பச்சைக்கிளி
பச்சைக்கிளி | |
---|---|
ஆண் பறவை P. k. borealis | |
பெண் பறவை
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | P. krameri
|
இருசொற் பெயரீடு | |
Psittacula krameri (Scopoli, 1769) | |
Original (wild) range | |
வேறு பெயர்கள் | |
|
பச்சைக்கிளி அல்லது செந்தார்ப் பைங்கிளி (rose-ringed parakeet (Psittacula krameri) (இலங்கையில் பேச்சு வழக்கில்: பயற்றங்கிளி) என்பது பிசிட்டாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பிசிட்டாகுலா பேரினத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான கிளி ஆகும். இது ஆப்பிரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டத்தை பூர்வீகமாக கொண்டது. மேலும் இப்போது இது உலகின் பல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக வளர்க்கப்படுகிறன. அங்கு காட்டுப் பறவையாகவும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன.
சீர்குலைந்த வாழ்விடங்களிலும் வாழத் தகமைத்துக் கொண்ட சில கிளி இனங்களில் இதுவும் ஒன்று. நகரமயமாக்கல், காடழிப்பு ஆகியவற்றின் தாக்குதலைத் தாங்கி இது நிற்கிறது. பிரபலமான செல்லப்பிராணியான இதில், தப்பிய பறவைகள் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பறவைகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் குடியேறியுள்ளன.[2] இந்த கிளிகள் தங்கள் பூர்வீக எல்லைக்கு வெளியே பல்வேறு காலநிலைகளில் வாழும் திறன் கொண்டவை என்பதை மெய்பித்துள்ளன. மேலும் இவை வடக்கு ஐரோப்பாவில் குளிர்காலத்தின் குறைந்த வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டவையாகவும் உள்ளன.[3][4] இந்த இனமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (IUCN) தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது, ஆனால் செல்லப்பிராணியாக புகழ் பெற்ற இதற்கு விவசாயிகளிடையே செல்வாக்கின்மையால் இதன் சொந்த வாழிடப் பரப்பின் சில பகுதிகளில் இதன் எண்ணிக்கையை குறைத்துள்ளது.[1]
வகைபிரித்தல்
[தொகு]இதில் நான்கு துணையினங்கள் அறியப்படுகின்றன. அவை சிறிய அளவில் வேறுபடுகின்றன:
- ஆப்பிரிக்க துணையினங்கள்:
- African rose-ringed parakeet (P. k. krameri): மேற்கு ஆப்பிரிக்காவில் கினி, செனிகல், தெற்கு மூரித்தானியா, கிழக்கிலிருந்து மேற்கு உகாண்டா, தெற்கு சூடான், வடக்கே எகிப்து. நைல் பள்ளத்தாக்கு மற்றும் கீசாவில் வசிக்கும் இது சில நேரங்களில் வடக்கு கடற்கரையிலும் சினாயிலும் காணப்படுகிறது. ஆப்பிரிக்க பச்சைக் கிளி 1980 களில் இசுரேல் மற்றும் யோர்தானில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்கியது. மேலும் அங்கு ஒரு ஆக்கிரமிப்பு இனமாக கருதப்படுகிறது.
- Abyssinian rose-ringed parakeet (P. k. parvirostris): வடமேற்கு சோமாலியா, மேற்கே வடக்கு எத்தியோப்பியாவிலிருந்து சூடானின் சென்னார் மாநிலம்,
- ஆசிய துணையினங்கள்:
- இந்தியப் பச்சைக்கிளி The Indian rose-ringed parakeet (P. k. manillensis) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்னிந்தியாவில் உருவானது. ஆனால் உலகளவில் ஆத்திரேலியா, பெரிய பிரித்தானியா (முதன்மையாக இலண்டனைச் சுற்றியுள்ள பகுதிகள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள், மற்றும் பிற மேற்கத்திய நாடுகளில் காட்டுப் பறவையாகவும் இயற்கையான பறவையாகவும் பரவியுள்ளது. இது பெரும்பாலும் இந்தியப் பச்சைக் கிளி ( Indian ringneck parrot) என்று அழைக்கபடுகிறது.[5][6]
- The boreal rose-ringed parakeet (P. k. borealis) வங்காளதேசம், பாக்கித்தான், வட இந்தியா நேபாளத்தில் இருந்து நடு மியான்மர் வரை பரவியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.
ஆசிய துணை இனங்கள் ஆப்பிரிக்க துணையினங்களை விட பெரியவை.[5]
விளக்கம்
[தொகு]இக்கிளிகளின் வால் நீண்டு கூர்மையாக முடிகிறது. பச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், கருப்பு இளஞ்சிவப்பு கலந்த கழுத்து வளையம் போன்ற ஆரம் உடையது. இவ்வின பெண்கிளி எல்லாவகையிலும் ஆண்கிளி போல இருந்தாலும் இந்த ஆர வளையம் இல்லாமல் இருக்கும். இப்பறவைகள் கூண்டுகளில் வைத்து வளர்க்கப்படுகின்றன. இப்பறவைகள் மனிதர்கள் சொல்லும் சொற்களைக் கேட்டு அவற்றைத் திரும்பச் சொல்லக்கூடியவை. இவற்றை வைத்து சர்க்கசில் வேடிக்கைக் காட்டுவார்கள்.
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Psittacula krameri". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "How do parakeets survive in the UK?". http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/6478911.stm.
- ↑ "How do parakeets survive in the UK?" (in en-GB). 2007-03-22. http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/6478911.stm.
- ↑ "Ring Necked Parakeets in the UK". The RSPB (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-20.
- ↑ 5.0 5.1 Pithon, Josephine; Dytham, Calvin (2001). "Determination of the origin of British feral Rose-ringed Parakeets". British Birds: 74–79. https://britishbirds.co.uk/article/determination-of-the-origin-of-british-feral-rose-ringed-parakeets/. பார்த்த நாள்: 14 October 2017.
- ↑ Morgan, David (1993). "Feral Rose-ringed Parakeets in Britain". British Birds: 561–4. https://britishbirds.co.uk/article/feral-rose-ringed-parakeets-in-britain/. பார்த்த நாள்: 14 October 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- Species text—The Atlas of Southern African Birds
- Photos—Oriental Bird Images
- Videos, photos and sounds