உள்ளடக்கத்துக்குச் செல்

பீமாவரம் சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீமாவரம் சிவன் கோயில் (Somarama) ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கோதாவரி மாவட்டத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

ராஜமுந்திரியிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள பீமாவரத்தில் இக்கோயில் உள்ளது.

பிமீச்சரம்

[தொகு]

இவ்வூர் பிமீச்சுரம் என்றும் விவீச்சுரம் என்றும் அழைக்கப்படுகிறது.[1]

பஞ்சஹாரம்

[தொகு]

பஞ்சஹாரம் (ஐந்து தோட்டங்கள்) என்று அழைக்கப்படுகின்ற ஐந்து சிவன் கோயில்களில் பீராமவரம் சிவன் கோயிலும் ஒன்றாகும். பிற கோயில்கள் அமராவதி, திராட்சராமம், சாமல் கோட்டை, பீதாபுரம் ஆகிய இடங்களில் உள்ளன. இவ்வூர் தட்சிண கயா என்றும் அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமாவரம்_சிவன்_கோயில்&oldid=4007408" இலிருந்து மீள்விக்கப்பட்டது