திருவிடைமருதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவிடைமருதூர்
—  பேரூராட்சி  —
திருவிடைமருதூர்
இருப்பிடம்: திருவிடைமருதூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°35′N 79°17′E / 10.58°N 79.28°E / 10.58; 79.28ஆள்கூற்று: 10°35′N 79°17′E / 10.58°N 79.28°E / 10.58; 79.28
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் . இ .ஆ .ப [3]
பெருந்தலைவர் MR.கோபாலகிருஷ்ணன்
மக்கள் தொகை 13,758 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

திருவிடைமருதூர் (ஆங்கிலம்:Thiruvidaimarudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4]

இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு.[5] வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%, பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[6]

அரசு அலுவலகங்கள்[தொகு]

ரயில்வே ஸ்டேசன், துணை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும், கிளைச்சிறையும், சார்பதிவாளர்அலுவலகமும், அரசுகருவூலம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, போன்ற வங்கிகளும் உள்ளன. ஒன்றிய தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் திகழ்கிறது.

திருநீலக்குடி சப்தஸ்தானம்[தொகு]

திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[7]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21
  5. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005, பக்கம் 221
  6. "Thiruvidaimarudur Population Census 2011". பார்த்த நாள் 9 சூன் 2015.
  7. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிடைமருதூர்&oldid=2208649" இருந்து மீள்விக்கப்பட்டது