இறகுசேரி மும்முடிநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறகுசேரி மும்முடிநாதர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

தஞ்சை மாவட்டதில் இப்பெயருடைய தலம் ஒன்று உள்ளது. இவை இரண்டுமே தேவார வைப்புத்தலமாகக் கொள்ளப்படுகின்றன.[2]

அமைவிடம்[தொகு]

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இறையான்சேரி என்பது மருவி மக்கள் வழக்கில் இறகுசேரி, இரவுசேரி என்று அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் மும்முடிநாதர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]

அமைப்பு[தொகு]

செம்பராங்கல்லால் ஆன பழமையான கோயிலை, 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் விரிவு படுத்தி, கற்றளி கோயிலாக எழுப்பி, 05.06.1922இல் குடமுழுக்கு செய்துள்ளனர்.[3]

ஏழுநிலை ராஜகோபுரம், நடராஜ சபை, இறைவன்-இறைவி சன்னதி, நால்வர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. "தேவார வைப்புத்தலம்". SAIVAM. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. அரு.சுந்தரம். நகரத்தாரின் அறப்பணிகள். மணிமேகலை பிரசுரம். பக். 124.