 11[1]
திட்டச் செலவு US$32 பில்லியன் (போயிங்கின் செலவு)[2]
அலகு செலவு 787-8: US$193.5 மில்லியன் (2011)[3]
787-9: US$227.8 மில்லியன் (2011)[3]

போயிங் 787 ட்ரீம்லைனர் (Boeing 787 Dreamliner) என்பது நீண்ட-தூர, நடுத்தர அளவுள்ள இரட்டை இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஜெட் வானூர்தி ஆகும், இது ஐக்கிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. இவ்வானூர்தி 210 முதல் 290 இருக்கைகளைக் கொண்டது. போயிங் நிறுவனத்தின் வானூர்திகளில் இதுவே எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடியது என போயிங் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் பெரும்பாலும் கலப்புருப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முதலாவது வானூர்தியும் இதுவாகும்[4]. இதேயளவான போயிங் 767 வானூர்தியை விட 20% குறைவாக எரிபொருளைப் பயன்படுத்துகிறது[5].

இவ்வானூர்தி 2011, அக்டோபர் 26 இல் முதன் முறையாக பயணிகளுடன் வானில் பறந்தது. ஜப்பான் வானூர்தி நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்வேசு டோக்கியோவிலிருந்து ஹாங்காங்கிற்கு இயக்க்கியது.

நிர்மாணப் பொருட்கள்

[தொகு]
போயிங் 787 ட்ரீம்லைனர் நிர்மாணப் பணிகள்
போயிங் 787 ட்ரீம்லைனர் முழுமையான வடிவம்
போயிங் 787 ட்ரீம்லைனர் கன்னிப் பயணம்
கடடுப்பாட்டு அறை

நிர்மாணப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி, கார்பன் இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பயன்பாடு

[தொகு]

இந்த வானூர்தி, எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது. இந்த வானூர்தியை சோதனைமுறையில் பறக்கவிட்டதன் அடிப்படையில், அது 20 சதவீதம் குறைவான அளவில் எரிபொருளை பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.

தயாரிப்பு

[தொகு]

இந்த வானூர்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள பல பொருட்கள் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படாமல் வெளியாட்கள் மூலம் தயாரிக்கப்பட்டன.

இந்த வானூர்தி அதன் மொத்த கொள்ளளவில் 80% கூட்டுப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.[6] எடை பட்டியலிடப்பட்ட அதன் பொருட்களாவன, 50% கலப்புருப் பொருள், 20% அலுமினியம், 15% டைட்டானியம், 10% எஃகு, மற்றும் 5% பிற பொருட்கள்.[7][8]

பெரிய யன்னல்கள்

[தொகு]

இந்த வானூர்தியில் யன்னல்கள் சற்று பெரிதாக இருக்கும், காற்றின் தரமும், உள்ளே வெளிச்சமும் மேம்பட்டதாக இருக்கும் என்று போயிங் கூறுகிறது.

இடர்கள்

[தொகு]

செயல்பாட்டுக்கு வந்த ஓராண்டுக்குள் குறைந்தது 4 வானூர்திகளில் மின்னியல் அமைப்புகளில் சிக்கல்கள் எழுந்தன. போயிங்கின் தலைமை செயல் அதிகாரி ஜேம்சு டிசம்பர் 2012ல் ஊடகங்களுக்கு இது பெரிய சிக்கல் இல்லை என்றும் புதிய வகை வானூர்திகளை செயலுக்கு கொண்டு வரும் போது இது நிகழக்கூடியது தான் என்றும் போயிங் 777 வகையை அறிமுகப்படுத்திய போதும் இது போன்ற சிக்கல்கள் எழுந்தன என்றும் 787க்கு அதை விட குறைவாகதான் சிக்கல்களை கொண்டுள்ளது என்று கூறினார் [9]. நவம்பர் 25, 2012 அன்று ஏர் இந்தியா நிறுவனம் போயிங் பொறியாளர்களை அனுப்பி அதன் 787 வானூர்திகளில் நேர்ந்த சிக்கல்களை தீர்க்க கோரியது.[10]

28.11.2013 அன்று டெல்லி - சிட்னி - மெல்பேர்ண் சேவையின் போது கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் பயணம் ரத்து செய்யப்பட்டது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
 1. Ostrower, Jon. "First flight of Air India's 787 cut short by failed sensor". Air Transport Intelligence news via FlightGlobal.com, August 1, 2011.
 2. Gates, Dominic (September 24, 2011). "Boeing celebrates 787 delivery as program's costs top $32 billion". The Seattle Times. http://seattletimes.nwsource.com/html/businesstechnology/2016310102_boeing25.html. பார்த்த நாள்: September 26, 2011. 
 3. 3.0 3.1 "Boeing Commercial Airplanes prices". Boeing. பார்க்கப்பட்ட நாள் December 14, 2010.
 4. Norris, G.; Thomas, G.; Wagner, M. and Forbes Smith, C. (2005). Boeing 787 Dreamliner – Flying Redefined. Aerospace Technical Publications International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9752341-2-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 5. Boeing. "Commercial Airplanes – 787 Dreamliner – Background". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: December 14, 2010.
 6. "Boeing 787: A Matter of Materials – Special Report: Anatomy of a Supply Chain". IndustryWeek.com, December 1, 2007.
 7. "787 Dreamliner Program Fact Sheet". Boeing web page. The Boeing Company. பார்க்கப்பட்ட நாள் July 10, 2007.
 8. Hawk, Jeff (Director Certification, Government and Environment 787 Programs) (May 25, 2005). "The Boeing 787 Dreamliner: More Than an Airplane" (PDF). Presentation to AIAA/AAAF Aircraft Noise and Emissions Reduction Symposium. American Institute of Aeronautics and Astronautics and Association Aéronautique et Astronautique de France. Archived from the original (PDF) on ஏப்ரல் 2, 2006. பார்க்கப்பட்ட நாள் July 15, 2007. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
 9. "Boeing: Problems with 787 Dreamliner "Normal"". Frequent Business Traveler. December 16, 2012. பார்க்கப்பட்ட நாள் December 16, 2012.
 10. "Dreamliner glitch: AI summons Boeing team". Hindustan Times. November 25, 2012. Archived from the original on ஜனவரி 21, 2013. பார்க்கப்பட்ட நாள் December 2, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 11. http://www.indianexpress.com/news/air-india-boeing-787-dreamliner-crisis-windshield-cracks-during-landing-at-melbourne/1190862/

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=போயிங்_787_ட்ரீம்லைனர்&oldid=3575682" இலிருந்து மீள்விக்கப்பட்டது