மட்டியான்திடல் கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மட்டியான்திடல் கைலாசநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்[தொகு]

கும்பகோணம்-பாபநாசம்-திருக்கருகாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் மட்டியான்திடல் உள்ளது.[கு 1] இவ்வூரை மட்டையான்திடல் என்னும் அழைக்கின்றனர். அவ்வூரில் இக்கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் கைலாசநாதர் ஆவார். இறைவி நித்யகல்யாணி ஆவார். [1]

சப்தஸ்தானம்[தொகு]

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[2]

பிற சன்னதிகள்[தொகு]

இக்கோயிலின் திருச்சுற்றில் சுந்தரராஜப்பெருமாள், நவக்கிரகங்கள், பைரவர் சன்னதிகள் உள்ளன. உள் திருச்சுற்றில் நால்வர், சோமாஸ்கந்தர், சித்தி விநாயகர், உற்சவமூர்த்திகள், சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். அருகில் நடராஜ சபை உள்ளது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை ஆகிய இரு ஊர்களுமே சேலூர் என்று கூறப்படுவதாக பூ.மா.ஜெயசெந்தில்நாதன் தன்னுடைய தேவார வைப்புத்தலங்கள் என்னும் நூலில் (ப.233) குறிப்பிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002