சுனார் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனார் கோட்டை
பகுதி: சுனார்
சுனார், மிர்சாபூர் உத்தரப் பிரதேசம், இந்தியா
கங்கை ஆற்றாங்கரையில் உள்ள சுனார் கோட்டை
சுனார் கோட்டை is located in உத்தரப் பிரதேசம்
சுனார் கோட்டை
சுனார் கோட்டை
வகை கோட்டை
குறியீடு CAR
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம்
மக்கள்
அநுமதி
ஆம்
இட வரலாறு
கட்டிய காலம் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, 16ஆம் நூற்றாண்டில் செப்பனிடப்பட்டது.
கட்டியவர் மன்னர் சகாதேவனால் 1029இல் கட்டப்பட்டு, 1532 & 1538இல் சேர் சா சூரியாலும், 1575இல் அக்பராலும் செப்பனிடப்பட்டது.
கட்டிடப்
பொருள்
சுனார் எனும் மணற்கற்கள்
உயரம் 280 அடிகள் (85 m)
சுனார் கோட்டையின் முதன்மை நுழைவாயில்
சுனார் கோட்டையின் ஓவியம், ஆண்டு 1803

சுனார் கோட்டை (Chunar Fort) எனப்படும் சந்திரகாந்தா சுனார் கோட்டை , இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் நகரத்தில் உள்ள இக்கோட்டையின் அடியில் சுனார் நகரம் உள்ளது. இக்கோட்டையும், நகரமும் மத்திய கால இந்திய வரலாற்றில் குறிப்பட்டத்தக்கவைகள் ஆகும்.[1] தற்போது இக்கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தாலும் பராமரிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு காட்சிக்காக திறந்து விடப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

கங்கை ஆற்றாங்கரையில் அமைந்த இக்கோட்டை வாரணாசி நகரத்திலிருந்து தென்மேற்கில் 14 கி மீ தொலைவிலும், மிர்சாபூர் நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. [2] முகல்சராய் - கான்பூர் மற்றும் தில்லி - ஹவுரா இருப்புப்பாதை வழித்தடத்தில் சுனார் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

கி பி 1029 சகாதேவன் எனும் மன்னரால் கட்டப்பட்ட இம்மணற்கல் கோட்டையை, ஆப்கானிய சூர் பேரரசர் செர் ஷா சூரியாலும், முகலாயப் பேரரசர்களான உமாயூன், அக்பராலும் மற்றும் அயோத்தி நவாப்புகளாலும் கி பி 1772 வரையிலும், பின்னர் பிரிட்டிஷ் ராஜ் அரசால் 1947 வரையிலும் பயன்படுத்தப்பட்டது. [2]

புவியியல்[தொகு]

விந்திய மலைத்தொடரில் அருகில் அமைந்த 280 அடி உயரம் இக்கோட்டை,[3]கங்கை ஆற்றாங்கரையில், கைமூர் மலையில் மணற்கற்களால் கட்டப்பட்டது. [4]

நக்சல்பாரிகளின் ஆதிக்கம் மிக்க இப்பகுதியில் உள்ள சுனார் கோட்டையை உத்திரப் பிரதேச மாநில அரசின் காவல் துறையின் ஆயுத கிடங்காகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் இக்கோட்டை பாதுகாப்பு படைகளால் மிகவும் கண்காணிக்கப்படுகிறது.[5]

கோட்டையின் அமைப்பு[தொகு]

இப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும் மணற்கற்களைக் கொண்டு மூன்று அடுக்கு வரிசையில் கோட்டையின் சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. சுனார் கோட்டை 1,850 யார்டுகள் (1,690 m) நீளமும், 10–20 அடிகள் (3.0–6.1 m) அகலமும், 280 அடிகள் (85 m) உயரமும் கொண்டது. கோட்டையின் வடக்கு நுழைவாயில் கங்கை ஆற்றைக் நோக்கி அமைந்துள்ளது.

கட்டிடங்கள்[தொகு]

சோன்வா மண்டபம், சுனார் கோட்டை

கோட்டையில் உள்ள முக்கிய அரண்மனையின் மேற்பகுதிகளில் பல பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல ஆடம்பர குடில்களும், குடியிருப்புகளும் கொண்டுள்ளது. கோட்டையில் உள்ள சோனா மண்டபம் திறந்த வெளி அரங்காக உள்ளது.[6]28 தூண்கள் கொண்ட இம்மண்டபம், இந்துக் கட்டிடக் கலைநயத்தில் கட்டப்பட்டுள்ளது. சோனா மண்டபம் நான்கு வாயில்களையும், ஒரு சுரங்கப்பாதையும் கொண்டுள்ளது. அரச குடும்பத்தினர் குளிப்பதற்காக கட்டப்பட்ட, 17 அடிகள் (5.2 m) சுற்றளவும், 200 அடிகள் (61 m) ஆழமும் கொண்ட படிக்கிணறு உள்ளது (Stepwell|bawdi). அருகில் உள்ள கங்கை ஆற்றிலிருந்து இக்கிணற்றில் நீர் சுரப்பதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mirzapur". Official web site of the district by National Informatics Center. http://mirzapur.nic.in/chunar.htm. பார்த்த நாள்: 8 November 2012. 
  2. 2.0 2.1 Thornton, Edward (1858). A Gazetteer of the Territories Under the Government of the East India Company and of the Native States on the Continent of India (Public domain ). W. H. Allen. பக். 215–216. http://books.google.com/books?id=55BbvGEV5uAC&pg=PA215. பார்த்த நாள்: 11 November 2012. 
  3. Sharma, Shripad Rama (1 January 1999). Mughal Empire in India: A Systematic Study Including Source Material. Atlantic Publishers & Dist. பக். 75–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7156-817-8. http://books.google.com/books?id=OnP0Lcp0TGoC&pg=PA75. பார்த்த நாள்: 11 November 2012. 
  4. "The Fort, Chunar (U.P.). 12 September 1803". Online Gallery of British Library. http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/other/019wdz000000100u00000000.html. பார்த்த நாள்: 9 November 2012. 
  5. "Chunar Fort, district jail on Naxal hit list". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 1 January 2001 இம் மூலத்தில் இருந்து 8 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130208083314/http://www.hindustantimes.com/News-Feed/NM4/Chunar-Fort-district-jail-on-Naxal-hit-list/Article1-39804.aspx. பார்த்த நாள்: 9 November 2012. 
  6. Good Earth Varanasi City Guide. Eicher Goodearth Limited. 2002. பக். 182–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87780-04-5. http://books.google.com/books?id=NviJaunGDJMC&pg=PA182. பார்த்த நாள்: 11 November 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனார்_கோட்டை&oldid=3555236" இருந்து மீள்விக்கப்பட்டது