முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
Mullivaikkal3.jpg
அமைவிடம்விளார் கிராமம், தஞ்சாவூர், தமிழ்நாடு
முள்ளிவாய்க்கால் முகப்பு கல்வெட்டு
திறப்புவிழா கல்வெட்டு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்பது தமிழீழத்தில் கொல்லப்பட்ட,[1][2] தமிழீழத்துக்காக உயிர் விட்ட போராளிகள், தியாகிகள் மற்றும் மக்களை நினைவு கூரும் ஒரு முற்றம் ஆகும். இதில் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தவர்கள் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் விவரங்கள் உள்ளன. இதனை 06-11-2013 அன்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.[3][4] [5][6]

வரலாறு[தொகு]

கட்டுமானம்[தொகு]

இந்த நினைவு முற்றம் கட்டும் பணி நவம்பர் 15, 2010இல் தொடங்கப்பட்டது. வைகோ மற்றும் நல்லகண்ணுவால் இதன் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் ஒரு நினைவுத்தூணாக மட்டுமே அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழர் நினைவிடங்களுக்கு நிகழ்ந்த அவலங்களால், தமிழர்கள் அதிகளவில் அழிக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டுப் போரின் நினைவுச் சின்னமாக இது உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது.[7]

உலகத் தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டப்பணி, பேரவை மற்றும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ நெடுமாறனின் மேற்பார்வையில் நடந்தது. கட்டுமானத்திற்கான நிதி பல இடங்களிலிருந்து திரட்டப்பட்டது. தமிழ் செயற்பாட்டாளர் ம. நடராசன் நினைவு முற்றத்திற்குத் தேவையான நிலத்தை வழங்கினார்.

திறப்பு விழா[தொகு]

திட்டமிடப்பட்ட நாளுக்கு இரு நாட்களுக்கு முன்னதாக, 2013 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் திகதியன்று இம்முற்றம் திறந்து வைக்கப்பட்டது. நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), வைகோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்) தமிழ்த் தேசியப் போியக்க தலைவரும் தமிழ்த்தேசிய தமிழா் கண்ணோட்டத்தின் ஆசிாியருமான தோழா் பெ. மணியரசன், சீமான் (திரைப்பட இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்), சு. ப. உதயகுமார் (கூடங்குளம் செயற்பாட்டாளர்) மற்றும் பொன் இராதாகிருஷ்ணன் (பிஜேபி) போன்ற தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.[8][9][10]

அமைவிடம்[தொகு]

முள்ளி வாய்க்கால் முற்ற வளாகம் தஞ்சாவூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளார் கிராமத்தில் 1.75 ஏக்கர் பரப்பளவில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையோரம் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து விளார் செல்லும் பேருந்துகள் மூலம் இவ்விடத்தை அடையலாம். தஞ்சாவூரின் அண்ணாநகர் சந்தையிலிருந்தும் இந் நினைவு முற்றத்திற்கு எளிதாகச் செல்லலாம்.

ஐந்தாமாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள்[தொகு]

மே 18, 2014 அன்று இந்த முற்றத்தில் முள்ளிவாய்க்கால் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டார். முற்றத்தில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் அஸ்திக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது [11][12].

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101023_vanniwoundedlady.shtml
 2. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8030605.stm
 3. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று அவசர அவசரமாகத் திறப்பு தினமணி
 4. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது - படத்தொகுப்பு பி பி சி
 5. http://tamil.oneindia.in/news/tamilnadu/vaiko-calls-to-the-unveiling-mullivaikal-mutram-186466.html
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-11-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-01 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Pro-Tamil leaders Inaugurate Mullivaikal Memorial Museum". Salem-News. 6 November 2013. 19 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Pro-Tamil leaders inaugurate Mullivaikal memorial even as police wait to challenge court order". The Times of India. Times of India. 6 November 2013. 13 நவம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Mullivaikal memorial inaugurated today in a hurry". Sathiyam TV. Sathiyam TV. 6 November 2013. 13 நவம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 10. "A monument to remember the Eelam war". The Times of India. The Times of India. 5 November 2013. 19 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 11. "இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களை பழைய இடத்திலேயே குடியமர்த்த வேண்டும்: பழ.நெடுமாறன் பேட்டி". தினமணி. தினமணி. 19 May 2014. 20 May 2014 அன்று பார்க்கப்பட்டது.
 12. "உலகில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் பழ.நெடுமாறன் பேட்டி". தினத்தந்தி. தினத்தந்தி. 20 May 2014. 20 May 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]