திருவாவடுதுறை ஆதீனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவாவடுதுறை ஆதீனம்
திருவாவடுதுறை ஆதீன தலைமையிடம்
நிறுவனர்நமசிவாய மூர்த்திகள்
அமைவிடம்
முதல் ஆதீனம்
நமசிவாய மூர்த்திகள்
தற்போதைய ஆதீனம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்
சார்புகள்ஹிந்து மதம், சைவம்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தென் இந்தியாவிலுள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் திருவாலங்காட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் ஸ்ரீ மெய்கண்டாரின் வழிவழி சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கி.பி. 14- நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர், அருள் நமசிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.[1]

கிளைகள்[தொகு]

திருநெல்வேலி, கன்னியாகுமரி,திருவெண்ணெய்நல்லூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருநள்ளாறு, இராமேசுவரம், மதுரை, திருச்செந்தூர், மற்றும் காசி, காளஹஸ்தி உட்பட 50-இக்கும் மேற்பட்ட இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளன.

கோயில்கள்[தொகு]

திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் சிறியதும் பெரியதுமாக ஏறத்தாழ 75 கோவில்கள் உள்ளன. அவற்றில் சில கோவில்கள் மட்டும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது[2].

தமிழ்நூல்கள் மற்றும் நூலகம்[தொகு]

இந்த ஆதீனம் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்நூல்களை வெளியிட்டும், மறுபதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது, திருக்குறளை முதன்முதலில் அடி, சீர் அமைத்து வெளியிடப்பட்டது, திருவாவடுதுறை ஆதீன சரஸ்வதி மகால் நூலகத்தில் சைவம், வைத்தியம், இலக்கணம், நாடகம், புராணம் எனப் பலதுறை சார்ந்த வேறெங்கும் காணக் கிடைக்காத அரிய பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 23-ஆவது குருமகாசந்நிதானத்தின் ஒப்புதலின் பேரில், சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளின் மறுவடிவ பாதுகாப்பும் புகைப்படம் எடுத்தலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தாரால் மேற்கொள்ளப்பட்டது.[3]

குருமகா சந்நிதானம்[தொகு]

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் முதல் குரு மகா சந்நிதானம் திருவாவடுதுறை ஆதீனத்தைத் தோற்றுவித்த அருள்திரு நமசிவாயமூர்த்திகள் ஆவார்.[1]

24 வது ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்
எண் குருமகாசந்நிதானங்கள் குறிப்பு
1 ஸ்ரீலஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் ஆதின நிறுவனர், குரு முதல்வர்
2 ஸ்ரீலஸ்ரீ மறைஞான தேசிகர்
3 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பண்டார சாத்திர நூல்களில் 10 நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை
4 ஸ்ரீலஸ்ரீ உருத்திரகோடி தேசிகர்
5 ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர்
6 ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர்
7 ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தேசிகர் காலம் 1622-1625
8 ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் காலம் 1625-1658
9 ஸ்ரீலஸ்ரீ இராமலிங்க தேசிகர் காலம் 1658-1678
10 ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் காலம் 1678-1700
11 ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகர் காலம் 1700-1730
12 ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் காலம் 1730-1770
13 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் காலம் 1770-1789
14 ஸ்ரீலஸ்ரீ வேளூர் சுப்பிரமணிய தேசிகர் காலம் 1789-1845
15 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் காலம் 1845-1869
16 ஸ்ரீலஸ்ரீ மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் காலம் 1869- 1888
17 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் காலம் 07-01-1888 - 15-04-1920
18 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலம் 15-04-1920 - 05-02-1922
19 ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் காலம் 05-02-1922 - 1937
20 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் காலம் 1937 - 13-04-1951
21 ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலம் 13-04-1951 - 23-09-1967
22 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் காலம் 23-09-1967 - 07-04-1983
23 ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் காலம் 07-04-1983 - 23-11-2012
24 ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் காலம் 23-11-2012 - தற்பொழுது வரை

திருவாவடுதுறை ஆதீனத்தின் 23-ஆவது குருமகாசன்னிதானமாக 25 ஆண்டுகளாய் விளங்கியவர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். 2012-ஆம் ஆண்டு நவம்பர் 21 தேதியன்று அன்று இச்சுவாமிகள் முக்தி அடைந்தார். திருவிடைமருதூர் கோவில் கட்டளைத் தம்பிரானாக இருந்த மீனாட்சிசுந்தர தம்பிரான்(பெரிய பூசை தம்பிரான்) சுவாமிகள் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பண்டார சந்நிதிகள் என்ற பெயருடன் 24-ஆவது குருமகாசந்நிதானமாகப் பட்டமேற்றார்.[4]

(சில சமயங்களில் ஊடகங்களினால் பீடாதிபதி/மடாதிபதி பதவியும், உயர்வாக ஆதீனம் என்று வேறுபாடின்றி ஒரேபெயரால் பெருமையுடன் அழைக்கப்படுகின்றார்கள்.)

இந்தியா சுதந்திரம் பெற்ற நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு[தொகு]

இந்திய சுதந்திரத்தன்றுதிருவாவடுதுறை ஆதீனம் 20ஆவது குருமூர்த்திகள் நேரு அவர்களுக்கு செங்கோலுடன் சேர்த்து கொடுத்த மடல்.

ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்த என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.

முற்காலத்தில் மன்னர்கள் முடிசூடும் பொழுது ராஜகுருவாக இருப்பவர், செங்கோல் ஒன்றை மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார். அதையே கடைபிடிக்க மூதறிஞர் ராஜாஜியிடம் யோசனை கூறினார். ராஜகுருவாக இருந்து இந்த நடைமுறையை செய்துதர அப்போதைய திருவாவடுதுறை மடத்தின் 20வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிககளை தொடர்பு கொண்டார் ராஜாஜி.

ராஜாஜியின் வேண்டுகோள் படி ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை இளைய தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்றார். செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவா மூர்த்திகள், வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் என்கிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை திரு. நேருவிடம் வழங்கி இந்தியா சுதந்திரம் பெற்றதை அடையாளப்படுத்தினார்.

திரு.நேரு அவர்கள் சுதந்திர உரையாற்றுவதற்கு முன் ஆதீன நாதஸ்வர வித்வான் டி.என். இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் மங்கள வாத்திய வாசித்தார் [5]

திருவாவடுதுறை ஆதீன ஆசிரியர்கள்[தொகு]

ஆதீனத்தின் புகழ் பெற்ற மாணவர்கள்[தொகு]

கருவிநூல்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 குமுதம் ஜோதிடம்; 10.05.2013; திருமூலர் திருமந்திரம் தந்தருளிய திருவாவடுதுறை திருத்தலம்
  2. திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆன்மீகப் புரட்சி!
  3. "மின்னணுச் சுவடிகள், பாரதிதாசன் பல்கலைக்கழகம்". 2014-09-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-24 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. திருவாவடுதுறை ஆதீனம் காலமானார் தினமணி நவம்பர் 23, 2012.
  5. "சுதந்திரச் செங்கோல்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements". www.dinamalar.com. 2022-08-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  • [சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையங்கள்] உலகலாவிய..
  • [திருமுறை நேர்முக பயிற்சி மையங்கள்] உலகலாவிய..