மேற்கு கோதாவரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
India - Andhra Pradesh - West Godavari.svg

மேற்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும்.

ஆட்சிப் பிரிவுகளும் தொகுதிகளும்[தொகு]

தொகுதிகள்[தொகு]

இதன் தலைநகரம் ஏலூரு ஆகும். பீமவரம் இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கிய ஊராகும். இம்மாவட்டத்தை 46 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகள் ஏலூர், நரசாபுரம், ராஜமுந்திரி ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளில் உள்ளன. [1] 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[1]

ஆங்கிலேயர்கள், சென்னை ராஜதானியில் மசுலீபட்டணத்தை மையமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டனர். 1794-ல் காகினாடவிலும் ராஜமுந்திரியிலும் இரண்டு ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1859-ல் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. 1925 ஏப்ரல் 15 அன்று கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாக பிரித்தும், புதிதாக மேற்கு கோதாவரி மாவட்டத்தை அமைத்தும் சென்னை அரசு முடிவெடுத்தது. முந்தைய கோதாவரி மாவட்டத்தின் பெயர் கிழக்கு கோதாவரி மாவட்டம் என பெயர் மற்றப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இம்மாவட்டத்தை 48 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

 1. ஜீலுகுமில்லி
 2. புட்டாயகூடம்
 3. போலவரம்
 4. தாள்ளபூடி
 5. கோபாலபுரம்
 6. கொய்யலகூடம்
 7. ஜங்காரெட்டிகூடம்
 8. டி. நரசாபுரம்
 9. சிந்தலபூடி
 10. லிங்கபாலம்
 11. காமவரப்புகோட்டை
 12. துவாரகா திருமலை
 13. நல்லஜர்லா
 14. தேவரபள்ளி
 15. சாகல்லு
 16. கொவ்வூர்
 17. நிடதவோலு
 18. தாடேபள்ளிகூடம்
 19. உங்குட்டூர்
 20. பீமடோலு
 21. பெதவேகி
 22. பெதபாடு
 23. ஏலூரு
 24. தெந்துலூர்
 25. நிடமர்ரு
 26. கணபவரம்
 27. பெண்டபாடு
 28. தணுக்கு
 29. உண்ட்ராஜவரம்
 30. பெரவலி
 31. இரகவரம்
 32. அத்திலி
 33. உண்டி
 34. ஆகிவீடு
 35. காள்ளா
 36. பீமவரம்
 37. பாலகோடேர்
 38. வீரவாசரம்
 39. பெனுமண்ட்ரா
 40. பெனுகொண்டா
 41. ஆச்சண்டா
 42. போடூர்
 43. பாலகொல்லு
 44. எலமஞ்சிலி
 45. நரசாபுரம்
 46. மொகல்தூர்
 47. குக்குனூர்
 48. வேலேருபாடு

சுற்றுலா[தொகு]

 • பீமவரத்தில் பஞ்சாராமர் கோயில் (ஸோமாராமம்)
 • பால்கொல்லில் பஞ்சாராமர் கோயில் (க்ஷீராராமம்)
 • சின்னத் திருப்பதி எனப்படும் துவாரகா திருமலை
 • கொல்லேரு ஏரி
 • பாபி மலை
 • படட்டிசீமையில் உள்ள ஶ்ரீ வீரபத்திரர் திருக்கோயில்
 • காமவரப்புகோட்டை அருகில் உள்ள குன்டுபள்ளி பௌத்த குகைகள்

சான்றுகள்[தொகு]