உல்காசு நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உல்ஹாஸ்நகர் ரயில் நிலையம் (ஜூன் 2000)
உல்லாஸ்நகர் பிர்லா கோயில்

உல்லாஸ்நகர் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது உல்லாஸ்நகர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மும்பை பெருநகரப் பகுதியாகும்.

இந்த நகரம் சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையத்திலிருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தினால் நிர்வகிக்கப்படும் மும்பை பெருநகர பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இந்நகரம் 2011 ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 5,06,098 மக்கட் தொகையைக் கொண்டிருந்தது. [1]. இது மத்திய ரயில்வே மண்டலத்தின் மும்பை-புனே பாதையில் உள்ள ஒரு ரயில் நிலையமாகும்.

வரலாறு[தொகு]

முன்பு கல்யாண் இராணுவ போக்குவரத்து முகாம் என்று அழைக்கப்பட்ட உல்காசுநகர் இரண்டாம் உலகப் போரின்போது 6,000 வீரர்கள் மற்றும் 30,000 பேர் தங்குவதற்காக அமைக்கப்பட்டது. 2,126 பேரூந்துகள் மற்றும் சுமார் 1,173 நபர்கள் இருந்தனர்.[சான்று தேவை]

இந்தியாவின் பிரிவினைக்கு பின்னர், பாகிஸ்தானின் சிந்துவிலிருந்து 1,00,000 சிந்துவைச் சேர்ந்த அகதிகள் கல்யாண் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெறிச்சோடிய இராணுவ முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் இப்பகுதி ஒரு நகரமாக மாற்றப்பட்டது. 1949 ஆம் ஆண்டு ஆகத்து 8 அன்று அடித்தள விழா நடந்தது. இந்திய ஆளுநர் ஜெனரல் சி. ராஜகோபாலாச்சாரி இந்த நகரத்திற்கு உல்காசுநகர் என்று பெயரிட்டார். (அதாவது 'மகிழ்ச்சியின் நகரம்'; உல்காசு = மகிழ்ச்சி; நகர் = நகரம்) மற்றும் அவர் நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார். உல்ஹாஸ் பீடபூமி மற்றும் அதன் பள்ளத்தாக்குக்கு அருகாமையில் இருப்பதால் இந்த நகரம் உல்ஹாஸ்நகர் என்று அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

1955 ஆம் ஆண்டில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சனவரியில் உல்காசுநகர் நகராட்சி அமைக்கப்பட்டது. நகரின் முதல் நகராட்சி தலைவராக அர்ஜுன் கே. பல்லானி இருந்தார். மேலும் ஒரு நகராட்சி மன்றம் பரிந்துரைக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டில் முதன்மைதலில் நகரசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன. உல்ஹாஸ்நகரின் பிரதான குடியிருப்பாளர்கள் சிந்தி அகதிகள் ஆவார்கள். தற்சமயம் 28 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சிந்தி வம்சாவளியைச் சேர்ந்த 389,000 பேர் இங்கு வசிக்கின்றனர்.[2] இந்நகரம் இந்தியாவின் அதிகளவில் சிந்திக்கள் வாழும் இடமாகும். 2010 ஆம் ஆண்டில் உல்காசுநகரின் சிந்தி இந்துக்களின் மக்கட் தொகை 400,000 ஆகும்.[3]

அரசியல் கட்சிகளின் ஆதரவின் கீழ் நகரத்தில் ஏராளமான குற்றக் கும்பல்கள் செயல்படுகின்றன. [4]1990 களில் பல சட்டவிரோத கட்டிடத் திட்டங்களுக்காக, அரசியல்வாதிகள் பணம் வசூலிக்கத் தொடங்கினர்.[5]

பொருளாதாரம்[தொகு]

இந்த நகரம் 13 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 285 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ரேயான் பட்டு, சாயங்கள், ஆடைகள், மின் / மின்னணு உபகரணங்கள் மற்றும் மிட்டாய் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான மையமாகும். நகரத்தில் தற்போதுள்ள சாலைகள் மற்றும் வீதிகளின் மொத்த நீளம் 352 கிலோமீட்டர் ஆகும். எம்ஐடிசி மூலம் நகரத்திற்கு பாதுகாக்கப்பட்ட நீர் வழங்கல் கிடைக்கிறது. தீயணைப்பு சேவையும் இங்கு கிடைக்கின்றது. மொத்தம் 840 படுக்கைகள் கொண்ட 60 தனியார் மருத்துவமனைகளும், 3 356 படுக்கைகளைக் கொண்ட 3 அரசு மருத்துவமனைகளும், 255 மருந்தகங்களும் நகர மக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

உல்ஹாஸ்நகரில் முரட்டு பருத்திதுணிகளை உற்பத்தி செய்யும் சிறு வணிகங்கள் நடைப்பெறுகின்றன. சில உற்பத்தியாளர்கள் உல்காசுநகரில் இருந்து உலகளவில் வன்துணியாடைகளை ஏற்றுமதி செய்கிறார்கள். [6]இந்த நகரம் அதன் தளபாடங்கள் சந்தை, துணி சந்தை மற்றும் மின்னணு சந்தை ஆகியவற்றிற்கும் பெயர் பெற்றது. இது தவிர உல்காசு நகரில் பல்வேறு சிறிய அளவிலான உற்பத்திகளும் நடைப்பெறுகின்றன.[7] அவை மிட்டாய், நெசவு, தளபாடங்கள், அச்சகம் போன்றவையாகும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி உல்காசுநகரின் மக்கட் தொகை 506,098 ஆகும்.[8] உல்காசுநகர் மகாராஷ்டிராவின் 22 வது பெரிய நகரமாகவும், நாட்டின் 88 வது நகரமாகவும் காணப்படுகின்றது. மொத்த சனத்தொகையில் ஆண்கள் 53% வீதமாகவும், பெண்கள் 47% வீதமாகவும் உள்ளனர்.

சிறுபான்மை மொழிகளில் சிந்தி மொழி மக்கட் தொகையில் 34.47% வீதமும், மராத்தி மொழி 19.63% வீதமும் பேசப்படுகின்றது.[9]

போக்குவரத்து[தொகு]

உல்காசுநகரை சாலை அல்லது ரயில் மூலம் அடையலாம். உல்காசுநகர் ரயில் நிலையம் மும்பை புறநகர் ரயில்வேயின் மத்திய பாதையில் அமைந்துள்ளது. மும்பை , பிவாண்டி மற்றும் தானே ஆகிய இடங்களுக்கு பயணிக்க பேருந்துகளும், முச்சக்கரவண்டிகளும் இயங்குகின்றன.

சான்று[தொகு]

  1. "Mumbai Council". Information on the MMR Mumbai (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  2. "Pappu's Ulhasnagar gambit may backfire". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Tare, Kiran (2010-02-24). "Sindhi conversions in Ulhasnagar raise a storm". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  4. Ghosh, S.K. (1991). The Indian mafia. New Delhi: Ashish Pub. House. p. 56. ISBN 9788170243786. Retrieved 3 February 2017.
  5. "Latest News, India News, Breaking News, Live News Online, Today Headline's". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  6. "Dons in a new role". web.archive.org. 2007-03-10. Archived from the original on 2007-03-10. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  7. "Information About Ulhasnagar, An Overview of Ulhasnagar". www.ulhasnagaronline.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  8. "Ulhasnagar City Population Census 2011-2019 | Maharashtra". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  9. "Wayback Machine" (PDF). web.archive.org. 2018-02-16. Archived from the original on 2018-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்காசு_நகர்&oldid=3740059" இலிருந்து மீள்விக்கப்பட்டது