ராய்கட் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்கட் கோட்டை
பகுதி: maharastra
ராய்கட் மாவட்டம், மகாராட்டிரா
(மகத் நகரம் அருகில்)
RaigadFort3.jpg
ராய்கட் கோட்டையின் காவல் கோபுரங்கள்
ராய்கட் கோட்டை is located in மகாராட்டிரம்
ராய்கட் கோட்டை
ராய்கட் கோட்டை
ராய்கட் கோட்டை is located in இந்தியா
ராய்கட் கோட்டை
ராய்கட் கோட்டை
மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் கோட்டையின் அமைவிடம்
ஆள்கூறுகள் 18°14′01″N 73°26′26″E / 18.2335°N 73.4406°E / 18.2335; 73.4406
வகை மலைக்கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
கட்டுப்படுத்துவது மராத்தியப் பேரரசு (1656–1689)

முகலாயப் பேரரசு (1689–1707)

மராத்தியப் பேரரசு (1707–1818)

Flag of the British East India Company (1801).svg கிழக்கிந்திய கம்பெனி (1818–1857)

British Raj Red Ensign.svg பிரித்தானிய இந்தியா (1857–1947)

 இந்தியா (1947-)

மக்கள்
அநுமதி
Yes
இட வரலாறு
கட்டியவர் ஹிரோஜி இந்தல்கர்
கட்டிடப்
பொருள்
கல், ஈயம், சுண்ணாம்புச் சாந்து
உயரம் 1,356 மீட்டர்கள் (4,400 ft) ASL

ராய்கட் கோட்டை (Raigad fort) மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில், மகத் எனும் நகரத்தின் அருகே அமைந்த மலையில் முதலில் ஹிரோஜி இந்தல்கர் (தேஷ்முக்) என்பவரால் 1030ல் கட்டப்பட்ட கோட்டையாகும். 1674ல் இக்கோட்டை மராத்தியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.[1][2]

இக்கோட்டை கடல் மட்டத்திலிருந்து 820 மீட்டர் உயரத்தில் அமைந்த இக்கோட்டை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சகாயத்திரி மலையில் அமைந்துள்ளது. ராய்காட் கோட்டைக்குச் செல்ல 1737 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையை 1818ல் பேஷ்வாக்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் கைப்பற்றி சீரழித்தது.

வரலாறு[தொகு]

ராய்கட் கோட்டையில் பேரரசர் சிவாஜியின் சிலை

சிவாஜி, ராய்கட் கோட்டையை பிஜப்பூர் சுல்தானின் படைத்தலைவர் சந்திரராவ் மோர் என்பவரிடமிருந்து 1656ல் கைப்பற்றி, கோட்டையை புதுப்பித்து, மராத்தியப் பேரரசின் தலைநகராக மாற்றிக் கொண்டார்.

ராய்காட் கோட்டையின் அடியில் ராய்காவாடி மற்றும் பச்சத் போன்ற முக்கிய கிராமங்களில் 10,000 மராத்திய குதிரைப்படைகள் காவல் பணியில் இருந்தது.

1689ல் சூபில்கர் கானால் கைப்பற்றப்பட்ட இக்கோட்டைக்கு அவுரங்கசீப் இஸ்லாம்காட் எனப் பெயரிட்டார். 1707ல் சித்திக் பதேகான் என்பவர் இக்கோட்டை தனது கட்டுப்பாட்டில் 1733 வரை வைத்திருந்தார்.[3]1818ல் கிழக்கிந்திய கம்பெனியின் படைகள், மராத்திய பேஷ்வாக்களிடமிருந்து ராய்கட் கோட்டையைக் கைப்பற்றி அழித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raigarh Fort". 2012-04-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-05-18 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Raigarh". Imperial Gazetteer of India, Volume 21. 1909. pp. 47–48. 2014-02-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. Naravane, M.S. (1998). The maritime and coastal forts of India. New Delhi: APH Pub. Corp.. பக். 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170249108. https://books.google.com/books?hl=en&lr=&id=iHK-BhVXOU4C&oi=fnd&pg=PR9&dq=siddi+raigad+1707&ots=S0VQPZLLnm&sig=9hL2_AZ9l4MfdvzsZhtVWp4QKZY#v=onepage&q=siddi&f=false. 

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Raigad Fort
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்கட்_கோட்டை&oldid=3591501" இருந்து மீள்விக்கப்பட்டது