நெய்தவாசல் முனிவாசக சுவாமி கோயில்
தோற்றம்
நெய்தவாசல் முனிவாசக சுவாமி கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]
அமைவிடம்
[தொகு]திருவெண்காட்டிலிருந்து இடது புறம் அதே சாலையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் முனிவாசகசுவாமி ஆவார். இவர் கைலசநாதர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இறைவி மதுரபாஷிணி ஆவார்.[1]
அமைப்பு
[தொகு]கருவறையில் நீண்டு உயர்ந்த பாணத்தோடு மூலவர் உள்ளார். திருச்சுற்றில் செல்வ விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[1]