லோணாவ்ளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோனாவ்ளா

லோணாவ்ளா (Lonavla) ( ஒலிப்பு : Lonavla.ogg ) என்பது மகாராஸ்டிராவின் புனே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகரம் ஆகும். இதை லோணாவாளா என்றும் அழைப்பர். ஒரு மலைவாழிடமும் நகராட்சியுமான [1] இந்நகரானது புனே நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர்கள் தொலைவிலும். மும்பை நகரிலிருந்து 96 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் மிட்டாய் உற்பத்திக்காக லோணாவ்ளா நகரம் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.'[2] மும்பை புனே நகரங்களுக்கு இடையேயான முக்கிய நகராக விள்ங்கும் இந்நகரத்தின் தொடர்வண்டி நிலையமும் இவ்விரு நகரங்களுக்கிடயேயான முக்கிய தொடர்வண்டி நிலையமாகவும் விளங்குகிறது. மும்பை – பெங்களுரு நெடுஞ்சாலையும் இந்நகரின் வழியகச் செல்கிறது.

இந்தியக் கடற்படையின் தொழில் நுட்பப் பயிற்சி மையம் ஒன்று இந்நகரில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைக்காட்சி நிலையம் ஒன்று இந்நகரத்தின் தோட்டம் ஒன்றில் மலையாள மொழியில் முதலாவது பிக் பாசு நிகழ்ச்சியை இங்கு படம்பிடித்தது.

பெயர்க்காரணம்[தொகு]

லெனி நகரத்தின் பிராகிருத மொழியில் கல்லில் செதுக்கப்பட்ட ஓய்வெடுக்கும் இடம் என்ற பொருளில் லோணாவாளா என்ற பெயர் வருவிக்கப்பட்டது. இங்கு இதுபோன்ற ஓய்விடங்கள் பல உள்ளன [3].

வரலாறு[தொகு]

தற்போதைய லோணாவாளா யாதவ வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், முகலாயர்கள் இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பகுதியை நீண்ட காலம் ஆட்சி செய்தனர். மராட்டிய பேரரசின் வரலாற்றிலும், பேசுவாக்களின் வரலாற்றிலும் இப்பகுதியில் உள்ள கோட்டைகளும் "மாவாலா" வீரர்களும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.[4]. 1871 ஆம் ஆண்டில், லோனாவாலா மற்றும் கண்டலா மலைவாழிடங்கள் அந்த நேரத்தில் பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த எல்பின்சுடோன் பிரபுவால் கண்டுபிடிக்கப்பட்டன[5].

மக்கள் தொகை பரவல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[6], லோணாவாளாவின் மக்கள் தொகை 57,698 ஆக இருந்தது. இத்தொகையில் ஆண்கள் 53.47 சதவீதமும் பெண்கள் 46.53 சதவீதமும் அடங்கும். லோனாவாலாவில் ஆண் பெண் பாலின விகிதம் 870 ஆகும், இது மாநில சராசரியான 999 ஐ விடக் குறைவு. லோணாவாளாவின் கல்வியறிவு விகிதம் 89.33% ஆகும், இது மாநில சராசரியான 82.34% என்பதை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 93.4%, மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 84.57%. லோணாவாளாவில் மொத்த மக்கள் தொகையில் 10.37 சதவீதம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், Lonavla
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29
(84)
30
(86)
32
(90)
33
(91)
37
(99)
34
(93)
26
(79)
27
(81)
28
(82)
29
(84)
28
(82)
29
(84)
30.2
(86.3)
தாழ் சராசரி °C (°F) 11
(52)
12
(54)
16
(61)
20
(68)
23
(73)
23
(73)
22
(72)
22
(72)
21
(70)
19
(66)
15
(59)
11
(52)
17.9
(64.3)
பொழிவு mm (inches) 4
(0.16)
2
(0.08)
3
(0.12)
18
(0.71)
25
(0.98)
666
(26.22)
1733
(68.23)
1147
(45.16)
495
(19.49)
111
(4.37)
16
(0.63)
3
(0.12)
4,223
(166.26)
ஆதாரம்: weather2stay

சுற்றுலா[தொகு]

