ஆந்திரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆந்திரப்பிரதேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆந்திரப் பிரதேசம்

ఆంధ్ర ప్రదేశ్ - ஆந்திரா

—  மாநிலம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டங்கள் 13
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 1956
தலைநகரம் அமராவதி (கட்டுமானத்தில்)
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்[1]
முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]
ஆளுநர் இ. எஸ். எல். நரசிம்மன்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஈரவை (294 + 90)
மக்களவைத் தொகுதி ஆந்திரப் பிரதேசம்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/ஆந்திரப் பிரதேசம்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/ஆந்திரப் பிரதேசம்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/ஆந்திரப் பிரதேசம்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

76 (5வது) (2002)

277/km2 (717/sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg0.572 (medium) (20வது)
கல்வியறிவு 72.5% (13வது)
மொழிகள் தெலுங்கு, உருது
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 160205 கிமீ2 (61855 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-AP
இணையதளம் www.ap.gov.in


ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. ஐதராபாத் ஆந்திரப்பிரதேசத்துக்கும் தெலுங்கானாவுக்கும் பொது தலைநகராக 10 ஆண்டுகளுக்கு இருக்கும். ஆந்திரத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது.விஜயவாடா, விசாகப்பட்டிணம் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெலுங்கு. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இது இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும். 2014 யூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்ட பிறகு இம்மாநிலம் அதிகாரபூர்வமற்ற சீமாந்திரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஐதரபாத்திற்கு அடுத்து பெரிய நகரம் விசாகப்பட்டிணம் ஆகும்,

புவியமைப்பு[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் தெலுங்கானாவும் தெற்கில் தமிழ்நாடும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் வடகிழக்கில் ஒரிசாவும் மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் கருநாடகத்துக்கு அடுத்து இதுவே பெரிய மாநிலமாகும். இந்திய மாநிலங்களில் இது இரண்டாவது நீண்ட கடற்கரையை கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.

1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் ஐதராபாத் மாநிலத்தையும் சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் பகுதியையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே. தெலுங்கானா ஐதராபாத் மாநிலத்தின் பகுதியாக இருந்தது, இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 யூன் மாதம் தெலுங்கானா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.


மாவட்டங்கள்[தொகு]

பொருளாதாரம்[தொகு]

விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அரசியல்[தொகு]

ஆந்திரப் பிரதேச சட்டசபைக்கு கீழவையும் மேலவையும் உண்டு. இதில் கீழவை உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். கீழவைக்கு 294 இடங்களும் மேலவைக்கு 90 இடங்களும் உண்டு. மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் 31 உறுப்பினர்கள் உள்ளாச்சி அமைப்புகள் மூலமும், 31 உறுப்பினர்கள் கீழவை உறுப்பினர்களாலும் 8 உறுப்பினர்கள் ஆசிரியர்களாலும் 8 உறுப்பினரகள் பட்டதாரிகளாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமிக்கப்படுவார்கள். இந்திய மக்களவைக்கு இம்மாநிலத்திற்கு 42 உறுப்பினர்கள் உண்டு, இந்திய மேலவைக்கு 18 உறுப்பினர்கள் உண்டு. 1982 வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்களே முதலமைச்சர்களாக இருந்தனர். 1983ல் தெலுங்கு தேசம் கட்சியின் என். டி. ராமராவ் முதல்வராக அமர்ந்தார். 1982 மார்ச் மாதம் தெலுங்கு தேசம் கட்சியை ராமராவ் உருவாக்கினார்.

மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ல் நடந்த முதல் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு முதல்வரானார்.

மக்கள்[தொகு]

ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேசத்தின் மக்கள் தொகை இதுவாகும்.

சமயவாரியாக மக்கள் தொகை [3]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 76,210,007 100%
இந்துகள் 67,836,651 89.01%
இசுலாமியர் 6,986,856 9.17%
கிறித்தவர் 1,181,917 1.55%
சீக்கியர் 30,998 0.04%
பௌத்தர் 32,037 0.04%
சமணர் 41,846 0.05%
ஏனைய 4,768 0.01%
குறிப்பிடாதோர் 94,934 0.12%

கலாசாரம்[தொகு]

தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.

ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.

ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.

தலைநகரம்[தொகு]

தற்போது உள்ள தலைநகரமான ஐதரபாத்து 10 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆந்திரப்பிரதேசத்தின் பயனில் இருக்கும். பின் அது தெலுங்கானாவிற்கு மட்டுமே உரியதாகிவிடும். புதிய தலைநகருக்கான தேடலில் விஜயவாடா பகுதியில் புதிய தலைநகரம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. [4] ஐதரபாத்து, விசாகப்பட்டிணத்துக்கு அடுத்து பெரிய நகரம் விஜயவாடாவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. Census of india , 2001
  4. Andhra Pradesh capital to be located around Vijayawada

புகைப்பட தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பிரதேசம்&oldid=1995974" இருந்து மீள்விக்கப்பட்டது