பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம்
பாபிகொண்டா வனவிலங்குச் சரணாலயம் (Papikonda National Park) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலும், தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்திலும் 1,012.86 கிலோமீட்டர் 2 பரப்பளவில் அமைந்துள்ளது. [1]
இச்சரணாலயத்தில் புலிகள், சிறுத்தைகள், சம்பார் மற்றும் புள்ளி மான் மற்றும் காட்டெருமை போன்ற வனவிலங்கு பாலூட்டிகள் வசிக்கின்றன. 1980 களில் இங்கு நீர்காட்டெருமை காணப்பட்டதாக இங்குள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்பொழுது இவ்வின எருமைகள் எதுவும் இங்கு இருப்பதாக அறியப்படவில்லை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "PAPIKONDA Wildlife Sanctuary". AP forest department. 25 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 June 2014 அன்று பார்க்கப்பட்டது.