எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுமூர் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில், எழும்பூர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:எழும்பூர்
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி வைகாசி விசாகம் சித்திரா பௌர்ணமி தை அமாவாசை ஆருத்ரா தரிசனம் மாசி மகம்

எழுமூர் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் என்பது சென்னை மாவட்டத்தின் எழும்பூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்[தொகு]

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆராவமுதன் தோட்ட தெருவில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி திரிபுரசுந்தரி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சுயம்பு லிங்கம் இதுவாகும்.[2]

பிற சன்னதிகள்[தொகு]

லட்சுமி நாராயணர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-06. பார்க்கப்பட்ட நாள் 2017-09-30.

வெளி இணைப்புகள்[தொகு]

கோயில் அமைவிடம் கோயில் அமைவிடம்