தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பைரவநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சுப்பிரமணியன்காடு, தகட்டூர், வேதாரண்யம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேதாரண்யம்
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:பைரவநாதசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:பௌர்ணமி திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:நகரத்தார் கட்டிடக்கலை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் (Bairavanathar Temple, Thagattur) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், தகட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] [2] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[3]

அமைவிடம்[தொகு]

தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் வாய்மேட்டிற்கு அருகே வேதாரண்யத்திற்கு மேற்கில் 20 கிமீ தொலைவில், முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது.[4]

தெய்வம்[தொகு]

பைரவர் பிரதான சன்னதியில் காணப்படுவதால், இக்கோயில் பைரவநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பிரதான சன்னதியில் பைரவரை கொண்ட ஒரே கோயில் தகட்டூர் பைரவநாதசுவாமி கோயிலாகும். இலங்கையில் ராவணன் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நோயிலிருந்து விடுபட, ராமர் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினார். அதனால் அனுமனை காசிக்கு அனுப்பினார். அங்கிருந்து அனுமன் வந்ததும் பைரவர் உடன் சென்றார். காசியிலிருந்து லிங்கத்தைப் பாதுகாக்க வந்ததால், தகட்டூரில் தங்க விரும்பினார். இந்த கோவிலில் சக்கரம் வைக்கப்பட்டுள்ளதால், இந்த இடம் யந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. சன்னதியில் சட்டைநாதர் சிற்பமும் காணப்படுகிறது

பைரவநாதர் மற்றும் சிவலோகநாதர் எனப்படும் லிங்கத்தால் கர்ப்பக்கிரகத்தில் உள்ள பைரவர் குறிக்கப்படுகிறார். தேவி சிவகாமசுந்தரி என்று அழைக்கப்படுகிறார். அபிதான சிந்தாமணியில் பைரவரைப் பற்றிய குறிப்பு உள்ளது.ஓர் அசுரன் தவம் செய்து சிவனிடம் வரம் பெற்றான். தான் கொல்லப்பட்டே இறக்க வேண்டும். ஆனால் அது ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ்வேண்டும் என்பதே அந்த அசுரன் கேட்ட வரமாகும். ஒரு பெண்ணால் தன்னைக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான். எனவே அனைவரையும் தொந்தரவு செய்யத் தொடங்கினான். சிவபெருமான் ஒரு பெண்ணைப் படைத்து அவளுக்கு காளி என்று பெயரிட்டார். அசுரன் காளியால் கொல்லப்பட்டான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. அருள்மிகு பைரவர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  3. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  4. திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

புற இணைப்புகள்[தொகு]