உள்ளடக்கத்துக்குச் செல்

தாராசிவா மாவட்டம்

ஆள்கூறுகள்: 17°21′N 75°10′E / 17.35°N 75.16°E / 17.35; 75.16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உஸ்மானாபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாராசிவா மாவட்டம் (பழைய பெயர்:உஸ்மானாபாத் மாவட்டம்) மாவட்டம்
தாராசிவா மாவட்டம் (பழைய பெயர்:உஸ்மானாபாத் மாவட்டம்)மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
17°21′N 75°10′E / 17.35°N 75.16°E / 17.35; 75.16-18°24′N 76°24′E / 18.40°N 76.40°E / 18.40; 76.40
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்அவுரங்காபாத் கோட்டம்
தலைமையகம்[[தாராசிவா]]
பரப்பு7,569 km2 (2,922 sq mi)
மக்கட்தொகை1660311 (2011)
மக்கள்தொகை அடர்த்தி219.0/km2 (567/sq mi)
படிப்பறிவு76.33%
பாலின விகிதம்920
வட்டங்கள்1. உஸ்மானாபாத் 2. துளஜாபூர் 3. உமர்கா, 4. லோஹாரா 5. களம்பு 6. பூம் 7. பராண்டா 8. வாசி
மக்களவைத்தொகுதிகள்உஸ்மானாபாத்[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 211
சராசரி ஆண்டு மழைபொழிவு730 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

தாராசிவா மாவட்டம் (பழைய பெயர்: உஸ்மானாபாத் மாவட்டம்), இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ளது. இது அவுரங்காபாத் மண்டலத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் தாராசிவா[2] நகரத்தில் உள்ளது. புகழ் பெற்ற துளஜாபவானி கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 7569  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [3] இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன. தாராசிவா குகைகள் இம்மலைகளில் உள்ளது.

மாவட்டப் பெயர் மாற்றம்

[தொகு]

உஸ்மானாபாத் மாவட்டத்தின் பெயரை தாராசிவா மாவட்டம் எனப்பெயர் மாற்றி, சூலை 2022ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராட்டிரா அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.[4] இதனை அடுத்த வந்த ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு செப்டம்பர் 2023ல் அதனை உறுதி செய்தது.[5][6]மேலும் மாவட்டப் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[7][8]

வட்டங்கள்

[தொகு]

இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[9]

  • உஸ்மானாபாத்
  • துளஜாபூர்
  • உமர்கா
  • லோஹாரா
  • களம்பு
  • பூம்
  • வாசி
  • பராண்டா

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 1,660,311 மக்கள் வாழ்ந்தனர். [3]

இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 219 பேர் வாழ்வதாக மக்கள் அடர்த்தி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. [3] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 920 பெண்கள் இருப்பதாக பால் விகிதக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. [3] இங்கு வாழ்வோரில் கல்வியறிவை 76.33% பேர் பெற்றுள்ளனர்.[3]

அரசியல்

[தொகு]

சிவ சேனா , காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகியன இங்குள்ள பெரிய கட்சிகள் [10][11]

இந்த மாவட்டத்தை பாராளுமன்றத்தில் முன்னிறுத்துபவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [12]

போக்குவரத்து

[தொகு]

இந்த மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு ரயில் நிலையங்களும் உள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. "Parliamentary Constituencies Maharashtra" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-06. Retrieved 2014-07-13.
  2. Nagar Parishad, Dharashiv Municipal Council
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "District Census 2011". Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. Retrieved 2011-09-30.
  4. Aurangabad formally renamed Chhatrapati Sambhajinagar, Osmanabad as Dharashiv
  5. We made the name ‘Chhatrapati Sambhajinagar’ foolproof: Eknath Shinde
  6. Aurangabad to Chhatrapati Sambhaji Nagar: History and Reason
  7. SC dismisses pleas challenging renaming of Aurangabad, Osmanabad
  8. Supreme Court Refuses To Interfere With Renaming Of Aurangabad & Osmanabad As Chhatrapati Sambhajinagar & Dharashiv
  9. Administrative Setup of Dharashiv District
  10. "Election Information in Osmanabad Parliament . Dr. Padamsingh bajirao Patil is member of parliament from 2009. Constituency". Party Analyst (IT GRIDS, India). Archived from the original on 2013-10-04. Retrieved 2014-07-13.
  11. "State Assembly Elections 2009: Maharashtra: Osmanabad". Indian Election Affairs. Archived from the original on 2013-05-18. Retrieved 2014-07-13.
  12. Cite web|title=Map: Parliamentray Constituencies Maharashtra|publisher= Election Commission of India|url=http://164.100.9.199/ecimaps/ecipdf/state_pc_Map/Maharashtra.pdf பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம்

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசிவா_மாவட்டம்&oldid=4232458" இலிருந்து மீள்விக்கப்பட்டது