தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தஞ்சைத் தளிக்குளம் தளிக்குளநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூர் நகரில் சிவகங்கைப் பூங்காவின் நடுவில் உள்ள திடலில் உள்ளது.

இறைவன்[தொகு]

குளத்தின் நடுவில் உள்ள திடலில் காணப்படுகின்ற லிங்கத்திருமேனி தளிக்குளநாதர் என்றழைக்கப்படுகிறார். [1]

சிறப்பு[தொகு]

குளக்கரையிலிருந்து லிங்கத்திருமேனியைப் பார்க்கலாம். லிங்கத் திருமேனிக்கு எதிரில் நந்தி, பலி பீடம் ஆகியவை உள்ளன. படகுத்துறையிலிருந்து இழுவை ரயிலில் சென்றால் குளத்தின் நடுவில் உள்ள கோயிலை அடையலாம். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009