உள்ளடக்கத்துக்குச் செல்

மாலேகான்

ஆள்கூறுகள்: 20°33′N 74°33′E / 20.55°N 74.55°E / 20.55; 74.55
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலேகான்
—  மாநகரம்  —
மாலேகான்
இருப்பிடம்: மாலேகான்

, மகாராட்டிரம் , இந்தியா

அமைவிடம் 20°33′N 74°33′E / 20.55°N 74.55°E / 20.55; 74.55
நாடு  இந்தியா
மாநிலம் மகாராட்டிரம்
ஆளுநர் ரமேஷ் பைஸ்
முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே
மக்களவைத் தொகுதி மாலேகான்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மாலேகான் (Malegaon, மராத்தி: मालेगाव, உருது: مالیگاوں‎) இந்திய மாநிலம் மகாராட்டிராவில் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஓர் மாநகராட்சியாகும். மாநிலத் தலைநகர் மும்பையிலிருந்து வடகிழக்கில் 280 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கிமா மற்றும் மௌசம் ஆறுகள் இணையுமிடத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. மகாராட்டிரத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெரிய நகரங்களில் மாலேகானும் ஒன்று. நாசிக் மாவட்டத்தில் நாசிக்கை அடுத்த மிகப் பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கு இந்துக்களும் இசுலாமியர்களும் பெரும்பான்மையாக வாழ்வதால் உருது, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படுகின்றன.

புவியியல் அமைப்பு[தொகு]

மாலேகானின் அமைவிடம்: 18°25′N 77°32′E / 18.42°N 77.53°E / 18.42; 77.53[1]. கடல்மட்டத்திலிருந்து இதன் சராசரி உயரம் 438 மீட்டர்கள் (1437 அடிகள்).

குண்டு வெடிப்புகள்[தொகு]

செப்டம்பர் 8, 2006 அன்று மாலேகான் நகரில் உள்ள பள்ளிவாசலின் அருகே மூன்று குண்டுகள் வெடித்ததில் 37 நபர்கள் இறந்தனர் மற்றும் 125 பேர் தீவிரமாக காயமடைந்தனர்.

செப்டம்பர் 29, 2008, அன்று நவராத்திரி விழாவிற்கு முந்தைய நாள் குசராத் மற்றும் மகாராட்டிரத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் மாலேகானில் இரண்டு குண்டுகள் வெடித்து ஏழு நபர்கள் இறந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலேகான்&oldid=3978397" இலிருந்து மீள்விக்கப்பட்டது