மஹாபலீஸ்வர்

ஆள்கூறுகள்: 17°55′N 73°40′E / 17.92°N 73.67°E / 17.92; 73.67
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஹாபலீஸ்வர்
மஹாபலீஸ்வர்
இருப்பிடம்: மஹாபலீஸ்வர்

, மகாராஷ்டிரம்

அமைவிடம் 17°55′N 73°40′E / 17.92°N 73.67°E / 17.92; 73.67
நாடு  இந்தியா
மாநிலம் மகாராஷ்டிரம்
மாவட்டம் சாத்தாரா மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி மஹாபலீஸ்வர்
மக்கள் தொகை 12,736 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


[convert: invalid number]

மகாபலேசுவர் கோயில்
கிருட்டிணை அம்மன் கோயில், கிருட்டிணா ஆற்றின் பிறப்பிடம்

மகாபலீசுவர் (ஆங்கிலம்:Mahabaleshwar), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள சாத்தாரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். இது புனேவிற்கு தென்மேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த ஒரு பீடபூமி மற்றும் மலை வாழிடமாகும். இதனருகில் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய மகாபலேசுவர் எனுமிடத்தில் கிருட்டிணா ஆற்றின் பிறப்பிடத்தில் கிருட்டிணை அம்மன் கோயில் மற்றும் மகாபலேசுவர் கோயில் உள்ளது. இங்குள்ள மலைத்தோட்டங்களில் செம்புற்றுப் பழங்கள் அதிகம் விளைகிறது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 17°55′N 73°40′E / 17.92°N 73.67°E / 17.92; 73.67 ஆகும்.[1]மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த மகாபலீசுவர் பீடபூமி கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 1,439 மீட்ட்ர் (4,721) உயரத்தில் உள்ளது. இப்பீடபூமி 150 சதுர கிலோ மீட்டர் (58 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. மகாபலீசுவர் பீடபூமியைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளது.

மகாபலீசுவர் பீடபூமியில் கிருட்டிணா ஆறு, கொய்னா ஆறு, சாவித்திரி ஆறு, வீணா ஆறு மற்றும் காயத்ரி ஆறு ஆகிய ஐந்து ஆறுகளின் பிறப்பிடம் ஆகும். பழைய மகாபலீஸ்வர் என்ற இடத்தில் உள்ள பஞ்சகங்கை என்ற கோயிலே இந்த ஆறுகளின் மூலமாக உள்ளது

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,736 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 55% ஆண்கள், 45% பெண்கள் ஆவார்கள். மகாபலீசுவர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மகாபலீசுவர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "Mahabaleshwar". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹாபலீஸ்வர்&oldid=3636467" இலிருந்து மீள்விக்கப்பட்டது