லோணாவாளாவும் அதற்கு அருகிலுள்ள கண்டாலாவும் கடல் மட்டத்திலிருந்து 622 மீட்டர் (2,041 அடி) உயரத்தில் அமைந்துள்ள இரட்டை மலை வாழிடங்களாகும். தக்காண பீடபூமி மற்றும் கொங்கன் கடற்கரையின் எல்லையைப் பிரிக்கும் சயாத்ரி மலைத் தொடரில் இவை உள்ளன. இந்த மலைவாழிடம் சுமார் 38 சதுர கிலோமீட்டர் (15 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. . மழைக்காலங்களில் இங்கு சுற்றுலா உச்ச நிலையில் உள்ளது .கார்லா குகைகள், பாய்சா குகைகள், பேத்சா குகைகள்ன் போன்றவை லோனாவாளாவிற்கு அருகில் அமைந்துள்ளன. லோனாவாளா மற்றும் கண்டாலாவுக்கான சுற்றுலா என்பது கார்லா, பாய்சா மற்றும் பெட்சா குகைகள் மற்றும் லோகாகட் மற்றும் விசாபூர் ஆகிய இரண்டு கோட்டைகள் ஆகியவற்றை பார்வையிடும் வருகையாக அமையும். மற்றொரு சுவாரசியமான இடம் துங்கி கோட்டையாகும். இது கர்யாத் கிராமத்திற்கு அருகே மாலிக் அகமத் கைப்பற்றிய கோட்டைகளில் ஒன்றாகும், மேலும் அதன் இயற்கை வலிமைக்கு பெயர் பெற்றது[7].

அந்தர்பன் மலையேற்றப் பாதை பிம்ப்ரி கிராமத்திலிருந்து தொடங்கி, அடர்ந்த காடுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கடந்து பீராவில் முடிகிறது.

முக்கிய இடங்கள்[தொகு]

புலி முனைப் பகுதி

 • கர்லா குகைகள்
 • பாய்சா குகைகள்
 • ராச்மாச்சி முனை
 • ரேவுட் பூங்கா மற்றும் சிவாஜி உதயன்
 • வால்வன் அணை
 • லோணாவ்ளா ஏரி
 • புலி முனை
 • லோகாகாட் கோட்டை
 • பூசி அணை
 • மெழுகுச் சிலை அருங்காட்சியகம்[8]
 • சிங்க முனை
 • துங்கர்லி ஏரி மற்றும் அணை

போக்குவரத்து[தொகு]

சாலை வழி[தொகு]

லோணாவாளா மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே கோபோலி, கர்யாட், டேல்கௌன் தாபேடு போன்ற பல நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

இருப்புப் பாதை[தொகு]

லோணாவாளா நகரம் இரயில் பாதை வழியாகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை உள்ளூர் இரயில்கள் இயங்குகின்றன. இவை மும்பையில் இருந்து புறப்பட்டு கோபோலியை கடைசி நிலையமாகக் கொண்டுள்ளன. கோபோலி பேருந்து நிலையத்திலிருந்து லோனாவ்லாவுக்கு மீதமுள்ள 15 கி.மீ பயணத்தை முடிக்க பேருந்துகள் சரியான இடைவெளியில் கிடைக்கின்றன. மும்பையிலிருந்து இரயிலில் 2.5 மணி நேரமும், புனேவிலிருந்து 1 முதல் 1.5 மணி நேரமும் கோபோலிக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும். மும்பை மற்றும் புனே இடையே பயணிக்கும் அனைத்து ரயில்களும் லோணாவாளாவில் நிறுத்தப்படுகின்றன.

வான்வழி[தொகு]

லோணாவாளாவில் விமான நிலையம் ஏதுமில்லை. புனே விமான நிலையம் 64 கிலோமீட்டர் தொலைவிலும் மும்பை விமான நிலையம் 104 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-11.
 2. "Khandala, Lonavala and Karla".
 3. "Lonavla, History of Maharashtra". Hotels in Lonavla. Archived from the original on 27 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
 4. "Upper Deck resort- Lonavla History". Upper Deck resorts. Archived from the original on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
 5. "Lonavla, India". Mumbai.org.uk. பார்க்கப்பட்ட நாள் 2010-01-31.
 6. Govt. of India. "Lonavala Population Census 2011". Census of India. Census of India. பார்க்கப்பட்ட நாள் 18 February 2017.
 7. "Tungi fort". NIC Raigad-Alibaug. Archived from the original on 2016-08-31. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.
 8. [1]

வெளி இணைப்புகள்[தொகு]


வார்ப்புரு:புனே மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோணாவ்ளா&oldid=3718339" இலிருந்து மீள்விக்கப்பட்டது