செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள செங்கம் என்னும் ஊரில் இக்கோயில் உள்ளது. இவ்வூர், கல்வெட்டில் தென்கண்ணை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் ரிஷபேஸ்வரர் ஆவார். இறைவி அனுபாம்பிகை ஆவார். [1]

பிற சன்னதிகள்[தொகு]

உள் திருச்சுற்றில் விநாயகர், மகாலட்சுமி, நவக்கிரகம், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]

சிறப்பு[தொகு]

இக்கோயிலில் ஆண்டுக்கொரு முறை பங்குனி 3ஆம் தேதி மாலையில் சூரிய ஒளி கோயில் கோபுரத்தில் விழுந்து சிறிது நேரத்தில் நந்தி மீது விழும். அப்போது சில நிமிடங்கள் நந்தி பொன் நிறத்தில் மின்னுவதைக் காணமுடியும். இதைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. பொன் நிறத்தில் ஜொலித்த நந்தி, தினமணி, 17 மார்ச் 2020