உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்லாம்பாக்கம் சிதம்பரேசர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்லாம்பாக்கம் சிதம்பரேசர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்[தொகு]

பண்ருட்டி - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் புதுப்பேட்டையை அடுத்து உள்ள காசி விசுவநாதர் கோயில் உள்ள தெருவின் இடப்புறத்தில் இக்கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் சிதம்பரேசர் என்றும், சிற்றம்பலநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார்.[1]

பிற சன்னதிகள்[தொகு]

விநாயகர், லட்சுமி, நாராயணர், முருகன், அருணாசலேசுவரர் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009