மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மயிலாடுதுறை |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஐயாறப்பர் |
தாயார்: | அறம் வளர்த்த நாயகி |
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோயில் ஆகும். திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள பெருமானுக்கு உள்ளதைப்போல இங்குள்ள பெருமானுக்கும் ஐயாறப்பர் என்ற பெயர் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் இக் கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
[தொகு]இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஐயாறப்பர். இறைவி அறம் வளர்த்த நாயகி.
தோரண வாயில்
[தொகு]2010 ஆம் ஆண்டில், இக் கோயில் முகப்பில் புதியத் தோரண வாயில் அமைக்கப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனத்தால் திறந்துவைக்கப்பட்டது.[1]
மயிலாடுதுறை சப்தஸ்தானம்
[தொகு]மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:
- மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்
- கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
- மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்
- சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்
- துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
- சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[2].