சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 19°05′19″N 72°52′05″E / 19.08861°N 72.86806°E / 19.08861; 72.86806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்

சாகர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

छत्रपती शिवाजी आंतरराष्ट्रीय विमानतळ
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்ஜிவிகே, இந்திய வானூர்தி நிலைய ஆணையம்
இயக்குனர்மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிட்டெட் (MIAL)
சேவை புரிவதுமும்பை
அமைவிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மையம்
உயரம் AMSL37 ft / 11 m
ஆள்கூறுகள்19°05′19″N 72°52′05″E / 19.08861°N 72.86806°E / 19.08861; 72.86806
இணையத்தளம்www.csia.in
நிலப்படம்
BOM is located in Mumbai
BOM
BOM
BOM is located in மகாராட்டிரம்
BOM
BOM
BOM is located in இந்தியா
BOM
BOM
BOM is located in ஆசியா
BOM
BOM
BOM is located in Middle East
BOM
BOM
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
14/32 2,860 9,383 அசுபால்ட்டு
09/27 3,660 12,008 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப் '11 – மார் '12)
பயணிகள் போக்குவரத்து30747841
வானூர்தி இயக்கங்கள்251492
சரக்கு டன்கள்657470
மூலம்: ஏஏஐ[1][2][3]

சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் (Chhatrapati Shivaji International Airport, CSIA, (ஐஏடிஏ: BOMஐசிஏஓ: VABB)) முன்பாக சாகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Sahar International Airport) மும்பையில் உள்ள முதன்மை பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது 17வது நூற்றாண்டின் மராத்தா பேரரசர், சத்திரபதி சிவாஜி போசுலேயின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஐஏடிஏ குறியீடான – "BOM", என்பது மும்பையின் முந்தையப் பெயரான பம்பாய் என்பதிலிருந்து பெறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள வானூர்தி நிலையங்களில் மொத்தப் பயணிகள் போக்குவரத்தில் இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[1] இந்த வானூர்தி நிலையத்தில் ஐந்து முனையங்கள் செயற்பாட்டில் உள்ளன. 1,500 ஏக்கர்கள் (610 ha) பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ள சத்திரபதி சிவாஜி நிலையம் 2011-12 நிதியாண்டில் 30.74 மில்லியன் பயணிகளையும் 656,369 டன்கள் சரக்குகளையும் கையாண்டுள்ளது.[4] இதுவும் தில்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையமும் தெற்கு ஆசியாவின் 50%க்கும் கூடுதலான வான் போக்குவரத்தை கையாள்கின்றன.[5][6] 2010இல் இந்த வானூர்தி நிலையம் 671,238 டன்களை கையாண்டு சரக்கு போக்குவரத்தில் உலகின் 30வது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு வெளியிட்ட 25–40 மில்லியன் பயணிகள் புழங்கும் வானூர்தி நிலையங்களின் தரவரிசையில் மூன்றாவது சிறந்த வானூர்தி நிலையமாக இருந்தது.[7] மேலும் 2011இல் 30,439,122 பயணிகள் பயன்படுத்திய இந்த நிலையம் உலகளவில் 44வது போக்குவரத்து மிகுந்த நிலையமாக இருந்தது.[8]

நகரத்தின் மாநகராட்சிப் பகுதிக்குள் இருக்கும் உலகின் சில வானூர்தி நிலையங்களில் ஒன்றான சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் அந்தேரியின் சிறுநகரப்பகுதிகளான சான்டா குரூஸ் மற்றும் சாகர் பகுதிகளில் அமைந்துள்ளது.[9] தனியார் நிறுவனமான ஜிவிகே இன்டஸ்ட்ரீசு, இந்திய வானூர்தி நிலைய ஆணையம் மற்றும் பிட்வெஸ்ட் இவற்றின் கூட்டுத் தாபனமான மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்,[10] 2006இல் இந்த வானூர்தி நிலையத்தை நவீனப்படுத்த நியமிக்கப்பட்டது. இந்தத் திட்டப்பணி 2013ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்பட இருப்பினும் ஒரு ஆண்டு தாமதமாக 2014இல் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.[11] இத்திட்டம் முடிவடைந்த பிறகு சத்திரபதி சிவாஜி வானூர்தி நிலையம் ஆண்டுக்கு 40 மில்லியன் பயணிகளையும் 1 மில்லயன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளக்கூடியத் திறன் உடையதாக இருக்கும். இந்த வானூர்தி நிலையத்தை மேற்கத்திய விரைவு நெடுஞ்சாலையுடன் இணைக்க ஆறு தடம் கொண்ட சாலை ஒன்று கட்டமைக்கப்பட்டு வருகிறது. [12]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 http://www.aai.aero/traffic_news/mar2k12annex3.pdf
 2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120617013457/http://www.aai.aero/traffic_news/mar2k12annex2.pdf. 
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130518082623/http://www.aai.aero/traffic_news/mar2k12annex4.pdf. 
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130116085002/http://www.csia.in/Routes%20Asia%20Officially%20Handed%20Over%20to%20Mumbai%20for%202013.pdf. 
 5. Saurabh Sinha, TNN, 10 July 2008, 03.54am IST (10 July 2008). "Delhi beats Mumbai to become busiest airport". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/India/Delhi_is_countrys_busiest_airport/articleshow/3216435.cms. பார்த்த நாள்: 2010-08-24. 
 6. "Delhi's IGIA edges ahead of Mumbai's CSIA as country's busiest airport". Domain-b.com. 1 September 2008. http://www.domain-b.com/aero/airports/20080901_csia.html. பார்த்த நாள்: 2010-08-24. 
 7. "ACI’s 2011 ASQ Awards Name Incheon International Airport Best Airport Worldwide in Overall Customer Satisfaction". Airports Council International. 14 February 2012 இம் மூலத்தில் இருந்து 2 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130602100809/http://www.aci.aero/aci/aci/file/Press%20Releases/2012/PR_14feb12_ASQ_Award_Winners.pdf. பார்த்த நாள்: 15 February 2012. 
 8. Simon Rogers (4 May 2012). "The world's top 100 airports: listed, ranked and mapped | News | guardian.co.uk". Guardian. http://www.guardian.co.uk/news/datablog/2012/may/04/world-top-100-airports. பார்த்த நாள்: 2012-08-22. 
 9. "CSIA pin code". India Codes இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021220819/http://www.india-codes.com/pin-codes/international-airport-pin-code-mumbai-400099. பார்த்த நாள்: 2012-09-21. 
 10. "Bidvest.co.za". Bidvest.co.za. http://www.bidvest.co.za/. பார்த்த நாள்: 2010-08-24. 
 11. "Mumbai airport modernization likely to be delayed to 2014". Live Mint. 14 December 2011. http://www.livemint.com/Companies/V92Qa01ne5PAlu0lmAQVGJ/Mumbai-airport-modernization-likely-to-be-delayed-to-2014.html. 
 12. "GVK CSIA Project". GVK Industries Ltd.. http://www.gvk.com/ourbusiness/airports/csiamumbai.aspx. பார்த்த நாள்: 2012-09-21. 

வெளி இணைப்புகள்[தொகு]