காக்கிநாடா மாவட்டம்
Appearance
காக்கிநாடா மாவட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | காக்கிநாடா |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://kakinada.ap.gov.in |
காக்கிநாடா மாவட்டம் (Kakinada district) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இப்புதிய காக்கிநாடா மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காக்கிநாடா மற்றும் பெத்தபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடம் காக்கிநாடா நகரம் ஆகும்.
5,73,959 வீடுகளும், 3019.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட காக்கிநாடா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 20,92,374 ஆகும். அதில் ஆண்கள் 10,42,215, பெண்கள் 10,50,159 உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இப்புதிய காக்கிநாடா மாவட்டம் 2 வருவாய்க் கோட்டங்களும், 19 மண்டல்களும், 362 கிராமங்களும் கொண்டது.
மண்டல்கள்
[தொகு]# | காக்கிநாடா வருவாய் கோட்டம் | பெத்தபுரம் வருவாய் கோட்டம் |
---|---|---|
1 | சாமல்கோட் | பெத்தபுரம் |
2 | பிடாபுரம் | ஜக்கம்பேட்டை |
3 | கொல்லாப்பிரோலு | கந்தேபள்ளி |
4 | கொத்தப்பள்ளி | கீர்லாபுடி |
5 | கரப்பா | துனி |
6 | காக்கிநாடா கிராமப்புறம் | கொத்தநந்துரு |
7 | காக்கிநாடா நகர்புறம் | பிரத்திபாடு |
8 | பெத்தபுடி | சங்காவரம் |
9 | தொண்டாங்கி | எல்லேஸ்வரம் |
10 | ரௌத்துலபுடி |
அரசியல்
[தொகு]காக்கிநாடா மாவட்டத்தில் காக்கிநாடா மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளும் கொண்டது. அவைகள்:
- துனி சட்டமன்றத் தொகுதி
- பிரத்திபாடு சட்டமன்றத் தொகுதி
- பிடாபுரம் சட்டமன்றத் தொகுதி
- காக்கிநாடா கிராமப்புறம் சட்டமன்றத் தொகுதி
- காக்கிநாடா நகர்புறம் சட்டமன்றத் தொகுதி
- பெத்தபுரம் சட்டமன்றத் தொகுதி
- ஜக்கம்பேட்டை சட்டமன்றத் தொகுதி