அமராவதி மண்டலம்
அமராவதி மண்டலம், மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஏழு மண்டலங்களில் ஒன்று அமராவதி மண்டலம். [1]முந்தைய விதர்பா வலயம் அமராவதி மற்றும் நாக்பூர் மண்டலங்களை உள்ளடக்கி இருந்தது. இம்மண்டலத்தின் வடக்கே மத்தியப்பிரதேச மாநிலம்,கிழக்கே நாக்பூர் மண்டலம், தென்கிழக்கே ஆந்திரப்பிரதேசமாநிலம்,தெற்கிலும் தென்மேற்கிலும் ஔரங்காபாத் மண்டலம்(மராத்வாடா) மற்றும் மேற்கில் நாசிக் மண்டலம் அமைந்துள்ளன.
அமாராவதி மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள்
[தொகு]சில புள்ளிவிவரங்கள்
[தொகு]- பரப்பளவு: 46,090 km²
- மக்கள்தொகை: 9,941,903 [2]
- மாவட்டங்கள்: அகோலா, அமராவதி, புல்தானா,வாசிம்,யவத்மால்
- படிப்பறிவு: 77.79%
- பாசன பரப்பு: 2,582.02 ச.கி.மீ
- தொடர்வண்டி பாதை: அகலப் பாட்டை 249 கி.மீ, மீட்டர் பாட்டை 227 கி.மீ, குறுகிய பாட்டை 188 கி.மீ.
வரலாறு
[தொகு]அமராவதி மண்டல நிலப்பரப்பு முற்கால பேரார் குறுநாட்டை பெரும்பாலும் ஒத்துள்ளது. இக்குறுநாடு நாக்பூர் மராத்தா மகாராசாக்களால் ஹைதராபாத் நிசாமிற்கு 1803இல் இழக்கப்பட்டது. 1853இல் பிரித்தானியர் நிசாம் மக்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றினர். 1903இல் பிரித்தானிய நடுவண் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டு நடுவண் மற்றும் பேரார் மாநிலம் என அழைக்கப்பட்டது. இதுவே விடுதலைக்குப் பிறகு மத்தியப் பிரதேசமாக உருவானது. 1956இல் மொழிவாரி மாநில சீரமைப்பின்போது பம்பாய்
மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. 1960இல் உருவான மகாராட்டிர மாநிலத்தில் பின்னர் இணைந்தது.
விதர்பா மகாராட்டிர மாநிலத்தின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.விவசாயிகள் தற்கொலைகள் மிகுந்த இப்பகுதியில் தனி மாநில கோரிக்கை வலுத்து வருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)". மகாராட்டிர அரசு. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2014.
- ↑ மக்கள்தொகை கணக்கெடுப்பு 2001