அனகாபள்ளி மாவட்டம்
அனகாபள்ளி மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | அனகபள்ளி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://anakapalli.ap.gov.in |
அனகாபள்ளி மாவட்டம் (Anakapalli district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடம் அனகபள்ளி நகரம் ஆகும். இம்மாவட்டம் புதிதாக 4 ஏப்ரல் 2022 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களைக் கொண்டு அனகாபள்ளி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[3][4][5][6]
4,292 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அனகப்பள்ளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17.270 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 62.02% ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]அனகாபள்ளி மாவட்டம் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களையும்,[7] 24 மண்டல்களையும், 753 கிராமங்களையும் கொண்டது. இம்மாவட்டம் எலமான்சிலி மற்றும் நரசிப்பட்டினம் எனும் 2 நகராட்சிகளையும், 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களையும் கொண்டது.
அனகாபள்ளி மண்டலம், விசாகப்பட்டினம் மாநகராட்சியின் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது.[8] இம்மாவட்டத்தின் 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் பௌலுவாடா, யலமஞ்சிலி, சூடாவரம், நரசிப்பேட்டை, முலகுட்டு, நக்கப்பள்ளி, பெத்த புத்தபள்ளி மற்றும் பாயகராவுபேட்டை ஆகும்.
மண்டல்கள்
[தொகு]இம்மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் 24 மண்டல்கள் உள்ளது.
# | அனகாப்பள்ளி வருவாய் கோட்டம் | நரசிப்பட்டினம் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | அனகாபள்ளி | ரோலுகுண்டா |
2 | அச்சுதாபுரம் | கோலுகொண்டா |
3 | புத்சாய்யாபேட்டை | கோதௌராத்லா |
4 | சூடாவரம் | மகாவரபேலம் |
5 | தேவரப்பள்ளி | நக்கப்பள்ளி |
6 | கே. கோட்டப்பாடு | நாதவரவம் |
7 | காசிம்கோட்டை | நரசிப்பட்டினம் |
8 | யலமஞ்சிலி | பாயகராவுபேட்டை |
9 | ராம்பில்லி | ரவிகாமதாம் |
10 | முனகபாகா | எஸ். ராயவரம் |
11 | பாரவாதா | மடுகுலா |
12 | சப்பாவரம் | சீடிகடா |
அரசியல்
[தொகு]அனகாப்பள்ளி மாவட்டம் அனகாபல்லி மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Andhra Pradesh adds 13 new districts
- ↑ A.P. to have 26 districts from 04 April 2022
- ↑ Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece.
- ↑ "ANDHRA PRADESH GAZETTE". G.O.Rt.No.60, Revenue (Lands-IV), 25 [ 1 ] th January, 2022: 117. 25 January 2022.
- ↑ "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "కొత్త జిల్లా తాజా స్వరూపం". Eenadu.net (in தெலுங்கு). 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "GO issued for creation of Anakapalle revenue division". The Hindu (Viskhapatnam). 4 April 2013. http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/go-issued-for-creation-of-anakapalle-revenue-division/article4580216.ece.
- ↑ "Adminsistrative divisions of Visakhapatnam district". Official Website of Visakhapatnam District. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 16 January 2015.