நாக்பூர் மண்டலம்
Appearance
நாக்பூர் மண்டலம்
[தொகு]இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்று நாக்பூர் மண்டலம் ஆகும்.[1] இது நாக்பூர் நகரை தலைநகராகக் கொண்ட மாநிலத்தின் கிழக்கு கோடியில் அமைந்துள்ள மண்டலம்.அமராவதி மற்றும் நாக்பூர் மண்டலங்கள் முந்தைய விதர்பா வலயமாக இருந்தன.
வரலாறு
[தொகு]நாக்பூர் மண்டலம் 1861இல் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. நாக்பூர் நாட்டையும் சௌகார் மற்றும் நெர்புத்தா பகுதிகளையும் சேர்த்து நடுவண் மாநிலங்கள் உருவாக்கினர்.விடுதலையான பிறகு மொழி வாரி சீரமைப்பின்போது 1956இல் பம்பாய் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.1960இல் பம்பாயின் மராத்தி பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு தற்போதைய மகாராட்டிரம் உருவானது.
சில புள்ளிவிவரங்கள்
[தொகு]- பரப்பு: 51,336 ச.கி.மீ (19,821 ச.மை)
- மக்கள்தொகை(2001 கணக்கெடுப்பு): 10,665,939
- மாவட்டங்கள்: பந்தாரா, சந்திராபூர், கட்சிரோலி,கோண்டியா,நாக்பூர்,வார்தா
- படிப்பறிவு: 75.90%
- பாசன பரப்பு: 4,820 ச.கி.மீ
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)". மகாராட்டிர அரசு. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.